சிறகு - மழை - குடை

சிறகு

பறப்பதற்கு சிறகு தேவையில்லை
நீயும்
காதலும் போதும் !

மழை

ஓடாதே !
நின்றுவிடபோகிறது
மழை !

குடை

எப்போதும் உன்கையில் குடை
மழைக்கா....... வெயிலுக்கா......
இல்லை
வெட்கத்தை மறைக்கவா...!

பைத்தியமா

உனக்கென்ன பைத்தியமா...?
தேவையிலாமல் உதட்டு சாயத்தை
அழகுபடுதுகிராயே...!

என் மனதை

பூக்களை பறிக்க வந்த
பெண்ணே
என் மனதை மட்டும்
ஒடித்துவிடாயே...!

நட்சத்திரம்

நிலவை
காதலிக்கும்
எத்தனையோ
நட்சத்திரங்களில்
நானும் ஒரு
நட்சத்திரம் !

சிலப்பதிகாரம்

கனலை விழிகளில் மூட்டி-தன்
கற்பு நிலைகாட்டிய பெருமாட்டி
மாதர்குலப் பெருமை நிலைநாட்டிய
மங்கைப் பெருந்தெய்வமே போற்றி!

கண்களில் கருணையுடன் கண்ணகித் தாய்
தன்னையே பொன்னென குணத்தீபமென
பொறுமை அணியென அறமே ஆடையென
போற்றி வாழ்ந்த பொன்னரசி புகழ் வாழ்க!

சிலம்பிலுள்ள மாணிக்கப் பரல்களைப் போல்
சீரியத் தமிழில் கவிக்கோமான் இளங்கோவும்
சிலப்பதிகாரம் காப்பியம் தந்தான் -அதில்
செங்கோலேந்தும் அரசர்க்கு நீதி சொன்னான்!

விரிந்த ஆழிக்குள் மூழ்கி-அந்த
அகண்ட வானத்தில் பறந்து மிதந்து
கற்பனை நுலால் கவிமலர் கோர்த்தான்
காவியம் சமைத்தான் வாழ்க!

தீ

மெழுகாய் நான்
திரியாய் என் காதல்
தீயாய் நீ
எரிவது
நான் மட்டுமல்ல
எனக்குள் இருக்கும்
நீயும் தான்...!

சிறகு சேர்

இணைந்து பறப்போம்
நம்பிக்கை சிறகு சேர்
வானமே எல்லை.......!

உன் வாழ்க்கையில் இல்லை...!

கழுத்துக்கு கீழே
காதலி என்றும்...!
கண்ணுக்கு மேலே
கடவுள் என்றும்...!
நினை...!
தவறு என்பது
உன் வாழ்க்கையில் இல்லை...!

துன்பத்தை தொலைத்தேன்

இன்பத்தை தொலைத்தேன்
நான் உன்னை காதலிக்கும்
போது!
துன்பத்தை தொலைத்தேன்
நீ
என்னை காதலிக்கும்
போது !

நிலவை

எட்டாத உயரத்தில் இருக்கும்
நிலவை
ஏக்கத்தோடு பார்க்கும்
பைத்தியக்காரன் நான் !

அம்மா....!

அம்மா....!
அன்று நம் தொப்புள் கொடியை
அறுத்தது நம் உறவை பிரிக்க
அல்ல
அது நம் பாசத்தின் தொடக்கத்திற்கு
வெட்டப்பட்ட ரிப்பன்....!

நேசிப்பது நிஜம் என்றால்

ஒரு உயிரை நீ நேசிப்பது நிஜம் என்றால்
அதை பறவை போல் பறக்க விடு !
அது உன்னை நேசிப்பது நிஜம் என்றால்
மீண்டும் உன்னை தேடிவரும் !

வேறு எவடி...!

உன் கண்களால் என் மனதில்
ஆடுகிறாய் கபடி...!
உன்னை தவிர என் மனதில்
வேறு எவடி...!
மறக்க முடியவில்லை நீ அடித்த
செல்ல அடி...!
அது என் மனதை கொள்ளையடித்த
கள்ள அடி...!
கள்ளியே நீ ஒரு மகா வில்லியே...!

கலைக்க முடியாத மேகம்...!

அமுதம் சாப்பிட்டாலும் அடங்காது
நீ கொடுத்த பசி...!

சமுத்திரத்தை குடித்தாலும் தீராது
நீ கொடுத்த தாகம்...!

உன் மீது எனக்கு
அளவு கடந்த மோகம்...!

அது கற்றாலும் கலைக்க முடியாத
வான் மேகம்...!

புன்முறுவலில்

பல நாட்கள்
முயற்சி செய்து
என்னை
சிறிது சிறிதாக்
சேர்த்து
வைத்துருபேன்
எதிரில் வந்த
உன் சில
வினாடி புன்முறுவலில்
என்னை
களைத்துப் போய்விடுகிறாய் !

கால்தடுக்கி விழுந்தேன்

கடல்கரையோரம்
காலாற நடந்தேன்
கால்தடுக்கி விழுந்தேன்
காரணம் ஒரு பூ ...!
ஓ..!
பெண்ணே நான் கொடுத்த பூ
நீ கசக்கி எறிந்து
கல்லாய் மாறியதால்...!

வளர்ந்து கொண்டே இருக்கிறாய்...!

மண்ணில் விழுந்த மழைத்துளி கூட
கரைகிறது...!
நீ என்னில் விழுந்த அந்த நொடி
இன்னும் கரையவில்லை...!
வான் நிலா கூட பதினைந்து நாள்
தேய்கிறது...!
நீ என் மனதில் முப்பது நாளும்
வளர்ந்து கொண்டே இருக்கிறாய்...!
செல்லமே...!

பார்வை உனது...!

பூக்களிலுள்ள பனித்துளி கூட
சூரியன் பட்டதும் ஜொலிக்க...!
நீ என் மனதில் வந்ததும்
என்னவோ வலிக்க...!
வான் மேகம் போல் அது
என் நெஞ்சிலே இடிக்க...!
காற்றிலே என் மனம்
பஞ்சாய் வெடிக்க...!
தங்காமல் தங்குகிறது
என் மனது...!
அதை தாங்க தேவையான
பார்வை உனது...!

Post a Comment (0)
Previous Post Next Post