EARUMBU - KAKAIKAL!... - MALAITHULI!...

EARUMBU

ஆறறிவு படைத்த
மனிதர்களுக்கு
சுறுசுறுப்பாக
உழைக்க
கற்றுத்தரும்
ஓரறிவு உயிரினம்
"எறும்பு"

KAKAIKAL!...

தான்
உண்டு!...
வாழ்வது
வாழ்க்கை அல்ல
பகிர்ந்துண்டு
வாழ்வதுதான்
வாழ்க்கை
என
புரிய வைப்பது
"காக்கைகள்"

MALAITHULI!...

மிக மிக
உயரத்திலிருந்து
விழுந்து
தான், தற்கொலை
செய்து கொண்டு
பிறரை
வாழ வைக்கிறது
"மழைத்துளி"!...

UPPU!....

மனிதனுக்கு
நன்றி
உணர்வு வர
வெயிலில்
காய்கிறது
"உப்பு"!....

UDIYUM SURIYANKAL!.....PART-1

முகத்தின் மீது அரும்புகள்
முளைக்கும் பருவம்
முட்கள் மீது ரோஜாக்கள்
விழுகிற தருணம்!..

சரியானதை தவறாக பார்த்து
தவறானதை சரியென
நம்ப வைக்கும் பருவ வயது!

இதுவரை இழந்த நாட்களை
நினைக்காமல் இனி மேல்
இழக்க கூடாததை
இழக்க வைக்க போகும் காலம்!

புதைகுழியில் இருக்கும்
ஒட்டறை ரோஜாவை பறிக்க
கற்றையாக அறிவிழந்து
செல்ல வைக்க போகும் வேளை!

வாலிபம் அனைவர் வாழ்விலும்
இடர்ப்படும்,பொறுமை இழந்தால்
வாலிபம் இறக்க நேரிடும்!

கான்பனவற்றையெல்லாம்
அடைய துடிக்கும் மனது
அடைந்த பின்னும்
அதிலிருக்கும் வெறுமையை
உணர முடியாத வயது !

அன்னை வளர்ப்பில் அடங்கி
இருந்த பசுக்கள்
அகிலம் கண்ட மிதப்பில்
அடங்கா காளைகளாக
மாறும் நேரம்!

எதிர்ப்படும் மங்கையரை
துடிப்போடு தொட துடிக்கும்
காம இடிபட்ட மனது!

இளைஞனும் இளகிய மண்ணும்
ஒரே இரகம்
வடிவமைப்பதில் தான் இருக்கிறது
வாழ்வின் சுகம்!

கண்ணில் பட்ட கன்னியை
எண்ணியே கல்வியை
இழக்க வைக்கும் பருவம்!

கட்டி போடப்பட்டிருந்த
காதல் உணர்ச்சிகள்
கட்டவிழ்த்து விட்டுக்கொண்டு
எழுந்து வரும் வேளை!

வெண்மேகங்கள் காற்றடித்தால்
கலைவதைப் போல
ஆண் தேகங்கள் அகவிருளில்
மாட்டி அலைகழியும் பொழுது!

அச்சத்தை அச்சப்பட
வைக்கும் வயது
காதல் உச்சத்தை அடைய
காத்திருக்கும் மனது!

UDAIYUM SURIYANKAL!....PART-2

இளையான் இருந்த இடத்திலேயே
விண்ணை தொட்டாலும்
வியப்பதற்கு ஒன்றுமில்லை
அவன் மனதில் ஒரு
பெண் பட்ட பிறகு!

ஒரு பெண்ணிற்காக உயிரை
விட துணிவான்
பெற்றெடுத்த தாய்தந்தையை
மறந்து!

காதலிக்கு ஆபத்து என்றால்
கடலையும் சில நிமிடம்
வற்ற வைத்திடுவான்!
குளிர் பணிமலையிலும்
நெருப்பை பற்ற வைத்திடுவான்!

திருடுவது பாவம் என
கற்ற கல்வியை மறந்து
திருடுவது லாபம் என
ஆனந்திப்பான் காதலியை நினைந்து!

