உன் முக வெளிச்சத்தில்...! - என் காதலியே என்னை காதலிக்காதே - தலைப்பில்லை, எனக்கு தலைபாயுமில்லை

உன் முக வெளிச்சத்தில்...!

ஒரு நாள் முழுவதும் உன்னை பார்க்காவிட்டால்
இந்த உலகம் எனக்கு போர்க்களம்...!
உடனே கண் மூடி கனவில் உன்னைக் கண்டால்
இந்த உலகம் எனக்கு பூக்களம்...!
மக்காச்சோளத்தின் நிறத்தில் பிறந்துள்ளாயே
எப்படி...!
நீ கருவிலிருக்கும் போது உன் அம்மா
மக்காச்சோளத்தை மட்டுமே தின்றார்களா...!
என் கவிதையை உனக்கு வாசித்து
காட்டிக் கொண்டிருக்கும் போது
விளக்கு அணைந்து விட்டது என்று கூறினாய்
எனக்கு தெரியவில்லையே...!
நல்ல பௌர்ணமி நிலவின் ஓளி என் மீது
விழுந்து கொண்டே அல்லவா இருந்தது...!
ஓ.....உன் முகம் தான் காரணமா.......
என்ன வெளிச்சம் அய்யய்யோ
என்னால் சொல்ல முடியவில்லை அன்பே.....!

என் காதலியே என்னை காதலிக்காதே

ஐந்து வருடங்கள்
கழிந்து
இன்று
அவளை
பார்த்த பொழுதுதான்
தெரிந்தது
என் காதல்
காதலோடு
முடிந்து போனததற்கு
காரணம்

அன்பான துணை
அழகான குழந்தை
அமைதியான இல்லம்
வளமையான வாழ்க்கை

சந்தோசத்தின்
உச்சத்தில்
நான்

நீ
இந்த
ஏழை கவிஞனின்
கை பிடித்திருந்தால்
அந்த
பாரதி கண்ணம்மாவாக
அரிசி பருப்பிர்க்குமே
அழுது
கொண்டிருந்திருப்பாய்

என் காதலியே
என்னை
காதலிக்காததற்கு
நன்றி

என் ஆண்டவனே
என் காதலியை
என்னை காதலிக்காமல்
செய்ததற்கு
நன்றி

உன்
சந்தோசத்தின்
உச்சம்தானடி
என்
காதலின்
மிச்சம்

அது போதும் - இந்த
ஆயுள் முழுதும்.................

தலைப்பில்லை, எனக்கு தலைபாயுமில்லை

சமுதாய கிருமிகளும்
மத வெறி நாய்களும்
பொய் பிசாசுகளும்
பித்தலாட்ட குள்ள நரிகளும்
உயிர் உறிஞ்சும் ஒநாய்களும்
பிணம் தீனி கழுகுகளும்
வாழும் அரசியல் சாக்கடையை
பயம் என்னும் கருவி கொண்டு
தூர் வார கிளம்புங்கள்
இவர்களையும் மக்களை சேவிககும்
நன்றயுள்ள நாயகளாக்குவோம்

உன் விழிகள்

தமிழ் முதல் சீனம் வறை
பல மொழிகள் புரிகிறது
உன் விழிகள்ப் பேசும்
வார்த்தை மட்டும் புரியவில்லை

எந்த பல்கலை கலமும்
எந்த பேராசிரியரும்
விளக்க முடியாத
பாசையடா

உன் விழிகள் பேசுவது

மறைந்தாய் -என்னை மறந்தாய்

வாய்மை நிலைக்கும் பொழுது
பொய்மை மறைந்து போகும்!

உன்னை நினைக்கும்பொழுது
என் மெய்யே மறந்துபோகும்!
மேகமாய் கலைந்துபோகும் !

என்னையே மறக்கும்
உந்தன் நினைவுகள்
எப்படி மறந்தது
என்னை?

உன்னை நினைக்காமல் - நானில்லை!

நிலவின்றி -வானில்லை!
நீயன்றி -நானில்லை!
நிலவு என்றும் -தேய்வதில்லை-உன்
நினைவலைகள் என்றும் ஓய்வதில்லை!
நினைக்காத- நாளில்லை-உன்னை
நினைக்காமல் - நானில்லை!

பருவ -காலம்

"கைகளினால் போடும் கோலம் -நிலக்கோலம்
என்றால்!
கால்களினால் போடும் கோலம் -மணக்கோலமா!?

நிலக்கோலத்திற்கு வண்ணம் தீட்டி-ஆழகுபடுத்துகிறாள்
என்றால்!
மணக்கோலத்திற்கு தன் எண்ணம் கூட்டி-ஆழகுபடுத்துகிறாள்!

நிலக்கோலம் போடுவதற்க்கு-பருவகாலம்
என்றால்!

மணக்கோலம் போடுவதற்க்கும் -பருவகாலம்
தானோ?

அம்மா அம்மா தான் !

"உள்ள சொந்தம் எல்லாமே
சும்மா சும்மா தான்!

"உண்மையான சொந்தம் -உன்
அம்மா அம்மா தான் !"

