சுதந்திரம் கவிதை | Suthanthiram Kavithai
![]() |
Suthanthiram Kavithai |
என் அன்னை சுவாசித்தாள்
சுதந்திரக் காற்று - ஆதலால்
கருவறையில் சுவாசித்துக் கொண்டேன்
நானும் சுதந்திரக் காற்றை!
மறைமுக சிறகுகள் கொண்டு
கம்பீரமாய் பறக்கிறது தேசிய கோடி
சிறகு படைத்த பிரம்மாக்கள்
சுதந்திர போராட்ட வீரர்கள்!
தேசிய கோடியில் சில நிறமுண்டு
நிறத்தினில் சில காரணம் உண்டு
காரணத்தில் சில குருதி உண்டு
குருதியில் ஒரு வரலாறு உண்டு!
வீதியெங்கும் சுதந்திரக் காற்று
வானெங்கும் சுதந்திர மேகங்கள்
இதழில் சுதந்திர வார்த்தைகள்
எங்கும் சுதந்திரம் எதிலும் சுதந்திரம்!
அடைக்கலம் எங்கும் இல்லை
அடிமைகளாய் எங்கும் இல்லை
அடிமைகளாய் வாழ்ந்தவர்கள்
அறுத்துவிட்ட சங்கிலியால்!
நிசப்தம் வேண்டாம்
சுதந்திர வீரர்களின்
கல்லறை முன்னே
உரக்கச் சொல்லலாம் !
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!