அழகு மாறா விழிகள் | Alaku maara vilizhikal
![]() |
Alaku vilikal |
அறிவியல் ஆர்வம் இல்லை
ஆர்வம் இருந்திருந்தால்
என்றோ சொல்லியிருப்பேன்
கருப்பு வானவில் உன் புருவம் என்று!
விழிகளின் கவசமாய் இமை முடிகள்
உன் விழி கூர் ஆயுதமாய் இருக்க
எதிர் பார்வை சுடத் துடித்தேன்
என் கவசங்களோ வெற்று முடிகளாய்!
இயல்பிலே விழியோரம் கண்மை கொண்டு
அழகு தேவதையாய் பூமியில் பிறந்தவள்
கண்மைக்கு உன் விழியோரம் வேலை இல்லை
இயல்பாய் வசியமாய் வசிய மை கூடுதல் சிறப்பு!
புவி ஈர்ப்பு விசையையும் ஏமாற்றி
உன் விழி ஈர்ப்பு விசையால்
புவியில் விழுந்தது நிலவு என்று
அறிவியலும் வரலாறும் நாளை மாறும்!
என்றும் அழகு மாறா உன் விழிகளுக்கு சமர்ப்பணம்!