முடிச்சுக்கள்
எமன் கைகளில்
இருந்தா எறிப்படுறது?
பாசக்கயிறுகளாய்
வீசப்படும் ஒவ்வொரு
முடிச்சிலும்
எனது உணர்வுகள்
இறுக்கப்படுகிறது
வலியில் இருந்து
விலகும் அவசரத்தில்
தொலைந்து போகிறது
எனது சித்தம்
ஒவ்வொரு முடிச்சுகளாய்
மூச்சிரைக்க
அவிழ்க்கும் அறுக்கும்
கணங்களையும்
பயன்படுத்தி
எறியப்படும்
புதிய முடிச்சுக்கள்
அகோரமாய்ச்
சிரிக்கின்றன
வலுவிழந்து தொய்ந்த
என் கைகளில்
விழுந்திழுக்கிறது
ஒரு கொடும்பாறை
என் வளையல்கள்
நொருங்கி
கொட்டிக்கிடக்கிறது
கிழிந்து கழன்ற
என் புடைவைக்கருகில்
அவையள்ளி நிமிர்கையிலே
நிற்கிறாய் நீ
நீ எறிந்த
வார்த்தைக்கயிறுகளும்
மயான அமைதியும்
அறுந்து கிடக்கிறது
எம்மைச்சுற்றி
உன் முகத்தில்
தெறிக்கும்
திருப்தியில்...
எந்த வார்த்தையும்
சிந்திவிடாமல்
உன்னையும் தாண்டி...
பயணப்படும்
எனது வாழ்க்கை...
குற்ற உணர்வுகளை
இனியாவது தொலைக்கட்டும்.
உறவு
நகமும் சதயுமானது
நம் உறவு
என்று நீ சொன்னதன்
அர்த்தம்
இப்பொழுதுதான்
புரிந்தது...
நகம் போல்
வெட்டி விட்ட பின்பு !
இதய மொழி
எல்லோரிடமும் சரளமாக
பேசும் நான்
உன்னை பார்த்ததும்
மவுனம் கொள்கிறேன்
என் "இதய மொழி"
உன் இரு விழிகளில் !
என் கண்களாய் நீ
உம்மை பார்க்க கூடாது
என்று கண்களை
மூடுகிறேன்
என் கண்களாய் நீ !
கவிதை
கவிதை எழுத
மனம் வரவில்லை !
இன்னும்
நீ என்னை மறக்காததால் !
உன் நினைவுகள்
ஒரு கையில் சிகரெட்
மறு கையில் மது
கொஞ்சம் புகைத்து
அதிகம் குடித்து
தள்ளாடி விழும்
தருணங்களில் கூட
கொட்டிவிட மறுக்கிறது
உன் நினைவுகள் !
நன் காதல்
எத்தனை ஆண்டுகள் ஆனாலென்ன
சந்திக்கும் போதெல்லாம்
கட்டி தழுவிக் கொள்ளும்
கடிகார முட்களை
போல
"நன் காதல்"
என்னவள்
என்னவள் கண்கள் ஓவியம்
என்னவள் பேச்சு சொல்லோவியம்
தேன் என்று சொன்னால்
நாக்கு இனிக்காது
தீ என்று சொன்னால்
வாய் வெந்து விடாது
என்னவள் பெயரை சொன்னால்
உதடும் உள்ளமும் இனிக்கும்
மனதில் காதல் மணக்கும்
மனக் குன்றில் கோவில்கட்டி
என்னவளை சிலையாக வைத்து
தினமும் வழிபடும் பக்தன் நான்
யார் அவள் என்றறிய ஆவலா?
கொஞ்சம் பொறுங்கள்!
காதல் தேவதை
சம்மதித்தால் சொல்கிறேன்....!
ஜாதி மத பேய்களுக்கு
காலம் காலமாகத் தான்
காதலிக்கிறார்கள் !
நியும்
நானும் மட்டும்
எதிரியாக்கிப் போனோம்
ஜாதி மத பேய்களுக்கு !
