தினம் தினம் தவம்...! - பிரிய மாட்டேன் என்னை மறந்து நான்...! - எளிமை வர்ணிப்பு உன்னை பற்றி!....

தினம் தினம் தவம்...!

கல்லூரியில் காலை முதல்
மாலை வரை..
இருந்த தவம் இப்போது
நிறைவேறுகிறது
உன்னை கண்ட திருப்தியில்...!

நீ என்னிடத்து பேசினால்
அன்று என் தவத்திற்கான
வரம் கிடைக்கிறது...

ஒரு பார்வை என்றாலும்
ஓரப்பார்வை
பார்க்கின்ற பாவையே..!

ஒரு சொல் சொல்லடி
என் ஆயுள் முழுவதும் உனக்கு
செய்வேன் சேவையே...!

பிரிய மாட்டேன் என்னை மறந்து நான்...!

மண் மகள் கை நீட்டி வாவென்று
வான் மழையை அழைக்கின்றாள்

வந்த பால் மழையை எனக்கே எனக்கென்று
மார்போடு அணைக்கின்றாள்.....

அது போல என் தேவதையுன்னை கை நீட்டி
அழைக்கின்றேன்

சத்தியமாக உன் அனுமதியில்லாமல்
உன்னை அணைக்கமாட்டேன்...!

என் கண்ணீர் கடலாவது உன்
புறக்கணிப்பில்....
என் கண்ணீர் வைர கல்லாவது உன்
புன்சிரிப்பில்...

என் உள்ளம் என்ற உவர் நிலத்தை
ஊற வை உன் அன்பினால். ..

பின்பு உன்னை எக்காலமும்
பிரிய மாட்டேன்
என்னை மறந்து நான்...!

எளிமை வர்ணிப்பு உன்னை பற்றி!....

கருங்குயிலின் கருப்பு
புருவம்...
செந்தாமரையின் சிவந்த
உருவம்....
நாணல்கள் போல் கலைந்த
கூந்தல்...
நெற்ப்பயிர் போல் நேரான
நெற்றி...
கோதுமையை கொழித்து செய்த
கன்னம்...
ஆப்பிளை அறுத்து வைத்த
உதடு...
கட்டி கரும்பாக இரு
கைகள்...
பூவின் இதழை விட மென்மையான
பற்கள்...
வளைந்து கொடுக்கும் நதி போல்
இடுப்பு...!
பால்கோவா படிக்கட்டுகள் அதிலுள்ள
மடிப்பு...
இது உன் அழகிற்கு ஒரு
எடுப்பு...
இவ்வளவையும் உள்ளடக்கியது உன்
பிறப்பு...!
உன்னை விட்டு பிரிந்தால் துடிக்காது
என் இதய துடிப்பு...!!!

உன் நெற்றி திலகத்தால்...!

ஒரு கண்ணில் உலகம்
பிறக்கிறது...!
மறு கண்ணில் கலகம்
பிறக்கிறது...!
பெண்ணே உன்
நெற்றி திலகத்தால்...!

நட்பு என்பது...!

சொர்க்கத்தின்
நடைபாதை
"நட்பு"

கருணை கொலை செய்யுங்கள்

கருணை கொலை
செய்யுங்கள்
எங்களை!!!

புரிந்துகொள்ளாத
உறவுகளால்
பாதி பித்து

புரிந்தும்
சேரமுடியததால்
மனத்தால்
பாதி பித்து

பொய்யுரைத்து
பணிபெற இயலாத
மன தைரியத்தால்
பாதி பித்து

அடுத்த வீட்டு
அரை குறைகளுடன்
ஒப்பிடுகையில்
அரை பித்து

சொந்தங்களில் எங்கள்
சந்தங்கள் பாடுவதால்
பாதி பித்து

எங்கள் வாழ்க்கையை
மாற்றும் ஜோசியர்களால்
மன பித்து

அவர்களை நாடும்
இவர்களால்
பாதி பித்து

தனிமையின்
எண்ணத்தால்
பாதி பித்து

தவறான
வழிகாட்டுதலால்
பாதி பித்து

முழு பித்து
ஆகு முன்
எழுதிய
மன ஒத்த
சாசனம்

முழு பித்தும்
பிடித்துவிட்டால்
கருணை கொலை
செய்யுங்கள்
எங்களை!!!

