கனவிலே வந்த தேவதை...!
கனவு என்பது அனைவருக்கும் பொது...
எனக்கு அளவில்லாமல் ஊற்றி
கொடுக்கும் மது...!
கனவிலே வந்த உன்னை என்
காதலியாக்குவது எப்போது..!
மனதிலே வந்த உன்னை
என் மனைவியாக்குவது எப்போது...!
தூரத்தில் நின்ற உன்னை
என் துணைவியாக்குவது எப்போது...!
உன்னை தான்
கனவிலே வந்த தேவதையே...!
காதலிக்கும் போது....!
காற்றையும் கைக்குள்
பிடிக்க முடியும்...
நெருப்பையும் அள்ளி
திங்க முடியும்...
தண்ணீரையும் சல்லடையில்
தேக்க முடியும்...
ஆகாயத்தையும் எட்டி பிடிக்க
முடியும் ...
பூமியையும் தலையால்
சுமக்க முடியும்...
அன்பே... நான் உன்னை
காதலிக்கும் போது....!
உன்னை பற்றிய வர்ணனை...!
படிய வைத்து தலைவாரிய
வகிடு...!
என் மனதில் நீ நடந்த
பாத சுவடு...!
அழகாக தீட்டப்பட்ட புருவம்...!
என்னில் அழியாமல் நிற்கிறது
உன் உருவம்...!
வெண்ணிலவில் கறை போன்ற
உன் கண்கள்...!
நெய்யிலே செய்யப்பட்ட
சர்க்கரைப்பொங்கல்...!
காதலிகளே...!
சுனாமியவது ஒருமுறை தான்
வந்தது...
உங்களின் பார்வையினால்
ஆண்களுக்கோ பல முறை வருகுது...!
தீப்பாறையும் உங்கள் சுனாமி
பார்வையினால் அணையுது..!
வேண்டாம் இந்த பார்வை
பார்க்கும் பாவைகளே...!
உங்களால் நாங்களெல்லாம்
ஆனோம் ஊமைகளே...!
பல்லாயிரம் கோடி...!
பல்லாயிரம் கோடி ஆண்டு வாழ்க்கை
தந்தாலும் வேண்டாம்...
என் காதல் உனக்கு தெரிய வரும்
அந்த ஓர் நொடி போதும்...!
ஆயிரக்கணக்கான அறைகள் வேண்டாம்
நான் தங்க...
வேண்டும் உன் இதயம் என்னும் அறையில்
கண் மூடி நான் தூங்க...!
தினமும் வைக்கிறாய் ஏங்க...!
என் இதயத்தை உன்னிடமிருந்து முடியவில்லை
திருப்பி வாங்க...!
விட்டு விடு பெண்ணே...!
விட்டு விடு பெண்ணே...!
என்னை..!
இதயத்திலிருந்து அழித்துவிடுகிறேன்
உன்னை..!
வாய்ப்பேச்சில் வெல்ல முடியாது
என்னை..!
மறந்து விடுவேன் மனதில் இருந்து
உன்னை...!
மீட்க முடியவில்லை அந்த வலியிலிருந்து
என்னை...!
நினைத்து பார்க்கமாட்டேன் இனி
உன்னை...!
உன் நினைவிலிருந்து அழித்து விடு
என்னை..! பெண்ணே..!..!..!
எல்லாமே நீ...!
வானிலே பறக்கும் வெண்புறாவும் நீ ..
என்னை விழுங்கும் காதல் சுறாவும் நீ...
என் வாழ்வின் அர்த்தத்தை விளக்கியவளும் நீ...
என் காதலின் சோகத்தை விளக்கியவளும் நீ...
என் துன்பத்தை இன்பமாக்கியவளும் நீ...
என் இன்பத்தை துன்பமாக்கியவளும் நீ...
என் கனவில் வந்த தேவதையும் நீ...
என் கண்களுக்கு ஒளியும் நீ...
என் காதலுக்கு வழியும் நீ...
மொத்தத்தில் எனக்கு
எல்லாமே நீ...!நீ..நீ...நீ...
