பிழை தாங்கும் காதல். - வருங்கால தலைவா வாழ்க - உடல்நிலை சரி இல்லை

பிழை தாங்கும் காதல்.

காதல் நெஞ்சே காதல் நெஞ்சே
உயிரை திருடாதே.
இதயம் வெறும் வெள்ளை காகிதம்
அதில் பிழைகள் எழுதாதே.
பிரியும் இதயத் தின் வலிகள் சொல்ல
எந்த மொழியும் போதாதே.
பிரியும் காதல் நிஜத்தில் வாழும்
என்ற சொல்லில் முறையேதே.
காதல் என்று சொல்லில் வலி
உயிரை கேட்காதோ?
உன் கோபம் தீர்ந்து நெஞ்சில் காதல்
மீண்டும் பூக்காதோ?

நீ என்ற சொல்லில் முழு
அர்த்தம் தருவது காதல்.
வாழ் என்று சொல்லி
உன்னை இம்சை செய்வதும் காதல்.
நிர்வாண மெய்யில் உனக்கொரு
முழு உணர்வை தந்தது காதல்.
பிழை என்ற போதும் - உலகில்
நிறைவை தந்தது காதல்.
இருந்தாலும் சேரை பூசி - இன்றும்
பிழை தாங்கும் காதல்.

வருங்கால தலைவா வாழ்க

ஒப்பில்லாத் தலைவன் சற்றும்
ஓய்வினை யறியா மேதை
இப்புவி மக்கள் வாழ்த்தும்
ஈடில்லா கலைஞர் தந்த
செப்புதற் கியலாத் தோற்றம்
சீண்டிடும் பகைக்கும்ச் சிம்மச்
சொப்பன மாய்வி ளங்கும்
ஸ்டாலினே வாழ்க! வாழ்க!

விதியென மடிவோர்க் கெல்லாம்
விழிப்புணர் வதனை யூட்டி
சதியினைச் சிதைத்து அடிமைச்
சங்கிலி தனையு டைத்தே
எதிரிகள் அடங்கு மாறு
எரிமலை யாய்வெ டித்தே
உதிரிக ளாய்க்கி டப்போர்
உரிமையைப் பெற்றுத் தா! தா!

பாரிடைப் புகழைப் பெற்று
பைந்தமிழ் சிறக்கும் நாட்டில்
நீரிடைப் பூத்துத் தோன்றும்
நல்லதா மரையைப் போன்றே
ஊரிடை விளங்கு கின்ற‌
ஊருணி போன்று மக்கள்
நேரிடை யாகச் சென்று
நலத்திட்டம் அளிக்கும் செம்மல்

சிக்கலைத் தீர்க்கும் பேச்சு
சிந்தனைக் கேற்ற வீச்சு
மக்களின் ஆர வாரம்
மகளிர்க் கைத்தட்டும் ஓசை
நக்கலும் நலிவும் இன்றி
நகைச் சுவைக்கல கலப்பு
அக்கரைச் சீமைக் கூட‌
அடடா வென்றதி சயிக்கும்

சிந்தனை யெல்லாம் இனிக்க
சிற்றூர்கள் பேரூ ரெல்லாம்
செந்தமி ழாய்ம ணக்க‌
சிங்கம்போல் குரல்தொ னிக்க‌
பந்தயக் குதிரை யாக‌
பம்பர மாய்ச்சு ழன்று
விந்தைகள் புரியு மெங்கள்
வருங்கால தலைவா வாழ்க!!!

உடல்நிலை சரி இல்லை

உடல்நிலை சரி இல்லை
சரி செய்ய மனம் இல்லை
இந்த வலியும் சுகமாதான்
இருக்கிறது...!
உன்னை நினைக்கும் போது...!

VANAVIL

மழை தூருகிறதோ இல்லையோ
வெயில் மிளிர்கிறதோ இல்லையோ
நீ அணிந்து வரும் நிற உடை தான்
எனது வானவில்....

கல்லறையில்

நான் காதலிக்கிறேன் என்றேன்
நீ மறுத்தாய்...!
நீ காதலிக்கிறேன் என்று சொன்ன போது
நான் மவ்னமாக இருந்தேன்...!
"கல்லறையில்"

நான் இறக்கும் வரை

எனக்கு உடல்நிலை சரி இல்லை
என்று கேள்வி பட்ட
நீ அக்கறை கொண்டாய்
என்மீது...!
அவ்வாறு அக்கறை கொள்வதாக
இருந்தால்...!
இப்படியே இருந்து விடுகிறேன்...!
நான் இறக்கும் வரை...1

இந்த கண்ணீர் பூஜை!

