ஏன் இப்படி மயக்கினாய்...! - Mouna viratham - உணர்வு

ஏன் இப்படி மயக்கினாய்...!

அன்பே...!
அதிகாலை தேநீர்
என் உணவுக்குள் மிதக்கிறது...

சூரிய ஒளியில் மரமும்
அமிர்தசரஸ் கோவிலாய் ஜொலிக்கிறது...

குடிக்கும் தண்ணீருக்குள்
தாஜ்மஹாலே தெரிகிறது...

மண்ணில் மழை போல தோன்றி என்னை
உன்னில் நனைத்து விட்டுப் போனாய்..!

கண்ணில் விதை போல தோன்றி உன்னை
என்னில் விதைத்து விட்டுப் போனாய்...!

அன்பே...சொல் என்னை
ஏன் இப்படி மயக்கினாய்...!

Mouna viratham

மௌன விரதம் என்றால் நீ உன் கண்களை மூடிகொள்; உன் கண்கள் அல்லவா அதிகம் பேசுகிறது

உணர்வு

தென்றலும் தீண்டவில்லை...
குளிர் மழையும் என்னை தொட வில்லை...
ஆனாலும் சிலிர்த்தேன்...
உன் பார்வை என் மேல் விழுந்ததால்...

வெட்கம்

என் கண்ணீருக்கு தான்
எத்தனை வெட்கம்…???

நீ விலகி சென்ற பிறகு தான்
எட்டி பார்க்கிறது… !!

விவாகரத்து

சொத்து பிரிகையின்போது
கேட்காமலேயே கிடைத்தது
விவாகரத்து...

தாய் மூத்த மகன் வீட்டிலும்!!!
தந்தை இளைய மகன் வீட்டிலும்!!!

பெண்ணின் Guardian?

குழந்தையில் தந்தை.
இளமையில் கணவன்.
முதுமையில் பிள்ளை.
மறுமையில்?

சுவாசம்

சுகமான தென்றலை தேடி அலைந்தேன் உன் சுவாச
காற்று என் மீது படும் வரை. . .

காலேஜ்

காலேஜ் என்பது கற்பனை,

கிளாஸ் ரூம் என்பது வேதனை,

சப்ஜெக்ட் என்பது சோதனை,

செமஸ்டர் என்பது ரோதனை,

அதில் பாஸ் ஆவது தான் சாதனை…

அம்மாவின் விதி!

உலகத்து சொந்தங்களை
உனக்கு அறிமுகப்படுத்திய
உன் முதல் சொந்தம்
இன்று
முதியோர் இல்லத்தில்!

இறுதி ஆசை...



அவள் சூடி வீசியெறிந்த
வாடிய பூக்களை
சேகரித்து வைத்திருக்கிறேன்,
என் இறுதி ஊர்வலத்தில்
அதை மட்டும்
என் மீது வீசுங்கள்...

அவள் காலடிச் சுவடுபட்ட
மண்ணை சேகரித்து
வைத்திருக்கிறேன்,
அதனால் மட்டுமே
என் கல்லறைச்
சுவரை எழுப்புங்கள்...

அவள் விழிகளில்
தொடங்கிய என் காதல்,
அவள் பாதங்களிலேயே
முடியட்டும்.

அழகு...

புள்ளி வைக்காத
எழுத்து
அழகு...
அதைவிட அழகு
பொட்டு வைக்காத
உன் நெற்றி.

யார்?

பூமிக்கு
மது
ஊற்றிக்
கொடுத்தது யார்?
பூகம்பமாக
தள்ளாடுகிறது...!

நீ

எத்தனையோ முறை
கவிதைக்காக
பரிசுப் பெற்ற போதெல்லாம்
கைகள் நடுங்கிய
நேரமும் உண்டு....
ஏன்?
எழும் கேள்விகள்
ஏழாயிரம்...
ஏனென்றால் என்
கவிதைக்கு சொந்தக்காரி
நீ தானே....

வழக்கை தத்துவம்

சோகம் மட்டுமே வாழ்க்கை கிடையாது !
சுகமாகவே என் நாளும் வாழ்ந்து விடவும் முடியாது !
சிமிட்டும் நம் இமைகள் ஒரு நொடி இருட்டினால் தான் நம்மால் பல நொடிகள் வெளிச்சத்தில் வாழ முடியும் என்பதை மறவாதீர் ..


பெண்கள்

வார்த்தை
தடுமாற
காரணம்
கண்கள் ,
வாழ்க்கை
தடுமாற
காரணம்
“பெண்கள் ”…
Be careful…

மரணம்

நீ
பேசாமல் இருக்கும் ஒவ்வொரு நொடியும்
எனக்கு
மரணம் தேடிவரும் ஒரு வழி
என்பதை மறந்து விடாதே
என் அன்பே !

பொறாமை

நீ...!
பூனையுடன் விளையாடுவதை பார்த்து
எனக்கு
பொறாமையாக இருக்கிறது.
நான் அந்த பூனையாக இருக்க கூடாத என்று

இயந்திரமயமான வாழ்க்கை

காலையில் எழுந்ததும்
பல் துலக்கி
குளித்து முடித்து
ஆகாரம் உண்டு
ஒன்று/இரன்டு மணிநேரம் பிரயாணித்து
அலுவலகம் சேரும் முன்
கடிகாரம் பகல் 11-ஐ தொட்டுவிடும்

கணிப்பொறியை திறந்து
அன்றைய செய்திதாள்களை அலசிவிட்டு
மினஞ்சல்களுக்கு பதில் அனுப்பி முடித்து
பார்த்தால்
கடிகாரம் பகல் 1 என பல் இளிக்கும்

மீண்டும் ஆகார மூட்டையோடு
சென்று திரும்பினால்
அரை நாள் ஓடியிருக்கும்

மீண்டும் கணிப்பொறியை திறந்து
அன்றைய பணிகளை செய்து
அனுப்பவேண்டிய மினஞ்சல்களை அனுப்பி முடித்து
திரும்பி பார்கையில்
சில/பல SMS / Missed calls என் கைபேசியில் தொற்றி கொண்டிருக்கும்
அப்போதுதான் நினைவிற்கு வரும்
மனைவி வாங்கி வர சொன்ன பொருட்கள்
ஆனால் அதற்குள்
கடிகாரம் இரவு 8-ஐ தொட்டுவிடும்

மீண்டும் ஒன்று/இரன்டு மணிநேரம் பிரயாணித்து
வீட்டை அடைந்து
டிவி-ல் முகம் புதைத்து
இரவு ஆகாரம் முடித்து
வாழக்கையின் உண்மையான அர்த்தத்தை புரிந்துகொள்ளமலே...
வாழக்கையை ரசித்து வாழ்வது எப்படி
என்று அறிந்துகொள்ளமேலே...
உறங்கி போகிறோம்...

கவிதை வேண்டும்

காலையிலும் மாலையிலும்
கனவிலும் நீ தானடி
உறவிலும் உறக்கத்திலும்
உயிரே நீ தானடி....
காதல் வேண்டுமா?கவிதை வேண்டுமா? நிச்சயம் சொல்வேன் சத்தியம் செய்வேன்
"கவிதை தான் வேண்டும் எனக்கு " - என் கவிதை நீ தானடி

ஆச்சரியம்

இந்த காதல்
எதனை விசித்திரமானது...!
என்னையும் அழவைத்து விட்டதே...! ஆச்சரியம்

Post a Comment (0)
Previous Post Next Post