உன்னோடு என் உயிர் | unnodu en uyir
இரவின் புலம்பல் விடியல் வரை
விடியலில் அலுவலக போலி வாழ்வு
நீ இல்லா வாழ்வில் புரிகிறது
காதல் வாழ்வு என்னவென்று!
கண்ணீர் துளிகள் விழியில் ஊற
கவிதைக்குள் கல்லறை கட்டுகிறேன்!
கவிதை மெய்யன்று பலபேர் வாதம்
என் கவிதை பொய்யன்று உன் வாதம்!
விளகேற்றும் மாலை வேளையில்
விழியோடு ஒட்டிக் கொள்வாய்!
விழியில் ஒட்டிய உன்னை தேட
வீணாய் போகிறது என் தேடல்கள்!
உன் நிழற்படம் தினம் வருடி
விரல் நுனியில் உயிர் வளர்த்தேன்!
விஷம் அருந்தி உயிர் பிரிய
விரல் நுனி உதவுமா? புலம்புகிறேன்!
உன்னோடு பழகிய நாட்களால்
காதல் வாழ்வில் பற்று கொண்டேன்!
எங்கோ நீ தொலைவில் இருக்க
உலக வாழ்வில் விடை பெறலாம்!
உயிரை திரட்டி உள்ளைங்கையில்
காதல் ரேகையில் வைக்கின்றேன்!
உன் உள்ளங்கை ரேகை தொட்டு
உன் மடியில் உயிர் பிரிவேன்!