நினைவுகள்
கண்கள் செய்யும்
தவறுக்கு
இதயம்
சுமக்கிறது
கருவாய்
உன் நினைவுகளை !
வறுமை
பெண்ணே...!
நீ சிரித்தால்
முத்து உதிருமாம்...!
எனக்காக ஒரே ஒரு முறைமட்டும்
சிறியேன்...!
நான் வறுமையில்
இருக்கிறேன்........
அடடே
நான்
இதயத்தில்
எழுதிய தப்பான
கவிதை
அவள் பெயர்...!
என் நெஞ்சம்
அன்பே !
நீ நாணத்தில் தான்
நகம் கடிக்கிறாய் என்று
என் அறிவு சொன்னாலும் உனக்கு
பசிக்கிறதோ என்று
பதைக்கிறது என் நெஞ்சம் !
நட்பு
பார்த்துக் கொள்வதும்
பேசிக் கொள்வதும்
நட்பாகாது !
நான் உன்னை
பாத்துக் கொள்ளாமலும்
நீ என்னிடம்
பேசிக் கொள்ளாமலும்
நினைவுகளை
மட்டுமே
சுமந்து கொண்டிருப்பதுதான்
நட்பு !
கோலம்
பெண்ணே !
உன் வீட்டு வாசலில்
இடம் இல்லையா என்ன ?
ஏனடி போட்டாய்
என் இதயத்தில்
காதல் கோலம் !
காலத்தை வென்ற கவியரசு
கவியுலகின் காவிய மன்னன்
கவிஞர்களின் பாசமிகு அண்ணன்
கார்மேக மழையாக மனம்திறந்து
கவி பொழியும் நாயகன்!
இயற்கையை அள்ளி ரசிப்பார்
இறைபெயரை சொல்லி படிப்பார்
கற்பனையில் துள்ளிக் குதிப்பார்
காவியம் நொடியில் முடிப்பார்!
மதுவை கொஞ்சம் சுவைப்பார்
மயிலின் தோகையில் கிடப்பார்
மல்லிகை மணத்தை முகர்வார்
மயக்கத்தின் தத்துவம் சமைப்பார்!
பட்டியை ஊதி மகிழ்வார்
பாட்டு மெட்டுகளில் மிதப்பார்
குறுநடை போட்டு சிந்திப்பார்
குள்ளநரி கூட்டத்தை நிந்திப்பார்!
(இந்த கவிதை கண்ணதாசன் நினைவு கவிதை போட்டியில் "தினச்சுடர்" நாளிதழில் வெளியிடப்பட்டது.)
என்னோடு நீ இருந்தால்...
அன்பே..! ஆறுதல் கூற
நீயிருந்தால்- நான்
அழுது கொண்டேயிருப்பேன்!
தலைக்கோதி உச்சந்தலை
முத்தமிட நீயிருந்தால்
துன்பத்தில் வாடிக்கொண்டேயிருப்பேன்!
தாலாட்டில் தாயாய்
தனிமையில் கணிகையாய்
தடியூன்றுகையில் சேவகியாய்
நீயிருந்தால்-பிறந்து,பிறந்து
மரணத்தை முத்தமிடுவேன்!
மொட்டுவிட்ட காதல்..
கடல் மேல் எழுந்த மின்னல் போல்-அவள்
கண்ணொளி பாய்ச்சிவிட்டாள்
காதலில் விழுந்துவிட்டேன் -வேறு
காரியங்கள் ஓடவில்லை
கன்னி மனதில் இடம் பிடிக்க
கண்கள் நித்திரை கொள்ளவில்லை
பல யோசனை செய்து வந்தேன்
கட்டி கரும்புசுவை கவிதை வரைந்து
அவளிடம் காணிக்கை என்றேன்
மெத்த ஒருபார்வை எனை பார்த்து
கவிதை எனக்கா என்றாள்
மேனியில் மின்சாரம் பாய்ந்தவன் போல்
வாய் குளறி "ஆம்" என்றேன்
மனதில் சிலவரி படித்து மறுபார்வை
எனை பார்த்தாள்- அந்த காந்த பார்வையிலே
அவள் ஆவி தழுவிவிட்டேன்
மாதுளை வாய்திறந்து ஓர் வார்த்தை
மீண்டும் கலப்போம் என்றாள்!