"ஓடுகிற பாம்பை மிதிக்கிற வயசு"
என்று இளைஞனை சொல்வார்கள்
"ஓடுகிற பெண்ணை துரத்தும்"
வயசிலிறுக்கிறவன் இளைஞன்
என பழமொழியை மாற்றியமைக்க
வேண்டும் இக்காலகட்டத்தில்!

இயற்கையினுள் கிடக்கின்ற
இரகசியங்களை இரசிக்க மாட்டான்
செயற்கையில் வெளிப்படும்
அம்பலங்களை இரசிக்க தவறமாட்டான்!

இளைஞனின் மூளை புதிய
உலகையே படைக்கும்
ஆனால் இவனின் மனது
இருக்கும் உலகையும் கெடுக்கும்!

உதய சூரியனை போல்
உலகம் தெரிய இளைஞன்
வாழ வேண்டும்!
மேகத்தினுள் மறைந்த
நட்சத்திரமாய் வாழக்கூடாது!

உலக உருண்டைக்குள்
உயிரை உருவாக்குவது
மட்டும் இளைஞன் வேலை இல்லை!

உலக உருண்டைக்குள்
உறவையும் வலுப்படுத்த
முயற்சி செய்ய வேண்டும்!

இருந்தும் இளைஞர்கள்
மங்கையரின் மனதை அடையவே
முயன்று முடியாத பட்சத்தில்
தங்களின் முடிவை தேடிக்கொள்கின்றனர்!
தினம் தினம் ஒருவராவது
மனது "உடையும் சூரியன்களாய்"
மறைகின்றனர் இவ்வுலகை விட்டு....!..!...!

பயமறியான்

கடித்து விடுமென்று
சிறுமியும்
அடித்து விடுவாலேன்று
நாயும்
பாதையை கடக்காமல்
பார்த்து கொண்டிருந்த - பொழுது
எனக்கு புரிந்தது

தன்னை
சாதித்து விடுவான் என்றும்
காலமும்
என்னை
மிதித்து விடுமென்று
நானும்
வாழ்க்கையை
வேடிக்கை
பார்த்து கொண்டிருந்ததோம்..........

சிறுமி கல்லெறிந்தும்
நாய் ஓட
என் கவலையும்
ஓடியது

"பயமறியான்
அனைத்தும்
அடைவான்"


கஷ்டங்கள்

உழைப்பு
உடலை
பலபடுத்தினால்
கஷ்டங்கள்
மனதை
பலபடுத்தும்.....


புதியவன்.மு

சீரழித்தவளே !.....

"சிட்டாடை "
உடுத்தி
என்னை சீரழித்தவளே!...

வண்ண "பட்டாடை"
உடுத்தி
எங்கு செல்கிறாய்!...

உன்னை "தொட்டாட"
வேண்டி அனுமதி
கேட்டால்

என்னை "விட்டோட"வே
ஏன் முயற்சி செய்கிறாய்

மனதார இறப்பேன் !....

அவளை கட்டி
அணைத்து
ஒட்டி உறவாடிய
நிலையில், இருக்கும்
அந்த தருணத்தில்
எனக்கு
மரணம்
நேர்ந்தாலும் கூட
என்
மங்கையவள்
மடியில் சாய்ந்து
மனதார இறப்பேன்!....

மிச்சத்தின் அர்த்தம்!.....

மிச்சம் என்பது
ஒரு
செயலை பாதியுடன்
"விட்டுச் செல்வது"
என்பது தான்
அர்த்தம்
என்றிருந்தேன் ....!
ஆனால்
அது
"உயிரையே எடுக்கும்"
என்ற
அர்த்தத்தை...
நீ முத்தம்
கொடுத்த போது
விட்டு சென்ற
மிச்சம்
எனக்கு உணர்த்தியது...!

தெருவழியே நீ சென்றால்!....

என்
தெருவழியே
நீ
சென்றால் ...
என்
மனம்
ஒரு வலியாய்
வலிக்கின்றது...!

அதை பார்த்து
உன் மனம்
மகிழ்ச்சியில்
களிக்கின்றது...!

