வானவில்லாய் மாறுகிறதடி...! - முரண்! - மனசு

வானவில்லாய் மாறுகிறதடி...!

தாமரையின்
வண்ணங்கள்
இரண்டு தானே...
அதுவும் தனி தனியே தானே...

நீ
தொட்டால் மட்டும்
ஏழு வண்ணம் கொண்ட
வானவில்லாய் மாறுகிறதடி...!
ஒரே பூவில்...

முரண்!


தேங்காய்
உடைக்கிறார்கள்
வாழ்க்கை
சிதறிப் போகமலிருக்க!
தேங்காய்
பொறுக்குகிறார்கள்...
வாழ்க்கையில்
சிதறிப் போனவர்கள்!

மனசு

மீன் சாப்பிடக்கூடாது என்றிருந்தேன்
இப்போது சாப்பிடுகிறேன்
மீனவன் சாப்பிடுவதற்காக

சித்தனும் பித்தனும் இயற்கை!


பிரபஞ்சத்தின் நிர்வாணத்திற்கு
பசுமையில் கட்டிய பட்டாடை;
மரமும் செடியுமென் சாதியென்றுணர்த்திய
உந்து சக்தி; உயிர்நாடி இயற்கை!

ஆழ்கடல் சூழ்ந்த சூழ்சுமம்
உலகை அள்ளிப் பருகிடாத கொடை;
சுடும் நெருப்பு - சுட்டெரிக்கும் சூரியன்
கடும் பல நட்சத்திரங்களை தாண்டி
பூமி வெளிச்சம் பெற்றிருப்பது இயற்கை;

ஆலகால விசமும் பூக்கும்
அடித்துத் தின்ன விளங்கும் பிறக்கும்
இடையே மனிதன் பிறந்து -
மனிதம் நிலைப்பதே இயற்கை;

கண்முன் வாழும் மனிதனறியா யதார்த்தம்
கோபம் வந்தால் கடலுடைத்து
நிலம் பிளந்து
எரிமலை வெடித்து
காற்றை புயலாக்க; மழையை வெள்ளமாக்கி
மனிதனுக்கு தன் இருப்பை நினைவுறுத்தி
பூவிற்குள் ஒளிந்திருக்கும் சூரிய சந்திர
நாயகன் நாயகி;

கல்லை வடித்து சாமி என்றாலும்
கேட்டதை கொடுத்து -
கொடுத்ததை அழிக்கவும் அறிந்த
சித்தனும் பித்தனும் இயற்கை!

மருத்துவமனை

வரிசையாய் நிற்கும்
நோயாளிகளின் வலி கூட்டும்
நிர்வாகம்

தெய்வம் வந்து தாங்கிடாத
பொழுதுகளில் -
மனிதனை உயிர்ப்பிக்கும் விஞ்ஞான வளாகம்!

பணம் போட்டு
நலம் காக்கும்
பொதுசேவை வியாபாரம்

பணம் தாண்டியும்
மனிதம் சுரப்பிக்கும் கடவுள்கள்
மருத்துவர்களாக மாறிய இடம்!

உயிரோடு
விளையாடி -
தொழில் கற்கும் ஏகாந்தம்

உயிர் கொடுத்தும்
உயிர் காக்கும் -
மதம் தாண்டிய மருத்துவாலயம்!

ஏழைகளின் உயிர் வருத்தியும்
உயிர் காத்தும் வளரும் -
செங்கல், மண் கட்டிடம்

எத்தனையோ பணக்கார மருத்துவர்கள்
இரவு பகலை தொலைத்து -
மருத்துவம் பார்க்கும் மனிதநேய மண்டபம்!

சகோதரிகளின்
கவனக் குறைவால் -
உயிர் தின்னும் பொழுதுபோக்கிடம்

மருத்துவரில்லாத அவசரத்தில்
உயிர் காத்த - செவிலித் தாய்களின்
அன்பு பூக்கும் தளம்!

இவை எல்லாம் கடந்து -
எத்தனையோ அலறல்களும்
கண்ணீர் கதறல்களும் -
உயிர்பிரிந்த கணப் பொழுதுகளும்
ஒரு ரசாயன மனமாய் காற்றில் கலந்து
காற்றாக மாறிய இடம்!

