கண் சிமிட்டும் நேரம் - கற்பகிரகம் - நினைவுகள்

கண் சிமிட்டும் நேரம்

கண் சிமிட்டும் நேரத்தில்
கூட காதலித்து கொண்டிருக்கிறேன்..

ஒரு முறையேனும் அவள்
என்னை பார்ப்பாள் என்று....


புதியவன்.மு

கற்பகிரகம்

காதலியும்
ஒரு வகையில்
கற்பகிரகம் தான்....
அவளிடமிருந்து
அருள் பெறவேண்டுமென்றால்
அவளை
சுற்றிதான் வரவேண்டும்...

புதியவன்.மு

நினைவுகள்

பலமுறை
கூறியும்
என்
பின்னால்
வருகிறது
காற்றை போல
அவளது
நினைவுகள்...

புதியவன்.மு

ஆயிரம் பூக்கள்

ஆயிரம் பூக்கள்
வரவேற்றன
என் காதலி
வரும் வழியில்
இலையுதிர் காலத்திலும்
வசந்தக்காலம்
வந்துகொண்டிருக்கிறது என்று...

புதியவன்.மு

சரஸ்வதி ,.....

புத்தகத்தை
கூட
தொட மறுக்கிறேன்
உன்னை தவிர
வேற எந்த பெண்ணையும்
பார்க்கமாட்டேன் என்பதற்காக...
காரணம்
அதில்
சரஸ்வதி
குடி இருக்கிறாளாம்....


புதியவன்.மு

நம்பிக்கை

பிரிவுகள் இன்றல்ல
தோல்விகள் புதிதல்ல
வெற்றிகள் குவியல
உறவுகள் ஒன்னுமில்ல
உறக்கமும் தெரியல
கனுவுகள் குறையல
கவிதைக்கு பஞ்சம்மில்ல
சாப்பாடுக்கு வழியல்ல
சங்கடத்துக்கு முடிவில்ல
வறுமையும் தொலையல
வருத்தமும் நெஞ்சுக்குள்ள- இருந்தாலும்
வாழ்கையும் கசக்கல
நம்பிக்கையும் போகல

சிரிப்பு

ஒரு மரத்தில் பூ மலர்கிற மாதிரி
அது உங்களிடமிருந்து உருவாகிறது

மரமும் நீங்களும்

மரமும் நீங்களும் இந்த மண்ணுக்குரியவர்கள்
நீங்களிருவரும் இதே மண்ணில் இதே பிரபஞ்சத்தில்
வேருன்றியவர்கள்

நினைவுகள்

வாழ
ஏங்கவில்லை
வலிகள்
முடியவில்லை
மறக்க
இயலவில்லை
நினைக்க
முயலவில்லை
இருந்தும்
துரத்துகிறது
அந்த நினைவு..............

வான் மேகம்
வையகம் வந்து
வெள்ள பனி
மெல்ல துளிர்க்கும் - பொழுதில்

ஒதுக்கிய
உறவுகளைவிட்டு
ஒதுங்கி வந்தவன்
மீண்டும்
உறவுகளை
தேடி செல்வதில்லை
அந்த நினைவுகள்
அழியபோவதில்லை


kadavul

இப்படி ஒரு சக்தி இல்லையனில் -இன்று
நான் இருந்திருப்பேன் கீழ்பாக்கத்தில் ....


NANBANUKKUM,THAIKKUM!...

நண்பனே!..
உனக்கும்,
என் தாய்க்கும்
சிறு வித்தியாசம் தான்!...
என்
தாய் உயிர் கொடுத்து
பிறக்க வைத்தாள்...
நீயோ,
இன்னொரு முறை
பிறக்க வைத்து
உயிர் கொடுத்துவிட்டாய்!....

