காதலின் எதிர்பார்ப்பு | Love expectation
Love Expectation |
கவிதையோடு காலம் தள்ளி
கண்ணீர் சிந்தி விழிகள் பழுது
இருவிழிகள் இயல்பு நிலை திரும்புமா?
என் அகம் அறிந்த அலைபேசி
வேலை நிறுத்தம் செய்யுது
உன் குரல் கேக்க துடிக்குது!
உணர்வுகளையும் வலிகளையும்
உன்னோடு பகிர்ந்தேன்.
இதழ் திறந்து நீ பேசாமல் இருக்க
என் அன்பே! நான் இனி என்ன செய்வேன்?
கண்ணீரோடு உன் நினைவுகள் தீண்ட
என் கரம் தொட்ட உன் நிழற்படம்
விழி சிந்தும் கண்ணீரில் கரையுதே!
இறைவனே இறங்கி வந்து
அன்பாய் ஓர் வரம் தந்தாலும்
என் அன்பே! என் காதலே!
உன்னைப் போல் எவர் அன்பு தருவர்?
எழுதிய கவிதைகளை உன்னிடம் சமர்ப்பித்து
உன் இதழ் கொண்டு நீ வாசிக்க
சிந்திய உன் இதழ் காற்றை
இயற்கையது தழுவாமல்
நான் அதை சுவாசித்தேன்.
என் அன்பே!
இனி எவர் இதழ் காற்றை சுவாசிப்பது?
உன் விரல் தொடா என் விரல்கள்
கைரேகை அது தேய்மானம் கொள்ளாமல்
ஆறடி நிலம் தன்னில் மறையுமோ?
விதியும் வீதியும் மானுடர்க்கு உரியது
இதில் நீ யென்ன நானென்ன?
என்றாவது ஒரு நாள்
விதி வென்று சென்று விட
வீதியில் நான் வீழ்ந்தேன் என்றால்
ஆறடி நிலம் மட்டும் எனதென்று
நிறைவேறா ஆசையோடு நான் சென்றால்
என் அன்பே நீ என்ன செய்வாய்?
இரு விழியும் பார்வை யிழந்து
இருள் சூழ்ந்த உலகில் நான் நிற்க
என் காதல் அது என்னா யிற்று?
இறைவனுக்கும் உனக்கும் தான் வெளிச்சம்!