கண்ணீர் மழை


கண்ணீர் துளிகளை மழையாக தூது அனுப்பியுள்ளேன்
என் அன்பை நீ உணர!
என்னவனே உன் இதயத்தை கரைக்கவே அனுப்பியுள்ளேன்
கண்ணீர் மழை தூதாக!
கண்ணீர் துளிகளே! அதிகமாக கரைய விடாதீர்கள்
என்னவன் இதயம் கல்லல்ல....
எள்ளினும் மெலியதானது அவன் உள்ளம்!

காதலர்கள்!


இரு மீன்கள்
மாட்டிக் கொண்டன
ஒரே தூண்டிலில்-காதல்!

பதவி



வேலை வெட்டி இல்லாதவனுக்கு
உத்யோகம் யார் தந்தது?
"வெட்டி ஆபீசர்".

குரல்





குயில்
எழுதி வைத்த
உயிலோ
உனது
குரல்

பிடிக்கும்

உன்னை
எந்த அளவுக்கு
பிடிக்கும் என்று
தெரியவில்லை …

அனால் !

உன்னை
பிடித்த அளவுக்கு
இந்த உலகத்தில்
வேறு எதுவும்
எனக்கு பிடிக்கவில்லை …

Nenjukulle Nee

நெஞ்சுக்குள்ளே நீ

நெஞ்சுக்குள்
உன்னை நிறுத்தி
நினைவுக்குள்
உன்னை நிறுத்தி
நித்தமும் உன் முகம் தேடி
கடலை போல்
தேடி ஓடி
காத்திருக்கிறேன்
கண்ணே

வண்ண மலர் போல
வாடா உன் முகம் தேடி
வழியெல்லாம்
காத்திருகின்றேன்
கண்ணே
கடைக்கண் திறந்து
ஒரு காதல் மொழி
சொல்ல மாட்டாயா

நீரிலும் வேகும்...!

மனதெல்லாம்
மலையளவு
சோகம்...

செல்கிறது
என் வழியில்
மழை பொழியும்
மேகம்...

அது பொழிந்தாலும்
அடங்காது
என் காதல்
தாகம்...

நீ பார்த்தாலோ
இந்த உடல் நீரிலும்
வேகும்...!

ஓட்டையான பானை...!

மனிதா மனிதா
நம்பாதே...
காதலில் விழுந்து
வெம்பாதே...

ஓட்டை பானையில்
எவ்வளவு
நீர் ஊற்றினாலும்
நிரம்பாதே...

மனது எவ்வளவு
ஆசையை அடைத்தாலும்
நிரம்பாதே...!

தொடர்பு மையம் - காதல்...!

இரும்பாய் இருப்பவன்
இதயம் கூட
இளகி விடும்
காதலித்தால்...

துரும்பாய் இருப்பவன்
இதயம் கூட
இறுகி விடும்
காதலித்தால்...

இருகலுக்கும்
இளகலுக்கும்
இடைப்பட்ட
தொடர்பு மையம்
தான்
காதல்....!

ஆசைப்பட்டால் காதலி...!

நெருப்பில் நிற்க
ஆசைப்பட்டால் காதலி...!

விண்ணில் பறக்க
ஆசைப்பட்டால் காதலி...!

கடலினில் மூச்சடக்க
ஆசைப்பட்டால் காதலி...!

புயல் காற்றில் சிக்க
ஆசைப்பட்டால் காதலி...!

மண்ணுக்குள்ளே மூச்சுவிட
ஆசைப்பட்டால் காதலி...!

பஞ்சபூதங்களும் உனக்கு
அடிமையாக வேண்டுமென்றால்

காதலிடா மவனே
காதலி....!

எப்போதும் துடிக்கும் இதயத்திற்கு...!

நீ வரும் போது
என்
இடது கண் துடிக்கும்...

இடது கண் துடித்தால்
அபசகுனம் என்றாய்....

எப்போதாவது............!

துடிக்கும் இடக்கண்ணிற்கே
அபசகுனம் என்றால்

எப்போதும் இடப்பக்கம்
துடித்து கொண்டிருக்கும்
இதயத்திற்கு
என்ன சொல்வாயடி....!