உன்னால் முடியும் தம்பி

உன்னால் முடியும் தம்பி -நீ
உணர்ந்து கொள்ளு தம்பி
கண்போ லாகும் கல்வி-நீ
கற்று உயரு தம்பி


அரிய பெரிய சக்தி-உன்
அகத்தில் உண்டு தம்பி
இதனைப் புரிந்து கொண்டால்-நீ
ஏற்றம் பெறுவாய் தம்பி


உனக்குள் உள்ள ஒன்றே -இந்த
உலகை யாழும் சக்தி
மனத்தினாலே உணர்ந்து -நீ
வாழ்வில் வெற்றி கொள்ளு


உலகில் வாழ்ந்த பெரியோர்-இதை
உணர்ந்து வாழ்வை வென்றார்
பல்கலையும் கற்று -இந்தப்
பாரில் புகழைப் பதித்தார்


முடியும் என்று துணிந்து -நீ
முயல வேண்டும் எதிலும
படியும் அதிலே மனது -நீ
பார் புகழ உயர்வாய்


இறைவன் எமக்குத் தந்த
இணையில்லாத செல்வம்
நிறைந்த மனது தம்பி
நீ அறியவேண்டும் தம்பி


இதயம் என்ற வயலில்-நீ
எதையும் கேட்டுப் பெறலாம்
உதயமாகும் வாழ்வு இதை
உணர்தால் வெற்றி தம்பி


எண்ணம் வலிமை பெற்றால்
ஏற்ற முண்டு தம்பி
திண்ணமாக வெற்றி -எம்மைத்
தேடி வரும் தம்பி


இனியும் தயக்க மேனோ?-நீ
ஏற்றம் காண வேண்டும்
துளியும் தயக்க மின்றி-நீ
துணிந்து வாழு தம்பி.

வாழும் வழி தெரியணும்

ஆலமர நிழலிலே
அழகு மிகு பூனையார்
கோலமிடும் மங்கை போல்
குனிந்து நின்று முகர்ந்தனர்

எலியின் வாடை அடிக்கவே
ஏப்பம் வேறு விட்டனர்
சலிப்பில்லாமல் ஆலம் சருகிலே
சரிந்து கண்ணை மூடினர்

சிறிது நேரம் சென்ற பின்
சின்னப் பொந்தில் இருந்து ஓர்
எலியார் எட்டிப் பார்த்தனர்
எவருமில்லை என்றெண்ணி

மெல்ல வெளியே வந்தனர்
மேவி நாலு திசையிலும்
பொல்லாப் பூனை இருப்பதை
புரிந்திடாமல் அலைந்தனர்

மின்னல் வேகப் பாய்ச்சலில்
வீரப் பூனை பாய்ந்தனர்
என்ன செய்வோம் ஐயகோ!
எலியார் பூனை வாயிலே

கண்ணை மூடிப் படுப்பினும்
கயவரோடு கவனமாய்
மண்ணில் வாழப் பழகனும்
வாழும் வழி தெரியணும்.

இடைவெளி

நவீன இராமாயணங்கள்!

இராமனோ காட்டில்
இராத்திரி வேட்டையில்
சீதை கேட்காத
மான்களைத் தேடி! ...

சீதை அனுப்பும் குறுஞ்செய்தி
"என் எட்டடிக் கட்டிலில்
ஆறடி இடைவெளி"

மரம்

இது ரொம்பகாலம் முன்பு படித்தது என்கவிதை அல்ல - எழுதியவர் யாரெனத் தெரியாது!

மரம் வெட்டியே,
மெல்ல, மெல்ல,
என் பூக்களுக்கு
வலிக்கும்!...


இது தூது!

தாதி தூது தீது - தத்தும் தத்தை சொல்லாதே!
தூதி தூது ஒத்தித்தது தூது செல்லாது
தேது தித்து தொத்துத்தீது தெய்வம் வராது -இன்று
துத்தி தத்தும் தத்தை வாழ தித்தித்ததோது!

(திரைப்படம்: வானம்பாடி - பாடல்: கல்தோன்றி மண்தோன்றா...) பொருள்:
தாதி(பணியாள்) செல்கின்ற தூது தீமையில் முடியும்
தத்திச் செல்கின்ற கிளியால் பேசஇயலாது
தூது செல்லத்தக்க தோழியரோ விரைவில் செல்ல மாட்டார்கள் தெய்வத்திடம் முறையிட்டுக் கொண்டிருந்தாலும் தெய்வம் வருவதில்லை இன்றோ காதல் நோய் கொண்ட இந்த இளம் பெண் வாழும் வழியைக் கூறுவாயாக!






