ஆசிரியர் தினம் | Aasiriyar thinam | Teachers Day
![]() |
Aasiriyar Thinam |
பள்ளி தொடா மழலையாய்
மழலை வார்த்தைகள்
இதழால் நான் உதிர்க்க
கரம் பிடித்து எழுதச் சொல்லி
வார்த்தைக்கு உயிர் கொடுத்தீர்கள்!
சிந்தனைத் தூண்டுகோலாய்
சிறப்புரை ஆற்றியது
உங்களது அறிவுரைகள்!
வாழ்க்கையின் அச்சாரமாய்
உங்களது வகுப்புகள்!
ஒழுக்கத்துடன் ஓர் கல்வி
வார்த்தை தவறா நாவடக்கம்
உங்களின் சிறப்பம்சம்!
கரும்பலகையின்
வெள்ளை எழுத்துக்கள்
கருவிழியில் ஒட்டிக் கொண்டு
இரவு நேர வீட்டுப் பாடமாய்
இனிப்பாய் மொழி பெயர
வாழ்க்கை சுகமானது!
கற்றுக் கொடுத்த பாடசாலை
விழிகளுக்கு ஆலயமாய் காட்சி தர
விழியோரமாய் நானும் பதித்து விட்டேன்
ஆலயக் கடவுள் நீங்கள் என்று!
அன்றே நானும் பெற்று விட்டேன்
உங்களது ஆசிர்வாதங்களை!
ஏற்றம் பெற்ற என் வாழ்க்கை
எங்கிருந்தாலும் எட்டிப் பார்க்கும்
உந்துதல் கொடுத்த
உங்கள் கல்வியை!
எழுதப் படிக்கத் தெரிந்ததால்
நானும் அமைத்துக் கொண்டேன்
என் வாழ்கையை இனிமையாய்!
இனிய இனிமையான நினைவுகளோடு
ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!