உலகத்தோடு உங்களையும் விட்டு விடை பெறுகிறேன் | Jenmam nirainthathu

உலகத்தோடு உங்களையும் விட்டு விடை பெறுகிறேன் | Jenmam nirainthathu
Jenmam
Jenman Nirainthathu


ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க என்ற கவிஞர் வைரமுத்து பாடல் வரிகளின் சாயலில்...


உயிர் பிரிந்த உடல் இங்கே 
மன நிம்மதி வேண்டும் இங்கே
வாழ்க்கை புரிதல் வேண்டும் இங்கே 
பிறப்பும் இறப்பும் சமம் இங்கே!

பூமியின் கடைசி உறவு நான் அல்ல 
மலரும் பூக்களுக்கு முடிவே இல்லை 
வாழ்க்கை எல்லை மரணம் இல்லை 
நல் மனிதர் என்பதுதான் எல்லை!

நேற்று வரை உயிருடன் உன்னோடு 
உயிர் இழந்த உடல் மண்ணோடு 
வாழும் போது நல்வாழ்வு வாழ்ந்திடு 
மரணத்தின் தருணம் கடவுளை நினைத்திடு!

நினைவுகள் நிரந்தரமாய் வருத்தம் தரும்
வருத்தம் மறக்க வேண்டும் ஒரு வரம் 
மறப்பது மனித இயல்பு ஆயினும் 
மறக்க நினைக்க மலருது உன் முகம்!

பிறந்தவுடன் இறப்பு நிர்ணயம் 
வாழும்போது உதவுதல் புண்ணியம்
பல மரணங்கள் சிலருக்குப் பாடம் 
சில மரணங்கள் பலருக்குப் பாடம்!

உடலும் உயிரும் உனது இல்லை 
ஆன்மாதான் அதற்கு எல்லை
மரணம் சொல்வது பதிவதில்லை
பதியும் பொழுது மரணம் எல்லை!

நெருங்கியவர் மரணம் தினமும் வருத்தம்
தெரிந்தவர் மரணம் சில நாள் வருத்தம் 
வருத்தம் மறக்க வேண்டும் திருத்தம்
திருத்தம் புரிந்தால் அதுதான் அர்த்தம்!

அதிகாரம் என்ன ஆணவம் என்ன 
ஆறடி நிலம் சொல்வதுதான் என்ன 
மண்ணும் நெருப்பும் சொல்வதென்ன
ஒரு பிடி சாம்பல் ஒரு பிடி மண் !

விழி சிவப்பாக கலங்கிய உறவுகள் 
அன்பு பேசிய பக்குவமுள்ள நாவுகள்
வழி அனுப்ப வந்த சொந்தங்கள் 
வலி மறந்து வழி அனுப்புங்கள்!

உலகத்தோடு உங்களையும் விட்டு விடை பெறுகிறேன்!




Post a Comment (0)
Previous Post Next Post