கால்மணி நேரமாகும் வரை...! - கண்ணோடு காயங்களா...! - உனக்கு பயன்படுகிறதே...!

கால்மணி நேரமாகும் வரை...!

சரியாக கால்மணி
நேரம்
குளித்து விட்டு வா..!
என்று கூறினாய்
ஒரு நாள்...!

அன்றிலிருந்து
குளித்தாலும்
வெளியே வர
மறுக்கிறேன்..!

நீ சொன்ன
கால்மணி நேரமாகும் வரை...!

கண்ணோடு காயங்களா...!

கண்ணோடு
காயங்களா...!

நீ
செய்த
மாயங்களா...!

நெஞ்சோடு
சாயங்களா...!

நீ
உற்றும்
தாயங்களா...!

எதில் மறந்தேன்
என்னை...!
என்றும் மறவேன்
உன்னை..!..!..!

உனக்கு பயன்படுகிறதே...!

சினங்கொண்ட
பார்வையில்
நீ
என்னை எரித்தாலும்..!

மனதோரம்
சிறு புன்னகை
உதிர்ப்பேன்...!

நீ எரிப்பதற்கு
என் உடல்
விறகாகவாவது
"உனக்கு பயன்படுகிறதே"...!
என்று..!

உன் வடிவத்தில் தான்...!

அழகிய ரோஜா
பெண் வடிவம்
எடுத்தாள்
உன் வடிவத்தில் தான்
இருக்கும்...!

அழகியமான்
மங்கை வடிவம்
எடுத்தாள்
உன் வடிவத்தில் தான்
இருக்கும்...!

அழகிய பசுவொன்று
பாவை வடிவம்
எடுத்தாள்
உன் வடிவத்தில் தான்
இருக்கும்...!

அன்புள்ள உயிரே...!

அங்கத்தேர் பவனி...!

தங்கத்தேர் பவனி...!
தமிழ் நாட்டில்
ஏதோ ஒரு
மூலையில்
நடக்கிறது
என்னை ஒன்றும்
பாதிக்கவில்லை...!

ஆனால்...

உன்
அங்கத்தேர் பவனி...!
என் மூளை
நரம்புகளை
எல்லாம்
அணுஅணுவாய் தாக்கி
என்னை
பாதிக்கிறதடி...!
பெண்ணே...!

Blind Child

கருவறையில் இருந்தவரை நான் வெளிச்சத்தை கண்டதில்லை.......

பிறந்த பிறகும் நான் கருவறையில் தான் இருக்கிறேன்.......

இப்படிக்கு ,

Blind Child....

பெண்

பெண் சாதிக்க பிறந்தவள்
இல்லை என்றாலும்
நேசிக்க பிறந்தவள் !
பிறந்த நொடியில் இருந்து
பெற்றோர்களை நேசித்து .....
வளந்த பிறகு
உடன் பிறப்புகளை நேசித்து....
வாழக்கையை வாழ கற்று கொண்டபொழுதில்
கல்வியையும்,நண்பர்களையும் நேசித்து....
திருமணம் முடிந்ததும்
கணவனையும்,புகுந்த வீட்டை நேசித்து...
அம்மா என்ற இடத்தை
அடைந்த பொழுதில்
பிள்ளைகளை நேசித்து....
முதுமையில்
உலகத்தையும்,தனிமையும் நேசித்து...

யார் சொன்னது ?
பெண்கள் சாதிக்க பிறந்தவர்கள்
இல்லையென்று
பெண்கள் நேசிக்க தெரிந்தவர்கள்
பெண்கள் நேசித்து வாழ்ந்தது
எல்லாம் சாதனை தான்
பெண்கள் வாழக்கையை
ஒரு சாதனை பயணம் ........
இதில் எங்கு சென்று தனியாக சாதிக்க இந்த உலகத்தில் ........

பறக்கும் ஆகாயத்தில் தானடா...!

வானம்
உன் காலுக்கு
கிழே என
நினைத்தால்...!
உன்
வாழ்கை
நடக்கும்
பூலோகத்திலல்லடா...!
பறக்கும்
ஆகாயத்தில் தானடா...!
நண்பனே...!

