மலர்மாலை சூடிடும் மணமகிழ் மன்றத்தில்...

நிலன்நோக்கும் மோகனமங்கையும்...
மறம் சொரியும் மதனசொருபனும்...
இனிதே இணையும் 
இரட்டை கிளவிகளாய்
மலர்மாலை சூடிடும்
மனமகிழ் மன்றத்தில்
மங்கலலநாண் பூட்டி
ஈரேழுப் பிறவியும்
இனிதே இணையும்
இல்லறமெனும் இன்பச்சோலையிலே
இன்னிசைப் பறவைகளாய்
இணைப்பிரியா இன்பத்திலே
ஊர்ப் போற்றும் 
உதாரணத் தம்பதியராய்
உவகை செய்திட வாழ்த்துக்கள் 

Post a Comment (0)
Previous Post Next Post