காதல் பேசுவதில்லை நாத்திகம்
கண்கள் இரண்டும் பேசுது-உன்
மனம் என்னை நினைக்குது!
உதடுகள் அதை மறைக்குது
முகம் குங்குமம் போன்று சிவக்குது
குலை தள்ளாத வாழையே-உன்
மடி நான் விளையாடும் சோலையே
காலம் கனியும்வரை கிருஷ்ணலீலையே
கடவுள் நினைத்தால் கல்யாணமாலையே
காதல் என்பது தெய்வீகம்
கன்னியின் அழகு பூர்வீகம்
காதலர் உறவு சாத்விகம்
காதல் பேசுவதில்லை நாத்திகம்!
காதலை சொல்லிவிடு...
ஓரப்பார்வையில் அழைத்து-மனதிற்கு
ஒத்தடம் தந்திடும் பெண்ணே!
காதலின்பம் காணும்வரை
மனம் தூங்குமா!
உருட்டும் விழியில்
உயிரை குடிக்கிறாய்!
பின்னழகில் என்
இளமை பிழிகிறாய்!
முன்னழகை போர்த்தி
வியக்க வைக்கிறாய்!
முழுநிலவு கற்பனையில்
வியர்த்து போகிறேன்!
மனக்காயம் ஆறிட
மருந்து தருவாளோ!
கற்பனை தெளித்து
கவிதை தருவாளோ!
மனதின் பாரம் இறக்க
மங்கை நிலவு வருவாளோ-இல்லை
மறந்துவிடச் சொல்லி
மதுவை பரிசாக தருவாளோ
எண்ணி எண்ணி பித்தானதடி
எல்லா வேலையும் தடுமாறுதடி
கருணை செய்தால் கைசேர்ப்பேன்
ஒருவார்த்தை போதும் வாய்மொழியே!
நட்பு
அன்போடு தியாகம் பாசமோடு நேசம்
இந்நான்கும் இதயத்தோடு இதயம் கலந்து
உயிருக்குயிராய் உடன் பிறப்பாய்-பழகி
வாழ்வதே நல்ல நட்பு
நாடு,பொன்,பொருள் கொடுத்து
நல்லேவல் புரிந்து இனிதே அவர்தம்
சேவகம் செய்து பெற்றிடல் வேண்டும்
நன்றி மறவாதவர் நட்பு
இன்பம் துன்பம் இரண்டும் பகிர்ந்து
ஈருடல் ஓருயிராய் என்றும் கலந்து
குறையைத் தனிமையில் கடிந்து- நிறையை
பலர்முன் பாராட்டுதல் நட்பு
உள்ளம் கலந்து உவகையுடன் உறவாடி
உடலால் பிரியும் நேரம் - அய்யோ
பிரிகிறோம் என்றெண்ணி மனம்தவிப்பது
மாசற்ற சிறந்த நட்பு
நண்பன் துன்பம் தன் துன்பம்
நண்பன் இழிவு தன் இழிவு
நண்பன் இன்பம் தனது- என்றெண்ணி
கலப்பதே உயர்ந்த நட்பு
ஒற்றை ரோஜா
தண்டவாளத்தில்
தலை சாய்த்து
படுத்திருக்கும்
ஒற்றை ரோஜா
என் காதல்...!
நீ
என்னை மீட்க
நடந்து வருவாயா?
இல்லை
ரயிலில் வருவாயா?
மனிதனே நில்....
அடைபட்ட வேலிக்குள் -ஆட்டு
மந்தையென வாழும் மனிதர்களே
மனம் இருப்பதை மறந்து-உன்
மனசாட்சி விற்றுப்பணம் தேடும் பித்தர்களே
சூது, பொறாமை, காமம், வஞ்சம்
எல்லாம் ஒவ்வொருவனில் தஞ்சம்
ஏய்த்துப் பிழைப்பது இரக்கமின்றி
இறைவனை பழிப்பது- காணும்
பெண்ணையெல்லாம் பள்ளிக்கழைப்பது
கூழைக்கும்பிடு போட்டுக் குழைவது
பின்னாடி சென்று முதுகில் குத்துவது
பதவிதேடிக் காலை பிடிப்பது- உன்
உதவி தேடி வருவோரை உதைப்பது
பணம் பணம் பணம் இதுவே
உன் லட்சியம் - அதனால்
மனிதனுக்கு மனிதன் அலட்சியம்
மனசாட்சி விற்று பொய்சாட்சி கூறுவான் கோர்ட்டிலே
மாங்கல்யம் விற்றுக் குடித்துவிட்டு புரளுவான் ரோட்டிலே!