விட்டு வையுங்கள்
அடுத்த
தலைமுறையையாவது!!!






ஆறாவது அறிவு



கிடைத்ததை பகிர்ந்து உண்கிறது காக்கை

பதுக்கி உண்கிறான் மனிதன்

யார்ற்குண்டு ஆறாவது அறிவு?


----- ஆண்டனி

துறவு

முத்துமணி ரத்தினங்களும்
கட்டிய பவழமும்
கொத்துமலர் அற்புதங்களும்
குவிந்த அதரமும்
சிற்றிடையும் சின்ன விரலும்
வில்லெனும் புருவமும்
சுற்றிவரச் செய்யும் விழியும்
சுந்தர மொழிகளும்
எண்ணிவிட மறந்தால்
எதற்கோ பிறவி இத்தைனயும்
இழந்தால் அவந்தான் துறவு

காண வந்த நிலவே

காண வந்த நிலவே
இரவில் வந்த உறவே ..
என்னை காண வந்த நிலவே...
என்னைக் கண்ட பின்னும்
இன்னும் தொலைவில் இருப்பது ஏன்..
நான் வாழ்வது உன் வெளிச்சத்தில் தான்..
நானும் தேய்கின்றேன் உன்னைப் போல் ...
என்றும் உன் நினைவுகள் தொடர்வதால் ...



இளமையோடு ஒரு பழைய காதல்

இன்றோ நாளையோ
இறக்கவிருக்கும் மரங்களில்
இளமையோடு துளிர்க்கும்
மலர் சிசுக்களாய்...
புதுப்புது எதிர்பார்ப்புகளோடும்
விடை தெரியா கேள்விகளோடும்
என் கிழட்டுக் காதல்;


தள்ளாடித் தள்ளாடித்
தேடுகின்றேன்
தொலைந்து போன
பழைய நினைவுகளை...


அந்த மரத்தில் தானே
செதுக்கினோம்
உன் பெயரை நானும்...
என் பெயரை நீயும்...?

எம்மைப் போலவே- காலம்
மரத்தையும் விட்டுவைதில்லை
நரைத்த தலையுடன்
நின்றிருக்கிறது.


புதுப்புது காதல் தடங்களை
தாங்கியிருக்கிறது
படுத்துறங்கிய புல்வெளி!


இந்த இடத்தில் தானே
கைக்கோர்த்து நடைபயின்றோம் ?
ஆமாம்!
இதே இடம் தான்!

இருமருங்கிலும் எழுந்து நின்று
நிழல் பாய் விரித்து
காதலர்களை வரவேற்கும்
பெயர் தெரியா இம்மரங்கள்
"அவள் எங்கே?"
உன்னை தான் விசாரிக்கின்றன


இந்த மரங்களுக்கு
நினைவிருக்கும் நம் காதல்
உனக்கு நினைவிருக்குமோ?


நீ பற்றியிருந்த என் கரங்களில்
தொற்றியிருக்கும்
என் பேரனின் குரல்
இழுத்தெடுக்கிறது என்னை
மீண்டும் நிகழ்காலத்துக்கு
"தாத்தா நேரமாகிவிட்டது
பாட்டி தேடுவாங்க"


என் கேள்விக்கு இல்லாவிட்டாலும்
அந்த மரங்களின் கேள்விக்காவது
விடை சொல்
"நீ எங்கே இருக்கிறாய்?"