--- போக்கிரி கவிஞன் *ராஜா*

காத்திருக்கிறேன் வா.............

மனித
சமுதாயத்தை
மாற்றி அமைப்போம்
வா.............

மது
சமுதாயத்தை
வேரறுப்போம்
வா..........

கடற்கரை காதலை
கல்லறை
ஏற்றுவோம்
வா............

கல்வியில்லா சுழலை
காவு
வாங்குவோம்
வா...........

பிச்சைகாரர் இல்லா
உலகம்
செய்வோம்
வா............

யுத்தங்களை
சத்தமில்லாமல்
சுத்தம் செய்வோம்
வா...............

இதே
எண்ண அலைகள்
இருக்கும்யேன்றல்
இணைந்திட
வா...........

பல அலைகள்
இணைந்தால்
சுனாமி

காத்திருக்கிறேன் வா...............

கிராமத்து மேகங்கள்

மேகப்பந்தலில்
மெத்தை இட்டு வீற்றிருக்கும்
வெண்மணி முத்துக்களே...

காற்று வந்து காதல் கொள்ள
கலைத்துவிட்ட தேன்கூடாய்
சிதறி மண்ணில் விழுங்களேன்...

சித்திரை போயாச்சி வைகாசி வந்தாச்சி
வறண்ட நிலம் துளிர் காண
வானம் பார்த்து நேரம் போச்சு ..

நீல வானத்திலே மேகக்கூட்டம் வறண்டு போச்சு
நீண்ட நீரம் அழுது பார்த்தோம் , கண்ணீரும் வறண்டு போச்சு..

என்னிலில்லை நான்...!

இருபதாம் நூற்றாண்டுகள்
கடந்து
இருபத்தியொன்றாம்
நூற்றாண்டில் காலடி வைத்து
விட்டது
பூமியனும் நாடு...!

இருபது ஆண்டுகள் கடந்து
இருபத்தியொன்றாம்
ஆண்டில்
அடியடுது வைக்கிறது உன்
உடலெனும் கூடு...!

அதற்கு வாழ்த்து சொல்ல
இருக்கிறதே
நான் பட்ட பாடு...!

சொல்ல முடியாது
சொல்லில் வடிக்கிறேன்..

கற்க முடியாது
கல்லில் வடிக்கிறேன்..

படிக்க முடியாது
பாலில் வடிக்கிறேன்..

வான எல்லையை
இதுவரை கண்டதில்லை
உன்னில் கண்ட போது
என்னிலில்லை நான்....!
உன்னுள் கலந்து விட்டேனடா...!

பிறந்த நாள் வாழ்த்து...!

பூக்களின்
வித்து நீ...!

புன்னகையின்
சொத்து நீ...!

அவதாரம்
பத்து நீ...!

ஆண்களுக்கெல்லாம்
கெத்து நீ..!

பெண்களுக்கெல்லாம்
முத்து நீ ...!

உலக அன்னையர்களுக்கு
கொடுத்த தத்து நீ...!

நீ என்னை நட்பில்
பித்தாக்கிவிட்டாய்...!
அதை நான்
பூங்கொத்தாக்கிவிட்டேன்..!

பிறந்த நாள் வாழ்த்து கூற...!

வெள்ளி பருவம்...!

பள்ளி பருவத்தை
வெள்ளி பருவமாக்கிய
நண்பனே..!

நீ தள்ளி இருந்த போது
கொள்ளி வைக்காமல்
எரிந்தேனடா நான்...!

விளையாட்டை
விளையாட்டாக
எடுத்து கொள்ள வேண்டும்
என்று
விளையாட்டாக
நீ சொன்னதை
விளையாடும்போதெல்லாம்
நினைப்பேனடா!!..
உன்னையும்...உன் நட்பையும்...!

உன் நட்பை விட
நான் நினைத்ததில்லை..
நீ நினைத்தாலும்
தடுப்பதாயில்லை...
ஏனென்றால்
உன் எண்ணம் தன
என் எண்ணம்...!