மனமே கொஞ்சம் மறந்திட கூடாதா?
நினைவே விட்டு விலகுதல் ஆகாதா?
உயிர் கொஞ்சம் கிழித்து
எழுதிய பின்னே
உறவுகள் விலகி போவதில்லை பெண்ணே.
நீ கொஞ்சம் பொறுத்தால்
காதலை நினைத்தால்
எல்லாம் கற்றுத்தரும்
காதலை நம்பு உறங்கிடு இன்று.

நீ ஒரு ஓடம், நான் அதில் நீராய்
இருந்திட ஆசை கொண்டேன்.
நீ தந்த பாசம் இல்லை அதில் வேஷம்
அதனால் காதல் கொண்டேன்.
உன்னை இங்கும் விட்டு தர
எனக்கில்லை ஆசை.
மௌனம் போல் உலகில் சிறப்பில்லை பாஷை.
என்னை தனிமையில் விட்டுவிடு
உன்னை மறவேன்,
நீ நம்பினால் உன்னை கொடு.

கண்களில் நீரும், கடலென பெருக
வழிகின்ற நீரில் நீ மெல்ல தெரிய
கண்களை வெறுக்கின்றேன்.
நீ விழுவாய் என்று..
தினம் தினம் துடிப்பேன்
மறைத்தே அழுவேன். நீ அழுவாய் என்று!
விலகி இருப்பதால் அது விடையில்லை அன்பே.
ஊடலுமில்லை இதுவும் காதல் என்பேன்.
உள்ளங்கை உன்னை அதில்,
வைத்தே வாழ்ந்திட ஆசை.
நீ கலங்காதே உன் நினைவால்
இந்த கண்ணீர் பூஜை!

ஒரு மார்கழி குளிரினிலே

ஒரு மார்கழி குளிரினிலே
நான் நடந்திடும் வேளையிலே.
ஒரு தேவதை வந்தாளே
மணி என்னென்று கேட்டாளே.
நான் பார்க்கிற பொழுதினிலே
மணி ஆறாறை ஆகியதே.
அவள் விழிகளில் மட்டும் ஏனோ
இன்னும் பனியில் மூழ்கியதே.
முன்னோக்கி நடந்தாளே
அவள் பின் இதயமும் சென்றதே.

அவள் நடக்கும் பாதையிலே
நானும் நடை பழகினேன்.
அவள் பார்க்கும் நேரம்
நான் நிழலென மறைகிறேன்.
அவள் பின்னழகில் கூந்தல்
சூரியனை போல அங்குமிங்கு சுற்றியதே
அவள் கூந்தலை கண்டு
விழிகள் ஏனோ மயக்கத்தில் சொக்கியதே.
கண் மூடி திறந்தேன்
அவள் வீடு வந்ததே.

வீட்டினில் சென்றவளோ
அரிசி மாவினை கொண்டு வந்தாள்.
மாவினை அழகழகாய் சிறு
எறும்பிற்கும் காலை உணவளித்தாள்.
அவள் அமர்ந்திடும் வேளையிலே
நான் உறைந்தே போனேனே.
நிலா நதியில் குளித்து வந்தவுடன்
ஸ்ரீ தேவியை கண்டேனே.
அதை ரசிப்பதற்குள்ளே
நேரம் கடந்தது உடன் நானும் நகர்ந்தேனே.

பின்லடேன் மகளா

பின்லடேன் மகளா
ஐயோ என் மேல் அணுகுண்டை வீசுகிறாள்.
நியு மார்டன் குயிலா?
எந்தன் நெஞ்சில் எல் போர்டை மாட்டுகிறாள்.
நீ உருகும் ஐஸ் க்ரீம் சிலையா?
உன் அழகிற்கீடே இலையா?
நாங்கள் உரைந்தே போனோம் பனியா
ஸ்னாரியா.. விடை சொல்வாயா?

உன் லேசர் போன்ற பார்வை
என் இதயம் துலைக்குதடி.
உன் நியுடுல்ஸ் போன்ற இடையில்
என் இளமை வழுக்குதடி.
கேட்பரிஸ் போன்ற இதழ்கள்
எனை பருகிட அழைக்குதடி.
நீ ஷாக்கடித்து பேச
என் மனமும் வலிக்குதடி.
உனை கண்டாலே saintistellaa
திணறி போவாரே.
ஸ்னாரியா.. விடை சொல்வாயா?