என்னை
வேதனை படுத்தியதை ..
ஏதோ
சாதனை செய்து விட்டது
போல் எண்ணுகிறாயே
பெண்ணே..!

காதல் கதையை பற்றி...!

செந்நெல்
செழித்து
குலுங்க ...
செம்பட்டு ஓடை
நம் கால்களை
நனைக்க...

இருவரும்
கரை மேல்
அமர்ந்து
கதை பேசினோம்...

நம் காதல் கதையை
ஊர் பேசுகிறது
என்ற
கதையை பற்றி...!!!

எப்போது ஒன்றோடோன்றாக..!

தேங்கி நிற்கும்
அணைக்கட்டு...

அதில் விழித்தெழ
வைக்கும்
நீர்விழ்ச்சி..

அதில்
நாமிருவரும்
ஒன்றாக நீராடினோம்..

ஆம்
நீர்விழ்ச்சியில்
நீ
ஒன்றாக...!
நான்
ஒன்றாக...!

நாம்
எப்போது
ஒன்றோடோன்றாக..!
ஒட்டி
நீராடுவது
பெண்ணே..!...!..!

குழந்தையின் சிரிப்பு

இறைவன் படைத்து
இயல்பு கெடாமல்
தொடரும் பட்டியலில்
இன்றும் இருக்கிறது
குழந்தையின் சிரிப்பு!

காதலின் முடிவு

மழையின் முடிவு
மண்ணில்.
நதியின் முடிவு
கடலில்.
காற்றின் முடிவு..?
அதுவே நம் காதலின் முடிவும்!

நேசிப்பது நிஜம் என்றால்

ஒரு உயிரை நீ நேசிப்பது நிஜம் என்றால்
அதை பறவைப் போல் பறக்கவிடு...
அது உன்னை நேசிப்பது நிஜம் என்றால்
மீண்டும் உன்னை தேடி வரும்...

அம்மா

அம்மா ....

பிறந்தவுடன் சொன்னதும்..

உயிரை

வலியோடு முடிக்கும் போது சொல்வதும்,
அம்மா....

.
'அழகான, உணர்வான ஒற்றை சொல் அம்மா...!'

உன்
அன்பின் கதகதப்பும்,
வலிக்காத தண்டனைகளும்..,

இனி
யாராலும் தர முடியாது..அம்மா..!

கட்டெறும்பு கடித்த போதும் .,
காதல் போன போதும்..,
"அம்மா"
என்று சொல்லி
ஆறுதல் அடைந்தேன்..??

நீ
இங்கே இல்லாமல் போனதாய்
ஊர் சொல்கிறது..

ஆனால் இன்னமும்
என் காலைநேர
கனவில் வந்து அழகாக்குகிறாய்
என் நாட்களை...

அம்மா..
அழகாக்குகிறாய் என் நாட்களை...!!

என் அழகான வெட்க தொழிற்சாலையே...

என் அழகான வெட்க தொழிற்சாலையே...


உறக்கம் பிடிக்கும்..
உள்ளே
கனவாக நீ இருந்தால்..!!

உணவு பிடிக்கும்..
நீ
உருட்டி ஊட்டி விட்டால்..!!

மயங்குவது பிடிக்கும்..
மயிலிறகாக
உன் மடி கிடைத்தால்..!!

வர்ணம் பூசுவது பிடிக்கும்..
உன் உதட்டின் மேல்
என் உதட்டால் இடுவதாய் இருந்தால்..!!

மரணம்கூட பிடிக்கும்..
கடைசி மூச்சு
உன் தோளில் சாய்ந்து விடுவதாய் இருந்தால் ....!!

பயணசீட்டு...!

ஒரு பைசா
கூட
என்னிடம் இல்லை
என்று தெரிந்தும்
பேருந்தினில்
ஏறச்சொன்னாய் ...!

ஏன் என்று கேள்வி
கேட்காமல்
ஏறி வந்தேன்
உன்னுடன்...!

நீ என்னை காதலிக்கிறாய்
என்று காட்டி விட்டது

எனக்கும் சேர்த்து
எடுத்த
பயணசீட்டு .....!

Post a Comment (0)
Previous Post Next Post