அன்பு
அன்பு என்ற சொல்லுக்கு
அர்த்தம் கேட்டு
அடித்துக் கொண்டிருந்தார் ஆசிரியர்
வாடகை தரவில்லை
பல நாட்களாக குடியிருந்தும்
வாடகை தரவில்லை
கரப்பான் பூச்சி !!
கடவுள் கூட நாத்திகன் தான்
கடவுள் கூட நாத்திகன் தான்
தன் சிலையை
காப்பாற்றாமல் இருக்கும் போது !
குட்ஸ் வண்டி
வாழ்க்கைச் சுமைகளை
வரிசையாகச் சுமக்கும்
ஏழை விவசாயி….
குட்ஸ் வண்டி
இந்தியத் தாயின் இறுதிக் கண்ணீர்த்துளி
இந்தியத் தாயின்
இறுதிக் கண்ணீர்த்துளி....
இலங்கை
சொந்தமண்ணிலிருந்து துரத்தப்பட்ட அகதி
சொந்தமண்ணிலிருந்து
துரத்தப்பட்ட அகதி
துடுப்பற்ற பரிசல்
பிறைநிலா
Manaivi
En nenjil Vaazhum Ninaive
Unnai oru naal Maranthiruppen
appodhu naan iranthiruppen
ellai ellai unnudan inainthiruppen
By Balasubramanian
Ennaval
Nee Pagalil thondrum Nilavu
Chudithar anintha thendral
Nadamaadum Kavithai
Thogai ellatha Mayil
Kuyiln Guru
Veyil nerathu Vaanavil
Vadatha Roja
Valayatha Naanal
Mothathil nee pennalla Boogolam
by Balu
Nadai alla Nadanam
பெண்ணே !
உன்னை பார்க்க
சூரியன் வந்தான் வெயிலாக
சூரியனிடம் இருந்து உன்னை காக்க
குடையாக வந்தது மழை
இருவரும் வேண்டாம்
உன்னை காலம் முழுதும்
தாங்கும் காதலனாக
நான் இருப்பேன் என்கிறது இந்த பூமி
ஒ நீ நடக்கிரையோ? !!!
வெற்றி
ஒவ்வொரு சூரிய உதயமும் உன் வெற்றிகாகவே உதிக்கிறது......
முயற்சி செய் இன்றே வெற்றி பெறுவாய்.....
இந்த நாளும் உனக்காகவே காத்திருக்கிறது ....
முதிர் கன்னி
முதிர் கன்னி
இருண்ட
அவளது வாழ்வில்
மின்னியது அவளது நரைமுடி மட்டுமே
காதல்
காதல்
காதல் கல்லறையின் நுழைவாயில்
மூளை காய்ச்சலின் அறிகுறி
சொர்க்கம் அல்ல நரகம்
எமன் வாங்கியிருக்கும் புதிய வாகனம்
முத்தத்தால் இதயத்தை பாதிக்கும்
ஹார்ட் அட்டாக்
ஈரம்
நிலவில்
தண்ணீர்
இல்லையாமே
யார் சொன்னது
உன்
முகத்தில் தான்
வியர்வை இருக்கின்றதே
kaadal punitham kaappom
வெண்பனி மேகக் கூட்டத்தில்
தண்நிலவு நடத்திடும் ஊர்வலம்
கண்ணொளி மகிழ்ச்சியில் வெள்ளலை
பண்ணொலி எழுப்பிடும் புதுமை
உள்ளொளி காதல்மணம் பரப்ப
உடலால் மணற்பரப்பில் கிடந்தேன்!
கட்டவிழ்ந்த கார்குழல் காற்றாட
மொட்டவிழ்ந்த பூவாக காதலி
பட்டணிந்த நிலவாய் இதயம்
தொட்டணிந்து அழைத்து சென்றாள்!
பாதங்கள் நிலமிருக்க இருவரும்
பறந்தோம் காதல் வானில்!
இந்திரலோகம் சென்று அமுதமுண்டோம்
சந்திரலோகத்தில் கலைகள் கற்றோம்
மந்திரத்தில் வீடுகட்டி மதனின்
மலரம்பை பரிசாக பெற்றோம்
மகரந்தப்பொடியாய் காதலை கொணர்ந்து
மண்ணிலே தூவி வளர்த்தோம்!
ஆண், பெண்ணை இணைத்து
ஆட்சி செய்யும் காதல்
அந்தரங்க ஆய்வுகள் எல்லாம்
அடுத்தொரு உயிர் பிறப்புக்கு
காதல் போர்வையில் காமமொழித்து
கலியுலகில் புனிதம் வளர்ப்போம்!
dharmaththin thalaivan
வாழ்க்கை பாடத்தில்
அனுபவ பயிற்சி பெற்று
ஆசையென்னும் அலைமோதி
ஆறாபுண்ணாம் துன்பமதை
போக்குதற்கு வழியின்றி
பொறியில் அகப்பட்ட
எலிபோல இங்குமங்கும்
ஓடியலையும் மக்களே!
ஆசையினை அடக்கும் வழி
ஆயிரம் நம் முன்னோர்கள்
சொன்னதை படித்தும் கேட்டும்கூட
மனம் பண்படவில்லையா?
படித்ததெல்லாம் மறைத்து வைத்து
பல்லாயிரம் ஆசை மனதில் சுமந்து
வாழ்க்கை சூறாவளியில்
சிக்கித் தவிக்கின்றார்!
மனதில் பதிந்த மாசு துடைத்து
உள்ளமதில் உயர்வு கொண்டு
எண்ணமதில் ஏற்றம் கொண்டு
எங்கும் நிறைந்த பரம்பொருளை
தியானம் செய்து
இந்த வாழ்வு அவன் பிச்சை
என்றெண்ணி வாழ்ந்திடுவோம்!