கம்ப்யுட்டர் தானே இதயம்
அதில் என்னை வரைந்து விடு.
லவ் வைரஸ் போல வந்து
என் இதயத்தில் புகுந்து விடு.
நீ வந்து சேர்ந்தால் நரம்பென்னும்
சர்க்கூட் சிதறி போய் விடுமே.
உன் கீபோர்டு கைகள் கொண்டு அனைத்தால்
மீண்டும் உயிர் வருமே!
ஸ்னாரியா.. விடை சொல்வாயா?

காதல் கனவுகள்...!

எனக்கு கல்யாணம் என்று
பத்திரிக்கை நீட்டினாய்...!
நேற்றிரவு தானே
நம் பேரப் பிள்ளைக்கு
பிறந்த நாள் கொண்டாடினோம்
ஆம் அன்பே
உன்னை பார்த்த நொடிகளிலேயே
நம் திருமணம் முடிந்து விட்டது
என் காதல் கனவுகளில்...!

வாழ்க்கை பண(ய)ம்...!

என் வாழ்கையை பணயம்
வைத்து
உன்னை காதலித்தேன்...!
உன் வாழ்க்கையில் பணம்
வேண்டும் என்பதற்காக
என்னை
புறக்கணித்தது ஏனடி...!

காதிரண்டை கொடுத்த கடவுள் வாழ்க...!

அவள் ஒரு
கவிதை....
எனக்கு வாசிக்க தெரியவில்லை.!
வாய் வழி
வந்த
வார்த்தைகள் எல்லாம்
ஊமையாகி விடுகிறது...!
அவள் ஒரு
இசை...
அதுவே என்
எட்டு திசைகளிலும்
கானமாய்
ஒலிக்கிறது...!
அதை கேட்க
காதிரண்டை கொடுத்த
கடவுள் வாழ்க...!

என் தாய்க்கே கொஞ்சம் தான்...!

வானில் உள்ள
நட்சதிரங்களை
எண்ண முடியாது...!

அது போல்
என் மனதை
உன்னைப்போல்
வேறெந்த பெண்ணும்
வெல்ல முடியாது...!

என் தாய்க்கே அது கொஞ்சம்
தான்
உன் நினைப்பிலே
வாழும் என் நெஞ்சம்
தான்....

கழுதை,எருமை,நாயி...!

கண்ணே!...!
முத்தே...!
அமுதே..!
என்று என்னை
தாலாட்டுப் பாடி
உறங்க வைக்க
முயன்றாள்
என் தாய்...!
ஆனால்
முடியவில்லை....
கழுதை...,
எருமை...,
நாயி...,
என்று
நீ பாடிய
தாலாட்டு
வார்த்தைகளில்...
என்னை மறந்து
கண்ணயர்ந்து விட்டேன்
பெண்ணே...!

மண்ணில்

பெண்ணே
நீ என்னை
பெரிவதற்கு
முன்னால்
என்னை
மண்ணில்
புதைத்து
விட்டு
செல்....!



ஏன் பொய் சொன்னாய் ..!

பொய்
சொல்லாத...!
நீ
ஏன் பொய்
சொன்னாய்
என்னை
பிடிக்கவில்லை
என்று...!

காத்திருக்கிறேன்

நீ வரும் கனவுக்காக
தினமும் காத்திருக்கிறேன்
விழித்திருக்கும் வேளையிலும்....

ஏய் பெண்ணே

ஏய் பெண்ணே

வானத்தில் நிலவாக இருந்தாய் !
நட்சத்திரங்கள் தொல்லை தாங்காமல்
பூமி வந்தாய் !

பூமியில் பெண்ணாக பிறந்தாய் !
இங்கு ஆண்களின் தொல்லையோ ?!!!

மௌனம்

மௌனம் சம்மதத்துக்கு
அறிகுறி - என்பது உண்மைதான்
ஆனால்
எதற்கு சம்மதம் என்று
யாருக்கு தெரியும் !!!!!

கல்லறை

ஷாஜகான் மனைவி மும்தாஜ்க்கு

பதினோரு பிள்ளைகலாம்

எந்த ஒரு கணவனும் உண்மையாக

நேசிக்கிற மனைவிக்கு

பிரசவ வேதனை கருதி ஒன்று, இரண்டுக்குமேல்

ஆசைபடமாட்டான்

என்னை பொறுத்த வரை

தாஜ் மகால் காதலுக்கு எழுப்பபட்ட நினைவு சின்னம் இல்லை

அது காதலுக்கு எழுப்பபட்ட கல்லறை....

Post a Comment (0)
Previous Post Next Post