ஒட்டு

ஒட்டு
ஒட்டு
ஒட்டு

சில நொடியில் தன் நிலை மறந்து 
விரல் நுனியில் உயிர் தனை இழந்து 
ஓட்டு போடும் அடையாள மை 
ஒவ்வொரு குடி மகனின் தலை எழுத்து!

ஒரு ஒட்டு என்ன மாற்றம் செய்யும் 
என்றொரு சிந்தனை வந்தால்...
சில துளி பெரு வெள்ளம் 
கரை புரளும் ஆறு, கடல் அதற்கு சாட்சி!

அரசியல்வாதி என்று ஒரு பெயர் கொண்டு 
மேடைக்கு மேடை தினம் ஒரு பொய் 
வெள்ளை வேஷ்டி வெள்ளை சட்டை 
உண்மைக்கு அல்லவா உகந்தது?

சரியான வாக்கு நாம் அளித்தால் 
கண் எதிரே பொய் பேச்சு 
கண் தெரியாமலே போகும்
அக கண் தெரிந்து வாக்கு அளியுங்கள்!

ஜனங்களின் நாயகனாய் ஜனநாயகம் 
உங்கள் வாக்கு  உங்கள் உரிமை
பணங்களின் நாயகனாய் பணநாயகம் 
விலை போன வாக்கா உங்கள் உரிமை ?

தொகுதியின் வேட்பாளர் அலசல் 
நிச்சயம் ஒரு தொலைநோக்கு பார்வை
ஊழல் ரவுடியிசம் மூளை அறியும் 
சேவை மனம்  எது வென்று புரியும்!

நாடும் வீடும் சுக நலம் பெற 
சின்னம் மட்டும் விழி நோக்காது 
சிந்தனை சொல்லும் ஒரு தெளிவில் 
உண்மையாய் உணர்வாய் வாக்களிப்போம்!

ஜெய்ஹிந்த்!...




Post a Comment (0)
Previous Post Next Post