காதலின் - உண்மையான தோல்வி - நீ இல்லாமல்....

காதலின்

காதலின் இனி"மை"
சொர்க்கத்தை விட மேலானது...!

காதலின் கொடு"மை"
நரகத்திற்கு ஈடானது...!

காதலின் தனி"மை"
எவருக்கும் புரியாதது...!

காதலின் பொறு"மை"
இப்பூமிக்கு ஈடானது...!

உண்மையான தோல்வி

தோல்வியில் இருந்து எதையும் கற்று கொள்ளவில்லை என்றால்,
அது தான்
உண்மையான தோல்வி!

உங்கள் நண்பன்,
விஷ்ணு குமார்

நீ இல்லாமல்....


நீ இல்லாமல்
வாழத்தெரியாத எனக்கு....

நீ இருந்தும் இல்லாமல்
வாழ்ந்துகொண்டிருக்கிறேன்...

காலம் தவறாமை

தாமதமாகவே வா!
உன்னைவிட உன்
நினைவுகள் சுகமானவை...

எனக்கு மனிதன் என்று பெயர் !!!

எனக்கு மனிதன் என்று பெயர் !!!

இரண்டு கால்களும் இல்லாமல்
கிழிந்து அழுக்கான
உடையில், கண்களில்
பசியுடன் ஒரு ரூபாய்க்காக
கையேந்தும் சிறுவனை
விரட்டிவிட்டு செல்கிறேன்
அன்னதானம் வழங்கும்
விழாவில் தலைமை ஏற்க!

கடவுளே! எனக்கு சீக்கிரம் பேசும் சக்தியை கொடு

அம்மா
அவளை பார்க்கும் போது
சொல்ல நினைக்கிறேன்...
அவள் சிரிக்கும் போது
பேச நினைக்கிறேன்...
அவள் என்னை முத்தமிடும்போது
சுவையை பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்...
ஆனால் முடியவில்லை.
கடவுளே! எனக்கு சீக்கிரம்
பேசும் சக்தியை கொடு
"அம்மா" என்று அழைக்க...!

ஏன்?

முதலில் கருவறை
அடுத்து வகுப்பறை
நாளை மாணவரை
முடிவில் கல்லறை
அதற்குள் ஏன் சாதி மதம்?

தொலைபேசியில் முத்தம் தராதே

தொலைபேசியில் எல்லாம்
நீ எனக்கு முத்தம் தராதே,
அது,
உன் முத்தத்தை எடுத்துக்கொண்டு,
வெறும் சத்தத்தை மட்டுமே,
எனக்கு தருகிறது...

நீ கொஞ்சம் விலகு...!

ஊட்டி மலைச்சாரல் அழகு..!

கொடைக்கானல் மழைத்தூறல் அழகு...!

கன்னியாகுமரியில் கடல் அழகு...!

ஏற்காட்டில் எல்லாமே அழகு...!

உன்னைப்பார்த்தால் இவையெல்லாம்
பார்த்து சொல்வேன்...
நீ கொஞ்சம் விலகு...!என்று...

விரும்புகிறேன்...!

மண்ணாய் இருக்க விரும்புகிறேன்...!
உன் கால்தடம் என் மீது பதிவதற்காக...

பொன்னாய் இருக்க விரும்புகிறேன்...!
உன் கழுத்தில் நான் மின்னுவதற்காக...

காற்றாய் இருக்க விரும்புகிறேன்...!
உன் மூச்சுக்காற்றோடு கலப்பதற்காக...

கடவுளாய் இருக்க விரும்புகிறேன்...!
எந்த நேரத்திலும் உன்னை காண்பதற்காக ...!
பெண்ணே...!

என்னுள்ளே கலந்து விடுவாய்...!

உன்னை வானவில் என்று சொன்னால்
மறைந்து விடுவாய்...!

உன்னை நிலா என்று சொன்னால் பகலிலே
என்னை தவிக்க விடுவாய்...!

உன்னை மேகம் என்று சொன்னால்
காற்றிலே கரைந்து விடுவாய்...!

