அடடே ! - காதல் மழை - உன்னை மறக்க

அடடே !

அடடே !
எனக்கா இப்படி
ஒரே சமயத்தில்
இரு நிலவு
ஒன்று ஆகாயத்தில்
மற்றொன்று பூலோகத்தில்
என் அருகில்
என்ன செய்ய ?
காதலியே !

காதல் மழை

மழை வந்தால் பூமி நினையும்
ஒளி வந்தால் இருள் அகலும்
அனால்
நீ வந்தால் நான் நினைவேன்
காதல் மழையில்...!

உன்னை மறக்க

உன்னை மறக்க நினைத்தால் கூட
உன்னையே நினைக்க வேண்டி
இருக்கிறது
இது தான் காதலா !

துணை இன்றி

துனிந்த என் காதல்
துணை இன்றி கல்லறையில்

பிரியம்

என் பாசம்
புரியாதவர்களுக்கு புரியும்
இந்த உயிர் மறையும் போது
அந்த பிரியம்
என் வாழ்வின் அர்த்தம்
புரியும்
நான் உன்னை விட்டு
பிரியும் போது !

காதல் கல்லறை

அந்த தாஜ் மஹால் காதலுக்காக
கட்டப்பட்டது !
என் காதல் கல்லறைக்காக
கட்டப்பட்டது !

என் இதயம்

இரத்தமும் சதையும்
கொண்ட என் இதயம்
அனால் துடிப்பது
பாசத்தால் !

மறந்துவிடுவேன்

என்றாவது ஒரு நாள் உன்னை
மறந்துவிடுவேன் !
அன்று
காற்று வீசாது .....!
பாவம்
காதல் மரித்துவிடும் !

நியாயம்

என்னடி இது நியாயம் ?
ஏன் இதயத்தை திருடியவள் நீ
தனிமை சிறையில்
தண்டனை பெறுவது நானா ?

தேசிய கொடிக்கு வணக்கம்

தேசத் தந்தை காந்தி என்றும்
நினைவில் வையுங்கள்
உயர்ந்து பறக்கும் கொடிக்கு நிமிர்ந்து
வணக்கஞ் சொல்லுங்கள்!
அன்னை மண்ணை அள்ளியெடுத்து
நெற்றியில் அணிந்திடுங்கள்
சோம்பலை ஒழித்து சோர்வை விலக்கி
நாட்டுக்கு உழைத்திடுங்கள்!
ஓர் தாயின் வயிற்றில் பிறந்தோம்
நமக்குள் சண்டை எதற்கு!
வீட்டுக்கு உண்டு வேலி-மனித
மனங்களுக்கிடையில் எதற்கு!
அன்பை கொடுத்து அன்பை பெறுவோம்
அதுதான் மனிதநேயமடா!
பொறுமை காத்து உரிமை பெறுவோம்
அதுதான் அகிம்சையடா!
சாதிச் சண்டைகள் வேண்டாம்-இனி
சமயச் சண்டையும் வேண்டாம்!
ஒன்று பரம்பொருள் காண்பீர்-அதன்
பிள்ளைகள் நாமும் உணர்வீர்!
இந்தியன் என்போம் எதிலும் வெல்வோம்
இந்தியன் என்போம் ஒன்றுபடுவோம்
வந்தேமாதரம் வந்தேமாதரம்
ஒன்றே தாரகமாகும்!

விதியா... சதியா..

கூந்தலில் சிக்குப்போல் ஏழை வாழ்க்கைங்க
சிக்கெடுத்து சீராக்க யாரும் இல்லைங்க
பொதுநலப்பேச்சு மேடையோடப் போச்சு
சுயநல மூச்சு ஒன்றுதான் குறிக்கோளாச்சு!

தேர்தல் நேரம் ஆயிரம்பேர் தேடிவராங்க
உதவி செய்ய ஒருத்தர்கூட முன்வரலைங்க
பணமூட்டை கட்டுறவன் முதலாளி-தன்
பசி வயிரொட்டி சாகிறவன் தொழிலாளி!

வட்டியில் வாழுறான் முதலாளி-அதில்
வாடிமூழ்கித் தவிக்கிறான் தொழிலாளி
பதவிவேண்டி ஏழை கால்களில் விழறான்
பதவி வந்ததும் வயிற்றில் அடிக்கிறான்!

நாட்டுநலம் மக்கள்நலம் அந்தகாலமுங்க
வீட்டுநலம் சுயநலம் இந்தகாலமுங்க
சோதனை எல்லாம் சாதனைக்கென்பது
போதனையன்றி வேறு ஒன்று மில்லைங்க!

வாழுறவன் வாழ்ந்துகிட்டே தான் இருக்கான்
தாழறவன் தாழ்ந்துகிட்டே தான் இருக்கான்
சமத்துவம் வந்தாச்சு என்றும் ஜனநாயகம்
ஜெயிச்சாச்சின்னு கத்தறவன் கத்திக்கிட்டிருக்கான்!

உழைப்பாளி

உழைக்கும் பேரெல்லாம்
மனம் ஊனமாகி நிற்கின்றார்
உழைப்பில் கிடைத்த பொருளெல்லாம்
உயர்ந்தோர் கொள்கின்றார்!

ஒருவன் வாழ ஒருவன் வாட
மனிதன் செய்த விதியிது
தருவான் கூலி இறைவனென
மனிதநேயம் பேசுது!

உழைத்துழைத்து உடல், மனம்
களைத்து நிற்கும் வறியரே!
உரக்கப்பேசி உரிமை கேட்டால்
மலைத்திடுவர் பெரியரே!

