காதல் - உள்ளமும் உணர்வும் - நினைவு பரிசு

காதல்

ஈருயிர் இணைந்து
ஒருயிராய் ஒடுங்கும்
ஓர் இரண்டாம்
உயிர் பிறப்பே
காதல்...!

உள்ளமும் உணர்வும்

சுற்றமும் சுழலும்
படைத்து விட்ட
உறவை காட்டிலும்....
உள்ளமும் உணர்வும்
புரிந்து கொண்ட
உறவே மேலானது...!

நினைவு பரிசு

இந் நினைவு பரிசு
உனக்கு...!
உன் நினைவே பரிசு
எனக்கு...!

சதா ரணம்

காதல் என்பது உனக்கு
சாதாரனம்
அனால் எனக்கோ அது
சதா ரணம்

பிறந்த காதல்

நாம் பிறந்த பின்பு
பிறந்த நம் காதல்...

நாம் இறந்த பின்பும்
இறப்பதில்லை...

கண்கள்

காதலுக்கு கண்கள் இல்லை
என்பது பொய்...!
நான் உன் கண்களை பார்த்த பிறகு தான்
காதலிக்கவே தொடங்கினேன்...!

புன்னகை

என்னை
எனக்கே பிடிக்கம்
ஒரு முறையாவது
நீ
புன்னகைதிருந்தால்....!

அழைய வைகிறாய்

உன் முன்னாள்
பிறந்ததற்கா...!
உன் பின்னால்
அழைய வைகிறாய்...!

விலாசம்

சொர்க்கத்தின் விலாசத்தை
போய் அறிந்தேன்...!
நீ
தான் சொர்க்கம் என்பதை
அறிந்துகொள்ளாமல்...!

இதயநதி

என் இதய நதியில்
ஓடமாய்...!
உன் நினைவுகள்
என்றும்
ஓடிக்கொண்டே இருக்கும்...!

புல்லங்குழல்

ஒரு மூங்கில் காட்டையே அழித்து
ஒரே ஒரு புல்லங்குழல் செய்தேன்...
ஊதும் போதுதான்
தெரிந்தது...
அது உன்னை போலவே
ஊமை என்று...

கண்கள்

கண்களை வாங்கிக் கொண்டு
கண்களை தருபவள்
- தோழியாகிறாள்
கண்களை வாங்கிக் கொள்ளவே
மறுக்கிறவள்
- காதலியாகிறாள்
உன்னைபோலவே...!

பெயர்

உன்னுடைய உதடுகள்
உச்சரிக்கும்
வரை உணர்ந்ததில்லை
நான்...
என்னுடைய பெயர்
இத்தனை அழகாய்
இருக்கிறது என்று...

வரம்

இரண்டு முறை
வாழ்வதற்கு
வரம் வேண்டும்...!
அதில்
ஒரு முறையாவது
உன்னோடு
வாழவேண்டும்...!

அழவைத்து

உன்னை அழகானவள்
என்று கூறியதற்கா
பெண்ணே என்னை
அழவைத்து பார்க்கிறாய்...!

விரும்புவது

எனக்கு தெரியும்
நீ
விரும்புவது என்னை அல்ல
என் கவிதைகளைத்தான் என்று...!
அனால்
உனக்கு தெர்யுமா?
உன்னை விரும்புவது
என் கவிதைகள் அல்ல
நான்தான் என்று...!

இனியவளே...!

இனியவளே...!
இனி யாரையும்
நிமிர்ந்து பார்க்காதே..!
உன்
கண்களை பார்த்தே...
என்னை கண்டு பிடித்து
விடுவார்கள்...!

நிஜம்

நீ பேசுவதெல்லாம்
நிஜம் என்று நினைக்கும்
என்னிடதிலா
நிஜமாகவே நீ
பேசாமல் இருக்கிறாய்...!

எழுது எழுது

எழுது எழுது
எனக்கு ஒரு கடிதம் எழுது
என்னை நேசிக்கிறாய் என்றல்ல
நீ வேறு எவரையும்
நேசிக்கவில்லை என்றாவது
எழுது...!

தபால் தலை

காதலியே
இனி அனுப்பும் கடிதங்களுக்கு
தபால் தலை ஒட்டாதே
உன் இதயம் சுமந்து வரும்
கடிதங்களுக்கு
அவர்கள் ஓங்கிக் குத்துவதத்
தாங்க முடியவில்லை....!

Post a Comment (0)
Previous Post Next Post