முகவரி

யாரேனும்
என்ன
முகவரியை
கேட்டால்
என் காதலியை காட்டுங்கள்
அவளுக்குத்தான்
தெரியும்
என்ன
கல்லறைஇன
முகவரி....


புதியவன் . மு

வளரட்டும் நட்பு

வளரட்டும் நட்பு....

அன்றாடப் பேச்சுக்களில் அகிலம் அளப்போம் ..
வாழ்த்துக்கள் பரிமாறி வானத்தை தொடுவோம் ...
இதயத்து நிலங்களை பதப்படுத்தி வைத்திருப்போம் ...
விதைகள் நித்தம் விழட்டும் ..
விருட்சங்கள் செழித்து வளரட்டும்

அனைத்திற்கும் இணையானவள் தாய். ..!

கோல்களனைத்தும்
கொலை வெறியில் பூமியை
மோதுவதற்கே சுற்றி வருகின்றன
சூரிய குடும்பத்தில்...
காரணம்,
தங்களிடத்து அனைத்தும்
இருந்தாலும்
"தங்குவதற்கு" ஒரு நாதி இல்லையே
என்ற பொறமை தான்...
இப்படி சிறப்புள்ள பூமிக்கு
இணையானவள் "தாய்"...

விண்வெளியில் விளையாடிகொண்டிருக்கும்
தான் பிள்ளைகள்
விண்ணிலிருந்து விழும் போது
பிரிந்து தான் விழும்....
இதை எண்ணி விண்னெனும் தாய்
கதறி அழும்...
அந்த கண்ணீர் தான் மண்ணில்
மழையை ஒன்று சேர்க்கின்றன...
இப்படி பேரன்பு கொண்ட விண்ணிற்கு
இணையானவள் "தாய்"...

மூன்று நிமிடம் சுவாசிக்க மறந்தாலே
இவ்வுலகம் நம்மை நேசிக்க மறந்து விடும்
நானாக சுவாசிக்க மறுத்தாலும்
தானாக சுவாசம் தரும் பாசமுள்ள
காற்றுக்கு இணையானவள் "தாய்"...

பல ஆகாரம் உண்டாலும் அவையெல்லாம்
உயிராதாரம் ஆகாது
நீராகாரம் உண்டால் தான்
உயிராதாரம் நிலைப்படும் அந்த
நீருக்கு இணையானவள் "தாய்"...

நெருப்பிற்கு மட்டும் தான்
நல்லவர்கள்,கெட்டவர்கள்
தேவை,தேவையில்லை
என்று எதுவும் தெரியாமல்
பற்றினால் எரிவேன் என்று
அடம் பிடிக்கும் ...
நெருப்பிற்கு மட்டும் இனையானவளல்ல
தாய்...!நேர் மாறானவள்...
தீயதை மட்டுமே தீயெரிப்பாள்....

அன்னையர் தினம் - என்னையும் அழைத்து சென்று விடு...........,

அவளுக்கான
வாக்கியத்தை
தேடினேன்
கிடைக்கவில்லை

வார்த்தைகளில்
அடங்காதவளை
வாக்கியத்தில்
அடக்க முடியுமா?

அவளுக்கான
பரிசை
தேடினேன்
கிடைக்கவில்லை

எதுவுமே
ஈடுல்லாத உனக்கு
எதை அளிக்க
முடியும் என்னால்?

அவளுக்கான
விருப்பத்தை
தேடினேன்
கிடைக்கவில்லை

என் நலத்தை மட்டும்
விருப்பமாக
கொண்டவளுக்கு
எதை நான் அளிக்க?

அவளுக்கான
உலகத்தை
தேடினேன்
கிடைக்கவில்லை

உலகமே
நானாய் நினைத்தவளுக்கு
எந்த உலகத்தை
கொண்டு வர?

எனக்காக
எல்லாம்
செய்தவளே!!!
உனக்காக
எதை செய்வது?