இதயம்
நீ
ஒரு முறை கை குலுக்கிய
அந்த இறுக்கத்தின்
அழுத்தத்தில் தான்
இதயம்
எழுந்து நின்று செய்தது
"காதல்"
கடிகார முட்கள்
உன்னை காணாத
ஒவ்வொரு வினாடியும்
வினாய் போகிறதே என்று
வருத்ததுடன்
உரையாடிக் கொண்டிருக்கிறது
"கடிகார முட்கள்"
கல்லறை
நான் ஒரு பூவின் மேல்
ஆசை கொண்டேன்
விழுந்தது
பல பூக்கள்
என்
கல்லறையின் மேல் !
பூக் கூடை
ஓ....!
பூக் கூடையே
பூ வாங்க வருவது
போலிருக்கிறது !
நீ...
பூ வாங்க
வரும் அழகு !
கண்கள்
கண்கள் பேசுவதை
எங்கும் நான்
கண்டதில்லை பெண்ணே !
உன் கண்களை
நான் சந்திக்கும் வரை !
அறிமுகம்
என்னை எனக்கே அறிமுகம்
செய்தது
"காதல்"
மரணம்
மரணம் தொடும் தொலைவில் நாம் !
காரணம்
குடும்பத்திற்கு பிடிக்காத காதல் !
வாழ்க்கை
வாழ்க்கை
காவியதிர்க்காகவோ
கல்லறைக்காகவோ இல்லை
இரு மனம் சேரும் காதலுக்காக
தான்
வாழ்க்கை !
கன்னித்தமிழே!உயிரே...
கன்னித்தமிழே! காவிய மொழியே!
கற்பனை ஊற்றே! கம்பன் கவியே!
காதல் சுகமே! வீர நிலமே!
கற்பகத் தருவே! வணங்கினேன் போற்றி!
கற்பின் பெருமை! கண்ணகி மகிமை
வெற்பின் பெருமை! பழனியே உவமை
உலகப்பொதுமறை, ஐம்பெருங் காப்பியம்
பாஞ்சாலி சபதம்! நின் புகழ் வாழ்க!
உணர்வே!உயிரே! பேச்சே!மூச்சே!
உலகம் மயக்கும் மந்திர மொழியே!
உரிமைக்குப் போராடும் தன்மான தமிழே!
உயர்வாய்!வளர்வாய்!வளர்ப்போம்! வாழ்வோம்!
மண்ணே!பொன்னே!கனியே!கரும்பே!
மணியே!முத்தே!ஆருயிர்க் குழ்ந்தாய்!
பனியே!பாகே!பவளக்கொடியே!காதலியே!
பாசமே!நேசமே!பண்பின் உயிர்த்தாயே!
தெய்வம் தந்த முத்தமிழே!
உய்வோம் நின்பாதம் பற்றி-அல்லால்
மாய்வோம் உனை நெஞ்சில் கட்டி
ஓயோமினி!சத்தியம் தாயே!
நமது பாரதம்
நமது நாடு நமது நாடு
இந்தியா என்று சொல்லுவோம்
எனது பெயர், உனது பெயர்
இந்தியன் என்று சொல்லுவோம்
புண்ணியம் நிறைந்த பூமி
புகழுடைய பூமியே
புவி மீது இந்தியாவிற்கு
ஈடு இணை இல்லையே
சாதி சமயங்கள் இருந்தாலும்
சமத்துவம் கண்ட நாடிது
பூசல்கள் இருந்தாலும் புதுமை கண்டு
புரட்சி செய்த நாடிது
ஆன்மிகத்திலும் அறிவியலிலும் பல
அற்புதம் படைத்த நாடிது
வளமை நிறைந்த நாடிது- நல்ல
வனப்பு மிகுந்த நாடிது
தொல்லை கண்டு எல்லை கண்டு
வெற்றி முழக்கம் செய்தது
வில்லைக் கண்டு கல்லைக் கண்டு
கலைகள் பல செய்தது
கண்ணைப் போல்
மண்ணைக் காப்போம்
பெண்ணைப் போல் நாட்டை
போற்றி வளர்ப்போம்!
சொர்க்கம்
உன்னை பார்த்த
பின்புதான் புரிந்தது
ஒரு வேளை
"சொர்க்கம்"
கூட உன்னை போல அழகாய்
இருக்குமோ காதலியே ?