ஊடல்


இரவும் பகலும் ஏனடி மவுனம்?
இன்னுமா உனக்கு ஊடலில் கவனம்?
பின்னிரவில் என் ஆசைகள் தகனம்
மென்புருவல் கண்டதும் சலனம்
உன்னுறவின்றி வாழ்வே அதனம்
பிரிந்திடாதே இனியொரு தருணம்

காதலில் விழும் வரை...

வார்த்தைகள் புரியும் ... மௌனங்கள் புரிவதில்லை
வான்நிலவு ஒளிரும்... வளைபிறை கொல்வதில்லை
ஊர்நடுவே கூட்டத்தில்... ஒற்றையாய் உணர்ந்ததில்லை
உண்ணாத பசிநேரம்... ஒரு பார்வைப் பசி தீர்த்ததில்லை கனவு வரும் துயிலுண்டு... கனவு வேண்டி துயின்றதில்லை
கண்பட்டுக் கதிமோட்சம் கிட்டுமென்று நினைத்ததில்லை
சாடைச்சொல்லொன்று சர்க்கரையிற் தேனாய் இனித்ததில்லை
கலைந்த மயிர் திருத்திச் சாலை வழி நின்றதில்லை மாயக்கண் காட்டும் மயக்கம் அறிந்ததில்லை
நேயக் கணை நெஞ்சாழம் தைத்ததில்லை
சாயூங்காலம் வந்தால் சடுதியில் மனம் பதைத்ததில்லை
"நோயோ மெலிந்தாயே!" என ஊரார் உரைத்ததில்லை நாளை முகம் பார்ப்பேனென்று நெஞ்சந் தேற்றிக் கொண்டதில்லை
நாளைவரும் காலைக்கென நள்ளிரவு விழித்ததில்லை
காலை விடிய நேரமெண்ணி இரவெல்லாம் நொந்ததில்லை
மாலை வரும் வரவுக்காக மயங்கித் தயங்கிக் காத்ததில்லை

சொல்லா வார்த்தையின் சுகம்

சொல்லா வார்த்தையின் சுகம் - நீ
நில்லா காலத்தின் பதம்
சல்லாபத்தின் சுகம் - உனை
மெல்ல நினைத்தாலே மிகும்
இல்லா நேரத்தில் வெறும் - வெகுப்
பொல்லாக் கனவூகள் வரும்
வில்லாய் வளையுமுன் புருவம் - எனைக்
கொல்லாமற் கொல்லுமுன் பருவம்
கல்லாய் இருந்த என் கருவம் - உனைக்
கண்டதும் பனியாய்க் கலையும்
நில்லாய் நீயொரு நிமிடம் - அன்பே
சொல்லாய் ஒரு சொல் அமுதம்

அழுகிறது வலி

தற்கொலைக்கு தயாராக இருக்கும் மனிதா
ஒரு நிமிடம் என்றது வலி ....
உன் தற்கொலைக்கு என்ன கரணம்?

வாழக்கையில் ஒரு பிடிப்பு இல்லை
வேலை இல்லை என்று கூறிக்கொண்டே
சென்றான் மனிதன் ...
சரி செய்துகொள் தற்கொலையை
ஆனால் ஒரு நிபர்ந்தனை
நீ பிறக்கும் போது
உன் அன்னை அடைந்த
பிரசவ வலியின்
ஒரு நொடி வலியை சமம் செய்யும்
அளவிற்கு நீ ,அவளுக்கு
நிம்மதியும், சந்தோஷமும்
பெருமையும் அளித்து இருந்தால்
செய்துகொள்
அப்படி இல்லையென்றால்
வலியகியை நான் மட்டும் அல்ல
மரணம் கூட உன்னை
தொடுவதற்க்கு வெட்க்கபட்டு
உன்னை நெருங்காது
தற்கொலை செய்துகொண்டு
நீ கண் முடிவிடுவயை
பிறகு! உன் தாய்
உன் உடலை பார்த்து
அழுகும் நேரத்தில் ...
எனக்கு மட்டும் தெரிந்த ஒன்று
உன்னை பெற்று எடுக்க
அவள் அடைந்த வலியை விட
இது கொடுமை
அந்த வலியை என்னால மட்டுமே உணரமுடியும்
வேண்டாம் தற்கொலை
அந்த வலி எனக்கு வேண்டாம்
என்றது வலி கண்ணிருடன்
மனிதா உன் முடிவு என்ன?

Post a Comment (0)
Previous Post Next Post