நீ நீண்டநாள்
வாழ
ஆண்டவனிடம்
கேட்க நினைத்தேன்
நான் என்ன செய்வேன்?
அவனும்
உனக்கு கிழே

நான்
உனக்காக
எதை
நினைத்தாலும்
எல்லாம்
உனக்கு கிழே!!!

இன்று
அன்னையர்
தினமாம்!!!

எதுவும்
கொடுக்கமுடியாமல்
இன்றும்
உன்னிடமே கேட்கிறேன்

என்னை
கொண்டு வந்தவளே
நீ
போகும் பொழுது
என்னையும்
அழைத்து சென்று விடு

கணவனுக்காக
மதுரை எரிந்தது
அன்று
உனக்காக
உலகத்தையே
எரித்துவிடுவேன்
இன்று

நீ
இல்லாத
உலகம்
எனக்கு
சுடுகாடுதான்
ஆதலாலே
நீ
போகும் பொழுது
என்னையும்
அழைத்து சென்று விடு...........,




அளவளாவிச் சொல்லும்...!

என் இரு கண்
அது கெட்டு போனாலும்
நீ நிற்கும்
திசை அறிந்து
நான் திரும்புவேன்...
இதுவே நான்
உன் மேல் வைத்திருக்கும்
அன்பை அளவளாவிச் சொல்லும் ...!
அன்பே...!

உன் கண்கள் தீபாவளி...!

உன் கண்கள்
தான்
தீபாவளி...

"தீ" என்றால்
தீயைப் போன்ற
பார்வை உடையவள்...

"பா" என்றால்
பார்வையிலேயே
கொலை செய்பவள்...

"வளி" என்றால்
காற்று மண்டலத்தையே
கண்ணுக்குள் வைத்திருப்பவள்...

ஆக மொத்தம்
என் கணக்கு...

உன் கண்கள் தான்
தீபாவளி எனக்கு...!

மனதில் உள்ள பாரம்...!

கண்ணனுக்கு எட்டிய
தூரத்தில்
காதலி...

கண்ணனுக்கு எட்டாத
தூரத்தில்
காதல்...

எப்போது தான்
குறையுமோ
இந்த தூரம்...

அப்போது தான்
குறையும்
என்
மனதில் உள்ள பாரம்...!

தைரியமில்லாமல்...!

அவளிடத்து காதலை
சொல்ல
தைரியமில்லாமல்...!
கவிதை
சொல்கிறேன் என்று
கூறி
கவிதையைச் சொன்னேன்
ஒரு வரியில்
"காதல்" என்று
கவிதையும் கூறி
விட்டேன்
அவளிடத்து என்
காதலையும் கூறி
விட்டேன்...!

கை தொடும் வேளை...!

கை தொடும் வேளை...!
கழுத்தில் விழும் மாலை...!
விடியப் போகும் காலை...!
மலரப் போகும் சோலை...!
மடியப் போகும் பாலை...!
காற்றிலாடும் சேலை...!
காய வைப்பது என் வேலை...!
மனதிற்கு போடாதே தாளை...!
நீண்டு கொண்டிருக்கும் சாலை...!
கண்ணீரை பெருக்கும் கவலை...!
எனதாகப் போகிறது நாளை...!
சூரியன் மறையும் மாலை...!
என
புலம்பிக்கொண்டிருக்கிறது ...
உன்னால் நிரம்பி விட்ட
என் மனம் என்னும்
தண்ணீர் குவளை...!

நடிப்பு தொழிலில் ...!

கல்லூரியில்
மாணவனும் சரி...

கடலிலில்
மீனவனும் சரி...

ஒரே தொழில் தான்
செய்கின்றனர்...!

அவன் படிப்பு
தொழில்...
இவன் பிடிப்பு
தொழில்...

உன்னை பார்த்தவுடன்
நான் நடிப்பு தொழிலில்
இறங்கி விடுகிறேனடி....!

Post a Comment (0)
Previous Post Next Post