மரங்களை தின்னும் மானுடன்
Maram vettuthal |
பசுமை
பட்டாடை உடுத்தி பழக்கப்பட்டவள்
இன்று அரை
குறை ஆடையாய்!
நாகரிகம்
வளர்ந்து விட்டதாம் !
அவளாக
மாறவில்லை
நாமாக
அவளை மாற்றி விட்டோம்
அழிந்து
வரும் நிலையில் காடுகள்!
ஓரறிவு
கொண்டவள் என்றாலும்
கடமை தவறாத
உன் கண்ணியம் கண்டு
தினமும்
வியக்கத்தான் செய்கிறேன்!
வளர்பிறை
மட்டுமே அறிந்த மரங்கள்
இன்று
தேய் பிறையை நோக்கி..
இலை மறை
காய் எனப்படும் பழமொழி கூட
வருங்கால
சந்ததியினர்க்கு
மறக்கும்
என்பதில் சிறிதளவு கூட
ஐயம் இல்லை!
பூமிக்கடியில்
நீர் எடுத்து
தாகம்
தீர்த்த மனிதா
காடுகளை
அழித்த பிறகு
கானல்
நீரில் தாகம் தணிக்க
முற்படுவாயோ
?
சுட்டெரிக்கும்
வெயிலில் நீ நடக்கும் போது
உன் புற
கண்கள் நிழல் தேடும்
உன் அக
கண்கள் வெட்டி அளித்த
மரங்களை
தான் தேடும்.
உன்னால்
வெட்டப்பட்ட மரங்களால்
மலரமேலே
கருகிய மொட்டுக்கள் ஏராளம்.
பிரசவ வலி
என்பது
பெண்மைக்கு
மட்டும் தானா?
விதைக்கப்பட்ட
விதைகள்
மண்ணை
துளைத்து வெளி வரும்
அந்த வலியை
என்னவென்று சொல்வது ?
தண்ணீர்க்கு
வரி கட்ட ஆரம்பித்து விட்டாய்
சிறகுகள்
இல்லாமல் பறக்கும்
ஆக்சிஜனுகு
விரைவில் வரி கட்ட போகிறாயா
?
வித விதமாய்
விழாக்களை
கொண்டாடுகிறோம்.
மரம் நாடு
விழாவை மட்டும்
மறந்து
விட்டோம்.
தொட்டில்
முதல் சுடுகாடு வரை
மனிதன்
புதைக்கப் பட்டாலும் சரி
எரிக்கப்பட்டாலும்
சரி
மரத்தின்
நன்கொடையை
மறவாமல்
நினைவு கூர்வோம்!
விண்ணுலகுக்கும்
மண்ணுலகுக்கும் ஏற்பட்ட
காதல்
வார்த்தை பரிமாற்றம் கூட
தடை பட்டது
மானுடனால்!
காதல்
தூதுவனாம் மழை
மண்ணில்
வர தயங்குகிறான்.
மகரந்த
சேர்க்கையின் தூதுவனாம்
தேனியின்
வாழ்க்கையும் கெட்டது
உன்னால்
இன்னும் எதனை பேர் வாழ்வு
கெட போகிறதோ
, தெரியவில்லை
காடுகளை
அழித்து கட்டிடங்கள் பல
கட்டுகிறாய்
!
கண்ணை
விற்று ஓவியம் வாங்கும்
உன்
முட்டாள்தனம்
உன் அக
கண்களுக்கு புலப்படவில்லையா
?
ஆராய்சிகள்
பல செய்யும் மானிடா
பணம்
காய்க்கும் மரத்தையும்
உன்
ஆராய்ச்சியில் சேர்த்து
கொள்ளேன் .
வெட்டப்பட்ட
மரங்கள் கூட
இறந்த
பிறகுதான் மரத்து போகும்.
உயிரோடு
இருக்கும்
உன் இதயம்
மட்டும்
மரத்து
போனது என்?
எது எப்படியே
காடுகளை அழித்தல் எனபது
மானிட
சமுகத்தை பொறுத்த வரை
சரி செய்ய
முடியாத
எழுத்து
பிழை தான்.
மனித குலம்
எனும் ஆணி வேர்
விழிப்புணர்வு
பெற்றால் மட்டுமே
காடுகளை
அழியாமல் காக்க முடியும்!
ஏய் மனிதா
?
மரமாகிய
நான் உனக்கு எச்சரிக்கிறேன்.
உன் வருங்கால
சந்ததிகள் பிறந்தவுடன்
தன் அன்னையை
காண
ஆசைபடுவர்
!
ஆக்சிஜனை
சுவாசிக்க ஆசை பட்டால்
மரம் ஒன்றை
வளர்த்திடுக !
மரம்
வளப்போம் ! செல்வங்கள்
பல பெறுவோம்!