உன்னை நான் என்று சொன்னால்
என்னுள்ளே கலந்து விடுவாய்...!

உறவுகளை காதல் செய்

காதல் காதல் காதல்
காதல்போயின் சாதல்

இன்னும் எத்தனை
தலைமுறைகள்
இந்த வார்த்தைகளில்
வழிதவறபோகின்றன

அவள், நிலா, வானம்,
மழை, காற்று, பூ,
மின்னல், என் உயிர்,

இன்னும் எத்தனை
யுகங்கள் அவளின்
அன்பை மட்டும்
ஆலாதிக்க போகின்றாய்?
என் கவி நண்பனே...........

எனக்காக
காத்திருக்கும்
என் தாயின்
உண்மையான அன்பு

நான் இல்லாதபொழுதும்
என்னைப்பற்றி
நினைக்கும்
தந்தையின் அக்கறை

தங்கை மகளின்
அன்பு முத்தங்கள்

எந்தவொரு நிலையிலும்
என்னை விட்டுகொடுக்காத
சகோதரனின் அரவணைப்பு

என் அந்திம
காலத்திலும்
விலகாத என்
நண்பனின் அன்பு

என்னிடம்
விளையாடும்
என் மகனின்
மழலையன்பு

என்னை பார்த்ததும்
தன்னை மறந்து
ஓடி வரும் என்
நாயின் கொஞ்சல்

இன்னும் ஏராளாம்
அவளின் அன்பைவிட
ஆழமானதும்
அழுத்தமானதும்
என் கவி தோழனே

எத்தனை முறை
கவிதை எழுத
அவளின் அன்பை
மட்டும்
இதன்
பிறகாவது எழுதுங்கள்
உறவுகளின் பாசம்
மட்டும்

இந்த கவிதை
உரைநடையில்
இருக்கலாம்
ஆனால்
இது உங்கள்
வாழ்க்கைமுறையில்
இருக்கும்

என் இளைய
தலைமுறையே
காதல் செய்
உன் உறவுகளை
காதல் செய்


கண்ணீர் துளீகள்

இறப்பதற்குள் ஒரு முறை,
உன் சட்டை வாசம் நூகர வேண்டும்
உன் கட்டை விரலில் என் பற்களை பதிக்க வேண்டும்
உன் நிழலாவது என் தனிமையை உணர வேண்டும்
உன் கனவாது என் வருகைக்கு வழி விட வேண்டும்
உயிரே......................
உன் இதயம் ஒரு முறையாவது என் கண்ணீரை உணர வேண்டும்

உயிரே

உலகிலியிருந்து நான் விடை பெற்ற பின்பு,
நீ விடைக் கொடுத்த என் நினைவுகளுக்கு ,
உயிர் கொடுத்து விடாதே .....
ஏனெனில் உறங்கிய என் இதயம் எழுந்து விடும்,
நீ என்னை நினைத்தால்.......................

அடி, உதை, குத்து

அடி, உதை, குத்துக்கு…
உடம்பு வலித்தும்
உள்ளம் வலிக்கவில்லை…
பேரப்பிள்ளைகளின் செல்லம்?

நித்யானந்தா நித்யானந்தா!!!

பெண் தெய்வம்
பயந்து ஓடுகிறது
எதிரே
போலிச்சாமியார்!

அவளுடைய இதழ்

அவளுடைய
இதழ்களும் குறள்தானோ?
இரண்டே வரியில்
எத்தனை பாடங்கள்…?

உனக்கு கவிதை எழுத தெரியுமா?

உனக்கு
கவிதை எழுத தெரியுமா
என்றாய்
தெரியாது ஆனால்
பார்த்து கொண்டிருக்கிறேன்
என்றேன்.

தங்கத்திலிருந்து வெள்ளி

அன்பே
தங்கத்திலிருந்து
வெள்ளி வருவதை
இப்பொழுதுதான் பார்க்கிறேன்
உன் வியர்வை.

மொட்டை போட்டது மரம்

என்ன வேண்டுதலோ…
மொட்டை போட்டது மரம்
இலையுதிர் காலம்!

Post a Comment (0)
Previous Post Next Post