பண்பாடு நிலைக்கட்டும் | panbadu nilakattum

பண்பாடு நிலைக்கட்டும் | panbadu nilakattum
panbaadu
Panbaadu


உலகம் முன்னேறியதாய் 
மார் தட்டும் விஞ்ஞானத்திற்கு 
மானம் என்னவென்று அறியாது 
பண்பாடு என்னவென்று புரியாது!

தலைவனைக் கண்ட தலைவியவள் 
தலை கவிழ்ந்து இதழ் சிரித்தாள்
சிறப்பாய் சிதறின இதழ் சிரிப்புகள்
சிதறாமல் இருந்தன பண்பாடுகள்!

தேகம் மறைக்கா ஆடைகள் 
வாழ்வை கெடுக்கும் வாய்ப்புண்டு
பக்குவப்படா மிருகங்கள் விழி முன் 
புத்திசாலித்தனமாய் நடப்பது நல்லது!  

அகவை முதிர்ந்த பெரியவர்களிடம்
அன்போடு நடக்க வேண்டும் 
பண்பு கொண்ட முதிர்ந்த மனது 
பண்பாடோடு உன்னை பாராட்டும்!

இலக்கணம் மறந்த கவிதைகளை
புதுக்கவிதைகள் என புகழ்ந்தாலும்  
மரபு மீறிய கவிதைகள் அவையென
மனம் நினைக்கும் அல்லவா? 

செவ்வாயில் நீர் கண்டுபிடித்தாலும் 
விஞ்ஞானம் ஒளிவேகத்தில் பயணித்தாலும் 
பண்பாடு ஒலி வேகத்திலாவது 
பயணிக்கட்டும்! பண்பாடு நிலைக்கட்டும்!




Post a Comment (0)
Previous Post Next Post