இவள் அழுகின்றாள் | Alukai

இவள் அழுகின்றாள் | Alukai
Alukai
Ival Alukindraal

சிந்தனை விட்டு அகல மறுக்கும் 
சிலுவையில் அறையப்பட்ட
குருதி கசிந்த நினைவுகள் அது!

விசா எதுவும் இல்லாமல் 
விண்ணோடு உறவு கொண்டு 
வீழ்த்த வருகிறது 
சொந்த ஊர் சோகங்கள்!

உறவு தேடி வாழ வந்தவளை 
வாழும் உறவுகள் சொன்னது
அகதி இவள் என்று!

கருவாய் வந்த நினைவுகள் 
மழலையாய் முதிர்ச்சி பெற
அனைத்துக் கொண்டாள் இவள்.
சோகங்களின் அன்னை இவளோ?

கருவிழி சிந்த மறந்த கண்ணீரை
இவள் இதயம் தினம் சிந்தும்.
நித்திரை என்னவென்று அறியா
இவளின் ஆழ்மனது முனகல்கள்
சோகங்களின் தாலாட்டுகள்!

அளவுகோல் கொண்டு அளவிடமுடியா
அளவில்லா சோகங்கள் இவளோடு
நிழற்படம் இவள் எடுக்க 
நிஜமாய் தெரிகிறது சோகங்கள்!

ஊனம் இல்லா உள்ளத்தால் அழுது 
இரு வரி இதழ்களாள் சிரித்து
மெய்தனை கசியாமல் மறைத்து 
சோகம் வெளிக் கொணராதவள்!

நரகம் சென்றது இவள் சந்தோசம்
நடை பிணமாய் இவள் வாழ்க்கை 
நான் ஏது செய்வேன்? 
இவள் அழுகின்றாள் அழுகின்றாள்!





Post a Comment (0)
Previous Post Next Post