உழைப்பாளர் தினம் - May 1
![]() |
மே தொழிலாளர் தினம் |
உன் விரல் ரேகையில்
உலவுகிறது
உலகத்தின் விதி ரேகைகள்!
உலகிற்கான நீரூற்றாம்
உன் வியர்வைத் துளியில்
உலகம் தன் தாகம் தணிக்கிறது!
உலகத்தின் பாரம்
உந்தன் பாதங்களில்
உயிரோட்டம் கொள்கிறது!
உயிர் இழந்து வாடிய பூக்களும்
உழைப்பாளியின் முயற்சியால்
உலகத்தின் கூடையில் பூக்களாகின!
உடலையும் உழைப்பையும்
உணர்வையும் உலகிற்காய் எழுதி
உலகிற்காய் கையொப்பம் இட்டாய்!
உனக்கு முதுமை எட்டினாலும்
உழைப்பு முதுமை அடையவில்லை- ஆதலால்
உலகம் கிழவன் ஆகவில்லை!
உலகத்தின் இதயத் துடிப்பு
உந்தன் இதயத்தில்
உலக முன்னேற்றம் உனது கரத்தில் !