விலாசம்

பச்சைப் புள்ளுண்டு வெள்ளைப் பால் தரும் பசுவே!
கலப்படப் பாலுண்டு கலந்த நீரைப் பிரிக்கும் அண்ணமே!
உப்பு நீருண்டு உண்ணும் நீர் தரும் மேகமே!
நெடுங்காலம் வாழ்ந்தும் நீர் மேல் நிலைத்து நிற்காத பாசியே!
இப் பதங்களை எங்கு கற்றீர்கள்?
மயக்க உணர்வால் மெய்ப் பொருள் உணராமல்
பிறவிச் சுழலில் சிக்கித் தவிக்கும் நாங்களும்
அப் பதங்களைக் கற்று உய்ய
உங்கள் ஆசிரியர்களின் விலாசங்களைத் தாருங்களேன்!

அன்னை

என்னை ஈன்ற அன்னையே ...
என்றும் தெய்வமாய்
நினைப்பேன் உன்னையே ...

என்னை இந்த உலக்குக்கு
தந்த தாயே ...
எனக்காக வாழ்கின்றாய் நீயே ...

பல மாதங்கள் என்னை
சுமந்த தாயே ....
பல ஜென்மங்கள் தொடரும்
சொந்தமும் நீயே ...

துயரம் என்றாலும் துயலாமல்
பாலூட்டி வளர்த்த தாயே ...
அல்லும் பகலும் உறங்காமல்
நான் அழும்போது
தாலாட்டி வளர்த்த தாயே ...
என்னை மானிடனாய்
பெற்றெடுத்த தாயே ...

என் ஆயுள் முழுதும்
உனக்கு சேவை செய்தாலும் அது
உன் சேவைக்கு ஈடு ஆகாது ...

தவறு செய்யும் போது
அத்தவ்ற்றைத் திருத்தி
அன்பைத் தந்த தாயே ...

அன்னையின் உள்ளம்
அறிந்த பிள்ளை நான் ...
என்றும் மறுப்பதில்லை
அன்னையின் சொல்லை தான்...

பிறக்கும் முன்னே
உன் துயரை நான் அறிந்ததில்லை ...
பிறந்த பின்னே
துயரை நெருங்க விடுவேனா ...

பேச கற்றுகொடுத்த தாயே ...
பேசட்டும் உன் சிறப்பை இவ்வுலகமே ...


இந்த கவிதை என்னை ஈன்ற அன்னைக்கு சமர்பிக்கின்றேன்

காதலின் அவதாரங்கள்...!

இருவிழி இமைகள் ஒன்றையொன்று
சந்தித்து கொள்ளும் போது
விழியவதராம்....!

ஒருவரை ஒருவர் பற்றி இருவரும்
தெரிந்து கொள்ளும் போது
அறிமுகவதராம்...!

இரு மனதும் ஒருமித்த கருத்துக்களை
பகிர்ந்து கொள்ளும் போது
மனதவதராம்...!

இரு இதயங்கள் ஒன்றாய் சேர்ந்து
ஒன்றாக துடிக்கும் போது
இதயவதராம்... !

இனிக்கும் புன்னகை இருவரது
இதழ்களிலும் தெறிக்கும் போது
இதழவதராம்... !

இருவரது இதழ்களும் திறக்க வழியில்லாமல்
மௌனம் சாதிக்கும் போது
மௌனவதராம்...!

இதழ் கடந்து பிறக்கும் சொற்கள்
வெளிவரும் போது
சொல்லவதராம்...!

நன்கு கைகளும் இருபது விரல்களும்
இணையும் போது
கையவதராம்...!

இரு உடல்கள் இணைந்து ஓர்
உயிராய் மலரும் போது
உயிரவதராம்...!

இந்த காதல் மரணத்தை கூட
தாண்டி வாழும்
மரணவதராம்...!

காதலின் குணாதிசயங்கள்...!

காதலின் பரிபாசை அது மௌனம்...!
காதலின் எதிரி அது தூக்கம்...!
காதலின் மனதில் எப்போதும் ஏக்கம்...!
காதலின் மனதுக்கு பிடித்தது அன்பு...!
காதலின் இதழுக்கு பிடித்தது அன்புச்சண்டை...!
காதலின் நண்பன் கடையிதழோர புன்னகை...!
காதலின் தூதுவன் இரு இமைகள்...!
காதலின் நிறம் வயல் வெளிகளின் பசுமை...!
காதலின் வறட்சி இரு இதழ்களின் தனிமை...!
காதலின் போராட்டம் அது சொல்ல முடியாத கொடுமை...!
காதலின் சிம்ம சொப்பனம் கனவு...!
காதலின் காலடியில் அர்ப்பணம்
உள்ளே இறங்க மறுக்கிற உணவு...!

Post a Comment (0)
Previous Post Next Post