சிந்தை பித்தேறியதனால் எங்கே! எப்போது
என்று வினவ மறந்துவிட்டேன்........
நாள்தோறும் காத்திருந்து அவள்
நிழல்மட்டும் பார்த்திருந்தேன்
நிஜரூபம் வரவில்லை- நிம்மதி
இழந்துவிட்டேன்.
அவள் மேல் உள்ள காதலை காவியமாக்கி
கற்பனையில் கலந்திருந்தேன்
காரிகை தரிசனம் மீண்டும் கிடைக்கும்வரை
கவிதைகள் கோர்த்திருந்தேன்
ஈங்கிவள் நினைவில் உடலம்
சோர்ந்துவிட்டேன் - உணவும் மறந்துவிட்டேன்
அவளை கனவில் வரவழைத்து காதல் பேசினேன்
காதோரம் காதலை சொல்லி இலக்கியம் படைத்துவிட்டேன்!
கண்கள் இமை திறந்ததும் காட்சிகள் ஏதுமில்லை
பெரும் கவலையை சுமந்துகொண்டேன்
பெண்ணே கண்ணே பொன்னொளியே
கனவின் வியனுருவே உனை காண்பேனோ
கானல் நீர் ஆவேனோ என் ஏக்கம் தீர்ப்பாளோ
என்று பசுமையாய் அவள் நினைவை மனதில் தேக்கி வைத்தேன்!
காதலும் மாறவில்லை - பல
காலங்கள் கடத்திவிட்டேன் - ஓர்தினம்
இயற்கையுடன் பேச சோலை சென்றேன்
அங்கு பாடும் குயிலும் பூவை மொய்க்கும் வண்டுகள் போல்
சிறுவர் கூட்டமும் காதலர் கூட்டமும் இருந்தனர்
ஆங்கொரு ஏந்திழையாள் கையில் குழந்தையுடன்
மழலையாடக் கண்டேன்!
மின்வெட்டு, கண்வெட்டு பொன்வெட்டு எல்லாம்
என் காதலியை ஒத்திருக்க கண்துடைத்து
மீண்டும் பார்த்தேன்! பார்த்தேன்! பார்த்தேன்
பார்ப்பேனோ என்றிருந்தவளை பார்த்தேன்
அவள் துணைவனுடனும் மழலையுடனும் பார்த்தேன்
நின்ற இடத்தில் சுழன்றது இவ்வுலகம் நிலைதடுமாறினேன்
என் இதயத்தை இழுத்து வைத்து அறுத்தாற்போன்று
உணர்வுகொண்டேன்
அழகு பெட்டகம், பெண் தெய்வம்
இதயராணி காதல் இளவரசி தன் தலைவனுடன்
சோலைவிட்டு நீங்கினாள்
அந்த காதல் பொற்சிலையை
கவிதையிலே வடித்தேன்
காதல் காதல் காதல் காதற்போயின்
சாதல் சாதல் சாதல் என்ற
மகாகவியின் வரிகளை படித்தேன்.
தோல்வி
தூரமென தெரிந்து
ஓட மறுத்தாய் !
உயரமென தெரிந்து
ஏற மறுத்தாய் !
அனால்
தோல்வி தான்
கிடைக்குமென தெரிந்தும்
காதலிக்கிறாயே.
அது எப்படி ?
சுனாமி
கடற்கரையில்
நான் உனக்காக
காத்திருந்த போது
நீ
வராத கோபத்தில்
வந்தது சுனாமி !
பிடிக்கவில்லை
உன்னையும்
எல்லோருக்கும் பிடிக்கும்
என்னையும்
எல்லோருக்கும் பிடிக்கும்
எங்களை தான் யாவருக்குமே
பிடிக்கவில்லை !
பூங்கொத்து
நான் கண்ட முத்து !
என் நெஞ்சில் பூத்து !
தினம் கனவில் வந்து !
நிற்கிறாள் கை கோர்த்து !
அவளே என் பூங்கொத்து !