உள்ளவெப்பம் ஒன்று திரட்டி
எரிமலையென வெடிப்பீர்!
கள்ளவழி பொருள் சேர்த்த
கயவரெல்லாம் மடிவீர்!

உழைக்கும் வர்க்கம் கூடி
ஒற்றுமையாய் வாழ்வீர்!
உழைத்தகூலி உரிமையென
கேட்டுப் பெற்றுக் கொள்வீர்!

இயற்கையன்னை தந்த செல்வம்
அனைவருக்கும் பொதுவே
இறைவன் படைப்பில்
உயர்வு தாழ்வு இல்லை
உணர்வாய் இதை மனமே!

இந்தியன் என்று சொல்லடா...

பழம்பெரும் பாரதத்தின் -பண்டை
பெருமையையும் நிகழும்
சிறுமையையும் சிந்தித்திருந்தேன்
மூவண்ணச் சேலையுடுத்தி முத்துப்போல்
முகத்தில் புன்னகையேந்திப் பாரதத்தாய்
என்முன் வந்து நின்றாள்
தாயே வணக்கம் என்றேன்
அருளாசி புரிந்தாள்
தங்களைத்தான் மனதில் தியானித்தேன்
செந்தமிழில் அன்னையை பூசித்தேன் என்றேன்.

கருணை வடிவினாள் கனிவான மொழியில்
கவிஞரே! முகத்தில் என்ன வாட்டம் என்றாள்
பாரதம் ஏழையாய் அவதியுறுகிறதே-இதன்
துயர் துடைக்க வழியில்லையோ என்றேன்
தனிவுடைமை கொண்டாடுவதால்
தண்ணீருக்கும் பஞ்சம் இங்கு
பொதுவுடமை ஆக்கிவிட்டால்
தழைத்திடும் தர்மம் நன்கு என்றாள்!

சாதி, மத சண்டைகள் களைவதெப்படி என்றேன்
மன்னனே, ஜ்லம், பானி, தூத்தம்
ஓர்பொருள் தாகம் தீர்ப்பது
ஈசன், அல்லா, இயேசு ஓர்பொருள்
ஜீவன் முக்தி கொடுப்பது
மசூதியில் ராமரை பிரதிஷ்டிப்போம்
சர்வேசன் கோயிலில் இயேசுவை அர்ச்சிப்போம்
மனம் ஒன்றுபட்டால் மதம் ஏது
சிந்தனை ஒன்றானால் சாதியேது என்றாள்

தாயே மற்றுமோர் கேள்வி என்றேன்
பாகுமொழியாள் பகர்வாய் மகனே என்றாள்
எல்லைப்போரில் எண்ணற்ற சகோதரரின்
மரணம் கண்டு மனம் வெடிக்குது தாயே என்றேன்
தாய் மானம்காக்க பகைவர் கையிலிருந்து
என்னை மீட்க உயிர் துறந்தார்
தேசபக்தர், கடமை மறவர்
கடலளவு புகழ்படைத்தார்-உலகில்
நீடுவாழ்வார் என தொடர்ந்தாள்
புலிகள் தமக்குள் சண்டையிட்டாலும்
பகைவர் தாக்க வந்தால் ஒன்றுபட்டு
எதிர்ப்பதுபோல்- நம்மக்களிடையே
ஆயிரம் பூசல்களிருந்தாலும்
நாட்டுக்கு ஆபத்தென்றால் ஒன்றுகூடி மீட்டிடுவார்
காஷ்மீரில் கையளவு நிலம்கூட
அயலவன் அடையமுடியாது கவலைவிடு என்றாள்!
நல்லாசி கூறி விடைபெற்றாள்!

மனம் புது உற்சாகத்தில் பொங்கியது
கையில் எழுதுகோல் எடுத்தேன்
இனிய இந்தியாவை நினைத்தேன்
பாரத பூமி பசுமையான பூமி-இங்கு
நிலையாக தங்கியுள்ளது சாமி
இதன் உயர்வை தினம்பாடு-ஒவ்வொரு
மாநிலமும் இந்தியாவின் புகழேடு
இதன் சிறுமைக்கு வாடு
பெருமைக்கு போராடு- நாம்
பாரத தாயின் வீரத்திருமகன்கள்
இந்தியாவின் இணையற்ற குடிமகன்கள்
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

பழிக்குப் பழி

என்னை காதலித்தவளே
இன்றும்
உன்னை காதலிக்கிறேன் !
பழிக்குப் பழி

தெரியுமா ?

நானும் நீயும்
வெயிலும் மழையும் போல
வேறு வேறல்ல !

சிந்தனை

கண்டும் காணாமல் போகும்
உன் பின்னால் போகும்
எல்லைகளில்லாத என்
சிந்தனை !

முதல் முத்தம்

முதல் மழையை
வானத்தை பார்த்து
நான் ரசிக்க
எதிர்பாராமல் நீ கொடுத்த
அந்த
முதல் முத்தம்
இன்னும் ஈரமாக
என் கன்னத்தில் !

மேகங்கள்

ஏன் அழுகிறாய் ?
நீ தூது விட்ட
மேகங்கள்
பாதி வழியிலேயே
மழையாய்
கரைந்ததற்கா???

கண்ணீர்

மறந்து விட்டாயா ?
என் காதலை சொன்னதும்
நீ அழுததை .......
இன்று நான் மட்டும்
கண்ணீரில் !

வசந்தம்

காத்திருக்கிறேன்
விடியலுக்காக
ஏட்டில்
மட்டுமல்ல வாழ்விலும்
வசந்தம்
வரட்டும்
என்பதற்காக !

Post a Comment (0)
Previous Post Next Post