பணம் தேடியலைவான் கிடைத்தாலும்
திருப்தி அடையான்!
நாடு என்பான் நம்மால் ஆனதென்பான்
அத்தனையும் விளம்பரம்- வீட்டில்
சென்று நான் என்பான்
நமக்கு நாமே நடத்தும் கண்கட்டு வித்தையிது
காக்கிச் சட்டையில் களங்கம்
காவியுடையும் அசுத்தம்
வெள்ளையுடையும் கபடம் - தேடுகிறேன்
மனிதனைத்தான்!
சமுதாய அந்தஸ்து போலிக்கவுரவம் தேடி
அடுத்தவனை ஏமாற்றி
இவனை இவனே ஏமாற்றி
வாழ்க்கையில் வசதி பெற விளம்பரம் பெற
பொருள் குவிக்க
அங்குமிங்கும் ஓடி, ஆடி முடிவில்
எஞ்ஞான்மின்றி விஞ்ஞானயுலகில்
முட்டாளாய் மெய்ஞானயுலகில்
பாவியாய் ஆவியாய் கலக்கிறார்.
காதல்....!
கண்களை
முட்டுகிறது....
இதயம்
திறக்கிறது....
காதல்....!
தோற்றுப் போவதே மேல்
காதலிக்காமல்
இருப்பதை
விட காதலித்து
தோற்றுப் போவதே
மேல்...!
தூய அன்பு
எதிர்ப்புகள்
அற்ற நெஞ்சங்களின்
தூய அன்பு
காலத்தால் பிரிவதில்லல்
என்றும்
அழிவதில்லை
இரகசியமானது
கடவுளை விட
இரகசியமானதும்
பெண்மையை விட
மென்மையானதும்
"காதல்"
அதை முதல் கற்றுக்கொள்...!
என் வாழ்க்கை
முதல் முறை
பார்த்த போதே
முடிவு செய்துவிட்டேன்
நீ தான்
என் வாழ்க்கையை
முடித்து வைக்க போகிறாய்
என்பது
தெரியாமல்...!
தேடுகிறேன்
கடலில் விழுந்த
மழைத்துளியைத்
தேடுவது போல்
தேடுகிறேன்
உன் கண்களின்
வழியே
என் இதயத்தை....!
ஞாபகம்
நான் எப்போது
உன்னை நினைக்க
ஆரம்பித்தேனோ
அப்போதே என்னை
மறந்துவிட்டேன்
அதனால் தான் என் காதலை
உன்னிடம்
சொல்ல வேண்டும் என்கிற
ஞாபகம் கூட எனக்கு வரவில்லை...!
மரங்கொத்தி
என் மனதை
கொத்திவிட்டு
கூடுகட்டி
குடியும் ஏறிவிட்ட
மரங்கொத்தி
பறவை நீ...
என் மனதை
கொத்தி விடு
போகாதே...!
பிஞ்சு இதயத்தால்
நான் உன்னை
காதலிக்கிறேன் என்பதற்காக மட்டும்
நீ
என்னை காதலித்து
விடாதே...!
பெண்ணே
என் கொடிய காதலை
உன் பிஞ்சு இதயத்தால்
புரிந்து கொள்ள முடியாது...!
மௌன அஞ்சலி
நீ யாருக்கோ
செய்த மௌன அஞ்சலியை
பார்த்து எனக்கும்
செய்து விட தோன்றியது
அப்போதாவது
ஏன் மீது இறக்கம்
வருமா?
இறக்கம்
உன் கண்கள்
வெட்டிவைத்த
ஆழ்துளை கிணற்றில்
விழுந்த சிறுவன் நான்
இறக்கம் காட்ட
மாட்டாயா...!
இனம்புரியாத மொழி
காதல் ஒரு
இனம்புரியாத மொழி
பெண்ணே
தயவு செய்து
ஊமையாக்கி விட்டு போகாதே...!
சமாதி
உன் வார்த்தைகள்
அற்ற சமாதியில்
உறங்குகின்றது
நம் காதல்....
என்று வந்து உயிர்பிக்கப்
போகிறாய்
என் உயிரே...!
காதல்
காதல்
என்பது சொல்லிப்
புரிவதில்லை...!
உனக்கு சொன்னாலும்
புரிவதில்லை...!
வாழ்க்கை
வாழ்க்கை
வாழ்வதற்க்கே...!
வருத்த படாதே
என்னை
வருத்திப் படுத்தாதே...!