வேண்டாம் மன்னிப்பு

நான் செய்யும் தவறுகளுக்கு என்றும்
மன்னிப்பு வேண்டாம்
தெரியாமல் செய்த தவறுக்கு
மன்னிப்பு கிடைத்தால்
அன்றிலிருந்து தூக்கம் போனது !
தெரிந்தே செய்த தவறுக்கு
மன்னிப்பு கிடைத்தால்
அன்றிலிருந்து வாழ்க்கை போனது!
நான் செய்த நன்மைகளுக்கும்
செய்யாத தீமைகளுக்கும் சேர்த்து
தண்டனைகளாகவே கொடுத்துவிடுங்கள்
எனக்கு மன்னிப்பு வேண்டாம்
அதன் வலி எனக்கு உறைக்காது..........

பெரியார் சாமி !

வெட்டு ஒன்னு,
துண்டு இரண்டு
என பேசிய
ஈரோட்டுகாரர்,
நடுரோட்டில்
சிலையாக உள்ளார்!

நாத்திகம் பேசும்
ஆசாமிகளுக்கு
சாமியாகி போனார்!

காதலி

நீ
சிரிக்க வேண்டுமென்பதற்காகவே
நான் பேசியதுண்டு.

நான் பேசுவதற்காகவே
நீ
சிரித்த நிஜம் தெரியாமல்.

சதா ரணம்...!

கண்ணுக்குள் கனவு பூக்குது
நெஞ்சுக்குள் உன் நினைவு தாக்குது
எதை பார்த்தாலும் மனம்
உன்னை நினைக்குது...!

உள்ளுக்குள் ஏதோ ஒரு பித்து பிடிக்குது
பித்தென்றால் அது சாதாரணம்
காதல் பித்தென்பதால் சதா "ரணம்"...!

சொல்லடி சரி என்று
பிடிவாதத்தின் உச்ச கட்டம் நீ..!
அதை எப்போது துச்சம் என நினைப்பாயோ நீ!

அப்போது அச்சம் விட்டு நீ கட்டி அணைப்பாயோ...
கா(தோ)லி(ழி)யே...!

உன்னையே தேடுகிறேன்...!

நான் உன்னை நேசிக்கிறேன்...
கவிதை புத்தகம் போல்
வாசிக்கிறேன்...
என்றும் உன்னால் தான்
சுவாசிக்கிறேன்...
தனிமையிலும் உன்னோடு தான்
பேசுகிறேன்...
என் மனதில் உன்னையே
தேடுகிறேன்...
காணவில்லையெனில் மனம்
வாடுகிறேன்...
உன்னிடம் பேசவே உன்னை
நாடுகிறேன்...
உன்னை கண்டாலோ வார்த்தைகள்
மௌனமாகி ஓடுகிறேன்....!
பெண்ணே....!

வாழ்வின் வெளிச்சம் நீ...!

அழகின் ஆலயம் நீ
அதில்
சேவகம் செய்யும் வாய்ப்பை
தருவாயா...!

அன்பின் மழை நீ
அதில்
முழுக்க நனையும் வாய்ப்பை
தருவாயா...!

அறிவின் சிகரம் நீ
அதில்
ஏறமுடியவில்லையென்றாலும்
அதை தொடும் வாய்ப்பையாவது
தருவாயா...!

வாழ்வின் வெளிச்சம் நீ
அதில்
நான் தெரியாவிட்டாலும்
உன் நிழலில் நிற்கும்
வாய்ப்பையாவது
தருவாயா...!

தேன் குணம் மாறாத
உன் இளமை
அதை
சுவைக்க முடியாவிட்டாலும்
ஒரு சொட்டு தந்து
என் தாகத்தை தீர்ப்பாயா.....!நீ..!

அவசியமாய் உழை !!!!!

அலங்கார கடையின்
கண்ணாடி பெட்டிக்குள் -
மிக வசதியாய் வாழ்ந்துவிட்டன,
வளர்ந்த பருவம் முடிந்தும்
வளர்த்த வசதியானது - இன்று
கடின உழைப்புக்கு மறுப்பு தெரிவித்து
தன்னை
வாங்கிய முதலாளியின் கால்களை
கடித்து வைத்தன -
புது செருப்புகள்

Post a Comment (0)
Previous Post Next Post