ஒரு முறை
காதல் ஒரு முறை
தான் வரும்
மறுமுறை வராது என்றால்
உன் காதல்
தூய்மையானது
என் காதல்
பொய்யானதா ?
கடிகார முள்
என்னதான் செய்தும்
அதே இடத்தில் தான்
சுற்றிக் கொண்டிருக்கிறது
கடிகார முள் போல்
என் காதல்...!
காணாமலேயே
நேற்று கண்டு
இன்று காதலித்து
நாளை காணாமல்
போவதாக இருந்தால்
சொல்லி விடு
அன்பே !
நான்
உண்மையில்
காணாமலேயே
போய்விடுகிறேன்...!
உன் காதல்
உன் காதல்
நிறைவேராததாலா
என் காதலை
நிறைவேற்ற விடாமல்
தடுக்கிறாய்....!
காதலின் ஆழத்தை
என் காதலின் ஆழத்தை
உனக்கு புரிய வைக்காமல்
விடமாட்டேன்,,,,
"உன்னையும்"
என்
"உயிரையும்"
இதயம்
உன் பிடிவாதம்
எனக்கு பிடிக்கிறது அதனால்
என்னவோ
என் இதயம் கிடந்து
துடிக்கிறது...!
ஒளித்து
சில காலமாக
எனக்குள் நானே
ஒளிந்து கொண்டிருந்தேன்
இப்பொழுது
எனக்குள் உன்னையும்
ஒளித்து கொண்டிருக்கிறேன் !
எனக்கே தெரியாமல்
அடிபட்டதை கூராது
கவலைப்படாதே
உன் பதில் வரும் வரை
நான் உன்னை காதலிபதாக
யாருக்கும்
சொல்லமாட்டேன்...
என் இதயம்
அடித்து கூறும்
அடிபட்டதை கூராது...!
காயம்
மருந்திட்டுக் கொள்ள மனம் இல்லை
மருந்திட்டும் மாற்றமில்லை
என் மனதில்
காயம்
என் காயங்களிலும் கசிகிறது
என் காதல் !
நிச்சயம்
என் நிழலுக்கே
இதயம் உள்ள போது
உனக்கும் நிச்சயம் இருக்கும்
ஏனெனில்
என் இதயத்தில்
நீ
தான் இருக்கிறாய்...!
என் கல்லறை
முடிவாக கேட்கிறேன்
முடியாது என்றால்
முடித்து வைப்பாயா ?
உன் கால் பட்ட
இடத்தில்
என் கல்லறை....!
இரு ஜீவன்கள்
மறுஜென்மத்தின் வாசலில்
இரு ஜீவன்கள்
காதல்....!
உடமை
உன்னை மட்டும் அல்ல
உன் உடமைகளையும்
நேசிக்கிறேன்
உனக்கே தெரியாமல்...!
உய்வதெப்படி என் காதல்
கண்ணில் நடமிடும் காரிகையே
காணக் கிடைக்குமோ தரிசனம்
நாட்டுக்கப்பால் இருந்தாலும்
விட்டுக்குள் மறைந்தாலும்
எப்பாடுபட்டும் காண துடிக்குது மனம்
கூப்பாடிட்டு உளறுது தினம்
தெய்வச் சிலையிலும் நீயே
உய்வதெப்படி என் காதல்!
பார்வை தூது விடு
அப்பாவியை கொஞ்சம் வாழ விடு
ஒருமொழி சொல்லி உன்
ஓரக்கண்ணால் அழைப்புவிடு
திருமுகம் காட்டி புன்னகையில்
நேர் முகப் பார்வை வீசி விடு
நிலவு முகம் படித்து எனக்கு
மறுமுகம் மலர்ந்து விடு
நீ
நீ
என்னை நேசிக்கவே
யோசிக்கிறாய் !
நான் உன்னை சுவாசிக்கவே
யாசிக்கிறேன் !
ஒற்றை ரோஜா
ரோஜா கூட்ட நடுவிலமர்ந்து
ராஜாவை தேடும் ராணியே!
காதல் வரம் தந்தென்னை
கவிஞனாக்கிய வீணையில்லா வாணியே!
கண்களால் வடம் பூட்டி
மனத்தேரை இழுக்கிறாய்!
பெண்மையின் உயர்வைபேசி
வானம் அளக்கிறாய்!
வான வாசலில் நீயிட்ட
புள்ளிகள் நட்சத்திரம்!
வானத் தூரிகையில் நீ
வரைந்த ஓவியம் சந்திரன்!
நீ உடுத்தும் சேலையிலும்
பூக்கள் பூக்குது!
நீ சூடுவதால் மலர்களில்
வாசம் சேருது!
ஒரு பார்வையில் விதைக்கிறாய்
ஒரு பார்வையில் வதைக்கிறாய்
தெருப்பாடகனாய் சுற்றவிட்டு
காதல் போதை ஊட்டினாய்!
காதலுக்கு முன்பு என்
மனதில் கற்றை ரோஜா!
காதல் தேவதை உனைக்
கண்ட பிறகு நீமட்டும்
ஒற்றை ரோஜாவாய்....
இதயமே இல்லாததாலா
உன் இதயத்தில் என்னை
வைதிருப்பதாலா ?
அதை எனக்கு
தர மறுக்கிறாய்
இல்லை
இதயமே இல்லாததாலா ?
என்னை நீ வெறுக்கிறாய்...!
கன்னியின் கோரிக்கை
தேடும் காதல் சேரவேண்டும்
வாடும் பூமுகம் மலரவேண்டும்
நாடும் நலங்கள் சூழவேண்டும்
பாடும் கலைஞன் வாழ்த்த
பாவை பரதம் ஆடவேண்டும்!
காடாம் மனதில் கண்கள்கட்டி
கன்னி வழியறியாது தவிக்கிறேன்
நாடாம் நாயகன் உறவு- நங்கைக்கு
கூடாம் காதலன் மனது!
அவர் விதி என்னைக்காண
அருள் புரிந்திடு இறைவா
ஆழ்கடலில் மூழ்கும் எனைமீட்டு
அன்பு மனக்கரை சேர்த்திடு தலைவா!
பருவக் கிளிகள்
பாடும் கிளிகள் இரண்டு
பருவம் வந்தது என்று
துள்ளிப் பாடி ஆடும்-தினம்
காதல் சுவையில் கூடும்!
செக்க சிவந்த வானம்-என்
பூமகள் இளதேகம்!
வட்ட வடிவ மதியம்-என்
காதலியின் வதனம்!
அழகில் மயங்கி சென்றேன்
ஆசையின் எல்லையில் நின்றேன்!
அன்புமீறி அழுதாள்-என்
காலில் வீழ்ந்து தொழுதாள்!
உயிருடன் கலந்த அவளை
அணைத்து நானும் மகிழ்ந்தேன்!
துகில்மூடி வருவாள்-மெல்ல
துடியிடை தொட நெளிவாள்!
விலகி சென்று நிற்பாள்-மனதில்
எண்ணி மகிழ்வாள்-கொண்ட
நாணம் அடக்கி வருவாள்
நாயகன் விருப்பம் தீர்ப்பாள்!
உயிருடன் கலந்த அவளை
அணைத்து நானும் மகிழ்ந்தேன்!
மரண வேதனை
உன்னிடம் சொல்லாமல்
இருந்த போது
மன வேதனை
சொல்லிய பின்பு
மரண வேதனை
நீ யோ
மறுத்தால்
என்னை நீ
வெறுத்தால்