என்ன ஒரு பொலிவு...!

உன்னை கண்டு இரவைக் கண்டால்
இரவும் பகலாக தெரிகிறதே
அடடா....!
என்ன ஒரு பொலிவு...!
உன் முகத்தினில்.....

சர்க்கரை பேச்சு....!

மெதுவாகப் பேசு எனக்கு
சர்க்கரை வியாதி வந்து விடும் போலிருக்கிறது..!

என்ன ஒரு இனிப்பு உன்
பேச்சினில்...!

சொல்லும் போதே எச்சில்
ஊறுகிறதே...
என் நாக்கினில்...!

இனிய இசை...!

உன் வளையல் கொலுசுகள்
எல்லாம்..
எங்கே சங்கீதம் கற்றன
இவ்வளவு...
இனிமையான இசையை
வாசிக்கின்றதே...
பெண்ணே...!

பல ரசங்கள்....!

உன் இதழ்களில் கனி ரசம்...!
என் கண்களில் பரவசம்...!
உன் வார்த்தையில் மொழி ரசம்...!
என் இதயத்தில் இனி ரசம்...!
உன் பார்வையில் பழ ரசம்...!
உன்
செய்கைகளில் எல்லாம் தெரிகிறது
பல ரசங்கள்...!

நான் இங்கு இல்லை...!

உன்னைக் காணும் போதும் சரி.!
கனவில் நினைக்கும் போதும் சரி.!
உன்னுடன் பேசும் போதும் சரி.!
உன் பேச்சை கேட்கும் போதும் சரி.!
நீ என்னை அழைக்கும் போதும் சரி.!
என்னை செல்ல அடி அடிக்கும் போதும் சரி.!
நான் உன்னை பார்த்து கிறங்கும் போதும் சரி.!
நீ என்னை பாத்து சிணுங்கும் போதும் சரி.!
சத்தியமாக நான் இங்கு இல்லை...!
அன்பே....
சொர்க்கத்தில்...!

மாணிக்கமா...!

நீ மண்ணில் ஒரு மாணிக்கமா...!

என் இதயத்தில் உன் ஆதிக்கமா...!

இது என் மனதை பாதிக்குமா...!

அல்லது என் காதலை சோதிக்குமா...!

உன் மனது என்னை நேசிக்குமா...!

இவைகள் போல நீ...!

சிலையை சிற்பி செதுக்குவது
போல நீ...
கவிதையை கவிஞன் எழுதுவது
போல நீ...
ஓவியத்தை ஓவியன் தீட்டுவது
போல நீ...
என் இதயத்தில் எப்போதும்
ஒலித்துக் கொண்டிருக்கும் சத்தமும் நீ ...!

நீ அழுதால்...!

அன்பே நீ அழுதால்...!
நான் தாங்க மாட்டேன்
அதற்காக
நீ வெங்காயம் வெட்ட கூடாது..
சீரியல் பார்க்க கூடாது என்றெல்லாம்
உத்திரவிட மாட்டேன்...
என் உயிரை மாய்த்துக் கொள்வேன்...!

கலங்குகிறது....!

உன் கண்கள் இமைத்தால்
என் கதி கலங்குகிறது....!
உன் சிரிப்பினில்
என் சித்தம் கலங்குகிறது....!
உன் உருவத்தால்
என் உள்ளம் கலங்குகிறது....!
உன் நினைவால்
என் நித்திரை கலங்குகிறது....!
உன் முத்தத்தால்
என் மொத்தமும் கலங்குகிறதடி...!
பெண்ணே...!

அடங்கவில்லை...!

சீறும் சிங்கத்தின் சத்தம் கூட
சிறிது நேரம் அடங்கும்...!

கூவும் குயிலின் இசை கூட
இடையில் அடங்கும்...!

கரையும் காகம் கூட
காலைப்பொழுதோடு அடங்கும்...!

உன் நினைவால் என் உள்ளத்தில் எப்போதும்
அலைகள் அடங்காமல்
அலை பாய்ந்து கொண்டே இருக்கிறதடி...!

உன் சிரிப்பு...!

உன் பேச்சில் என்னடி அத்தனை மயக்கம்
நான் விழுந்து விட்டேன்...!

உன் சிரிப்பில் என்னடி அத்தனை மாயம்
நான் கிறங்கி விட்டேன்...!

உன் பார்வையில் எவ்வளவு பவர்
நான் படிந்து விட்டேன்...!

உன் கண்ணசைவில் என்னடி கர்வம்
நான் கவிழ்ந்து விட்டேன்....!

இப்(போதை)க்கு என்னுடைய கணிப்பு...!

பெண்ணே...!
உன் கன்னம் காஷ்மீர் ஆப்பிள்...
உன் உதடு பழுத்த ஆரஞ்சின் இதழ்...
உன் கண்கள் பாதி அமாவாசையை
மீறிய ஒளி...
உன் சொற்கள் இயற்கையை
மீறிய இனிப்பு...
இது தான்
இப்(போதை)க்கு என்னுடைய கணிப்பு...!

Post a Comment (0)
Previous Post Next Post