மழை - உனக்கே உயிரானேன் - ஹைக்கூ கவிதை

மழை


வெள்ளை காகிதமாகத்தான்
நானும் பிறந்தேன்

என்னில் நான் எழுதிக்கொண்ட தவறான பக்கங்களை
உன்னில் நனைந்தே அழித்துவிடுவேன்

ஏனெனில்
நீ ஒரு ஈரமான கவிதை.

உனக்கே உயிரானேன்

ஆயிரம் இதயம் உன்னை நேசிக்கலாம்
ஆயிரம் இதயத்தை நீ நேசிக்கலாம்
ஆனால் நான் உன்னை நேசிப்பது போல்
எந்த இதயமும் உன்னை நேசிக்காது

ஹைக்கூ கவிதை

இந்தியத் தாயின்
இறுதிக் கண்ணீர்த்துளி....

இலங்கை

------

சொந்தமண்ணிலிருந்து
துரத்தப்பட்ட அகதி
துடுப்பற்ற பரிசல்

பிறைநிலா

தாஜ்மஹால்

என் இதயம் ஒரு தாஜ்மஹால் ..
அதில் நீ இருந்தால் அது ஒரு காதல் சின்னம்
அதில் நீ இல்லாவிட்டால் அது ஒரு சமாதி

இதயம்

உன்னை என் இதயம் என்று சொல்லமாட்டேன்
ஏன் என்றால்....
நீ துடித்து நான் உயிர் வாழ விரும்பவில்லை...

உன்னக்காக

என்னை சுமந்து கொண்டிருக்கும்
உன்னக்காக...
துடித்து கொண்டே இருப்பேன் என் " ஆயுள் " முழுதும் .....
- இப்படிக்கு
இதயம்

ஒரு பார்வை பார் ஒரே பார்வை பார்

ஒரு பார்வை பார் ஒரே பார்வை பார்
நெஞ்சு பூப்பூத்தாலும் பூக்கட்டும்
கடும் தீப்பிடித்தாலும் பிடிக்கட்டும்
ஒரு புன்னகை செய் ஒரே புன்னகை செய்
உயிர் வாழ்வதாயினும் வாழட்டும்
இல்லை சாவதாயினும் சாகட்டும்

தாய்மையின் வலி

தாய்மையின் வலி என்னவென்று
எனக்கும் தெரியும்...
அதனால் தான்
அவளோடு சேர்ந்து நானும் அழுதேன்...
அன்று நான் பிறந்த போது...

அன்பென்ற மழை

உன் அன்பென்ற மழையில் நனையலாம்
என்று எண்ணினேன்
எங்கே நனைந்தால் சிறிது நாழிகையில் பிரிந்து விடுவாயோ என அஞ்சி
உன் அன்பில் கரைந்தே போனேன் ....

வந்தே மாதரம் என்போம்

வந்தே மாதரம் என்போம் - எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம். (வந்தே)

சரணங்கள்

ஜாதி மதங்களைப் பாரோம் - உயர்
ஜன்மம் இத் தேசத்தில் எய்தின ராயின்
வேதிய ராயினும் ஒன்றே - அன்றி
வேறு குலத்தின ராயினும் ஒன்றே (வந்தே) 1


ஈனப் பறையர்க ளேனும் அவர்
எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ?
சீனத்த ராய்விடு வாரோ? - பிற
தேசத்தர் போற்பல தீங்கிழைப் பாரோ? (வந்தே) 2


ஆயிரம் உண்டிங்கு ஜாதி - எனில்
அன்னியர் வந்து புகல் என்ன நீதி? - ஓர்
தாயின் வயிற்றில் பிறந்தோர் - தம்முள்
சண்டைசெய் தாலும் சகோதரர் அன்றோ? (வந்தே) 3


ஒன்று பட்டால் உண்டு வாழ்வே - நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த
ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்? (வந்தே) 4


எப்பதம் வாய்த்திடு மேனும் - நம்மில்
யாவர்க்கும் அந்த நிலைபொது வாகும்
முப்பது கோடியும் வாழ்வோம் - வீழில்
முப்பது கோடி முழுமையும் வீழ்வோம் (வந்தே) 5


புல்லடி மைத்தொழில் பேணிப் - பண்டு
போயின நாட்களுக் கினிமனம் நாணித்
தொல்லை இகழ்ச்சிகள் தீர - இந்தத்
தொண்டு நிலைமையைத் தூவென்று தள்ளி (வந்தே) 6

எங்கே???

நீயோ அங்கே..
நானோ இங்கே..
இருவர் மனமும் எங்கே???

உன்னோடு

இனிமேல் உன்னோடு
பேச முடியாது
என்றாகும் - நாளில்
என்னவெல்லாம்
பெசிகொண்டிருபேனோ
உன்னோடு ???

அழகு அவள் அது

அழகாக இருக்கும் பொருட்கள் எல்லாம் அவளை நினைவுபடுத்துகின்றன

இல்லையில்லை

அவளை நினைவுபடுத்தும் பொருட்கள் எல்லாம்
அழகாகத் தெரிகின்றன

ஹைக்கூ கவிதை

அவளும் நோக்கினாள்
அண்ணலும் நோக்கினாள்

வந்தது

மெட்ராஸ் ஐ

ஒற்றை முத்தம்

SMS ல் கூட
ஒற்றை முத்தத்தை
தர மறுக்கும்
உன் திமிரை விடவா
அழகிய கவிதையை
எழுதிவிடப் போகிறேன்???

பகல் மட்டும்

பனி விழும் இரவைக் கூட
பகலாக்கத் துணிந்தேன்!
பகலில் தானே உன்னை
பார்த்துக் கொண்டிருக்க முடிகிறது!

ஒற்றை முத்தம்

நான் தூங்கிவிட்டதாய்
நினைத்துக்கொண்டு,
என் நெற்றிப்பொட்டில்
நீ தந்துவிட்டுப் போகும்
ஒற்றை முத்தத்தில்
தெரிந்துகொண்டேன்.
என் மீதான உன் காதலின் அளவை

நீங்குதல்...

ஒரு புன்னகையைகொல்வது போல்
ஒரு தவிர்த்தலை எதிர்கொள்வது போல்
ஒரு உறவை முறிப்பது போல்
கொடூரமானதும் துயரமானதும்
வேதனையானதும்தான்இந்த...

காதல்

கனவுகளால் ஆனது காதல்
அது வருவதும் போவதும் ஏனோ ?
கண்களில் வழிகின்ற கண்ணீர்
என் மனம் கனமகியது ஏனோ

விடை தேடி அலைகின்றேன்

கண்ணீருக்குச் சொந்தம் இன்று நான்.
கரை கண்டு முடிப்பேனோ என்றும் நான்.
என் வாழ்வில் வந்த துன்பம்
சொந்த வாழ்க்கையில் இடையூர் ஆகுமோ...
விடை தேடி அலைகின்றேன்
விடிவொன்று கிடைக்குமோ....!

Post a Comment (0)
Previous Post Next Post