விடியும் நேரம் அமைதிவரும்
மடியும் நேரம் சொர்க்கம் வரும்!
ஏமாற்றி வாழ்ந்து-கொலை
கொள்ளை புரிந்து கோடிகள்
குவிப்பதை விட
கொல்லாது ஒருவரை புறம்
சொல்லாது ஏழையாய்
வறுமையில் வாழ்ந்தாலும்
சத்தியம் உன்னை அணைத்திருக்கும்
தர்மம் தலைமடியில் அமர்ந்திருக்கும்
தெய்வம் உன்னிடம் குடியிருந்து
அமைதி வாழ்க்கைக்கு வேண்டியது கொடுக்கும்!
வாழ்ந்து பார்ப்போம் சத்தியதீபம் கையிலேந்தி
தாழ்ந்து பார்ப்போம் தர்மம் தனைமீறித்தந்து
வீழ்ந்து எழும் அனுபவம் வாழ்க்கை
தர்மமும் அதுவே! வீழும்
முடிவில் வெல்லும்!
அந்த சில நொடிகளில்...!
அன்பே...!
உன்னிடத்து பல மணி நேரம்
பலவற்றை பேசினாலும்...
எனக்கு அந்த பதற்றம்
இல்லை...
நீ என்னை பார்த்து சிரித்தால்
மனதுக்குள் மழைக்காலம்
ஆரம்பிக்கிறது...!
அந்த சில நொடிகளில்...!
வேலை பளு
அருக அருகே இருந்தாலும்
மின்னஞ்சல்/ குறுஞ்செய்திகளில் விசாரிப்போம்
ஏனென்றால் வேலை பளு...
நண்பர்களை எங்கு பார்த்தாலும்
gettogether பற்றி மிக தீவிரமாக விவாதிப்போம்
ஆனால் நண்பர்கள் முகம் மறைவதற்குள் அதை பற்றி மறந்துவிடுவோம்
ஏனென்றால் வேலை பளு...
எந்த விஷேசம் என்றாலும்
சனி/ஞாயிறுகலிள் வரும்படி பார்த்துகொள்வோம்
சாவையும் சேர்த்து...
ஏனென்றால் வேலை பளு...
ஒரே ஒரு கவிதை/கதையில்
எங்கள் வாழ்கையே ஒரு கணத்தில் திரும்பி பார்போம்
ஆனால் மறு கணம்...
ஏனென்றால் வேலை பளு...
எங்களை குழந்தைகளுக்கு
தாத்தாவையும் பாட்டியையும்
புகைபடத்தில் அறிமுகம் செய்துவைத்தோம்
ஏனென்றால் வேலை பளு...
வாரத்திற்கு ஒரு முறை
அம்மா அப்பாவையும்
வருடத்திற்கு ஒரு முறை
உறவுகளையும்
தொலைபேசியில் விசாரிப்போம்
ஏனென்றால் வேலை பளு...
அம்மாவும் அப்பாவும்
சொந்த ஊரில் அநாதைகளாய்
நாங்கள்
வாழ வந்த ஊரில் அநாதைகளாய்
வாழ்கிறோம்
ஏனென்றால் வேலை பளு...
வேலை பளு வேலை பளு என்று சொல்லி
எங்கள் குடும்பமே சுருங்கி போனது nuclear family -யை
வேலை பளு வேலை பளு என்று சொல்லி
நாங்கள் இழந்தது இதை எல்லாம்தான்
அம்மாவின் மடி
அப்பாவின் ஆறுதல்
குழந்தையின் பாசம்
மனைவியின் அரவணைப்பு
நண்பர்களின் உற்சாகம்
உறவுகளின் உறுதுணை
வேலை பளு வேலை பளு என்று சொல்லி
நங்கள் பெற்றதை விட இழந்ததே மிக அதிகம்
ஆனாலும் நங்கள் எங்களுக்கு சொல்லிக்கொள்ளும் சாக்கு வேலை பளு...
காற்றை பார்த்து விட்டேன்...!
உலகை சுற்றி பார்க்க ஆசை இருந்தது
அது உன்னை பார்த்ததும் தீர்ந்தது...
உறவை பெருக்கி கொள்ளும் ஆசை இருந்தது
அது உன் பார்வையில் தீர்ந்தது...
தென்றல் காற்றை கண்களால் பார்க்க
ஆசை இருந்தது....
காற்றில் ஆடும் உன் கூந்தல் அழகில்
அதுவும் தீர்ந்தது...!
பெண்ணே...!
தூக்கம் என்றால் என்ன...!
கண்களில் காதல் பாரம் ஈற்றி விட்டாய்
என்னால் தூங்ககூட முடியவில்லை...
கைகளில் கவிதை பாரம் ஏற்றி விட்டாய்
என்னால் தூங்ககூட முடியவில்லை...
கண்கள் மூடி இருக்கும் நிலை உறக்கமாம்.!
அது என்னுள்ளே எப்போதுதான் பிறக்குமாம்.!
உண்மையைச்சொல்
தூக்கம் என்றால் என்ன...!
காதலியே...!
கற்றுக் கொடுத்தாய்...!
அதிகாலையில் பூக்களில் படியும் பனித்துளியை
ரசிக்க கற்றுக் கொடுத்தாய்...!
பூத்துக்குலுங்கும் புன்னகை மலர்களில்
வசிக்க கற்றுக் கொடுத்தாய்...!
சாலை ஓரக்கடைகளின் தேநீரை
ருசிக்க கற்றுக் கொடுத்தாய்...!
அகத்தில் எழும் ஆற்றாமைகளை
அளிக்க கற்றுக் கொடுத்தாய்...!
நீ தானடி என் தேவதை...!