பாவி மனது
எந்த தேர்விற்கும் நான் இவ்வளவு
தயார் செய்ததில்லை
உன்னுடன் பேசும் முன்பு
என்ன பேச வேண்டும் என
பட்டியல் இடுகின்றேன்
பாவி மனது நீ ஹலோ சொன்னவுடன்
எல்லாவற்றையும் மறந்து விடுகிறது
எங்கே கற்றுக்கொண்டாய்
ஒற்றை வார்த்தையில்
ஒருவனை சாய்ப்பதை!!!!!
என் இதயத்தை
என் விழிகள் விழித்திருக்கும் போதே..
எப்படி திருட முடிந்தது உன்னால்???
என் இதயத்தை?????
உன்னால் தான்
உன்னால் தான்...
என் இதயம் இடம் மாறி துடித்தது...
உன்னால் தான்...
என் கண்கள் இயற்கையை ரசித்தது...
உன்னால் தான்...
கண்விழித்து கனவு கண்டேன்...
உன்னால் தான்...
பசி தூக்கம் மறந்தேன்...
உன்னால் தான்...
இந்த உலகத்தை அறிந்தேன். ..
உன்னால் தான்...
தனிமைய்யில் சிரித்தேன்...
உன்னால் தான்...
காரணம் இன்றி சிரித்தேன்...
உன்னால் தான்...
பாசம் என்பதை அறிந்தேன். ..
என் உயிர் உனக்காக தான்...
என் உயிர் காதலனே...
அவள் இல்லாமல் நான் இல்லை
இமை இல்லாமல் கண் இல்லை...
இரவு இல்லாமல் பகல் இல்லை...:
இதயம் இல்லாமல் சுவாசம் இல்லை.
அவள் இல்லாமல் நான் இல்லை...
சாவதா? வாழ்வதா?
மழைச்சாரலில் வரும் வானவில்போல் புன்னகைத்தாய்
உன் புன்னகை மழையில் நனைந்தது என் இதயம்...
பௌர்ணமி நிலவுபோல் பார்வை வீசினாய்
உன் பார்வை ஒளியில் மின்னியது என் இதயம்...
அருவியின் ஓசைபோல் வார்த்தைகள் உதிர்த்தாய்
உன் வார்த்தையில் வசியமானது என் இதயம்...
கொடை வள்ளல் போல் அன்பை தந்தாய்
உன் அன்பே தானமாய் பெற்றது என் இதயம்...
பூத்துக்குலுங்கும் நந்தவனம் போல் மகிழ்ச்சி தந்தாய்
உன் மகிழ்ச்சி ஒன்றையே சுவசமாக்கியது என் இதயம்...
கோடைகால இலைபோல் திடீரென உதிர்ந்தாய்
உயிர்போன வலியில் துடிக்கிரதடி என் இதயம்...
என் உயிரை எடுத்துக்கொண்டு என்னை விட்டு போனவளே
என் இதயத்தை கிழித்துவிட்டு நிம்மதியாய் சென்றுவிட்டாய்...
உன்னையே உலகம் என நம்பும் நான் உனக்காக சாவதா?
என்னையே உலகம் என நம்பும் என் குடும்பத்துக்காக வாழ்வதா?
என் லூசு காதலியே .....!
பேசி வருவதில்லை காதல் ..
எனக்கு நீ ஓவொரு முறையும்
உன் பூ போன்ற கைகளால்
எனக்கு கவிதை அனுப்புகின்றயே..!
அதிலே தெரிகிறது நீ என் மீது
கொண்ட காதால் ..
இது ஊமை காதல்அல்ல
நீ என் மேல் வைத்து இருக்கும்
காதல் உயிரை விட மேலானது
என்பதை நன்அறிவேன் என்
லூசு காதலியே .....!
வீதி.!
நீ
கடந்து
போன தடயமே
இல்லாமல்
அமைதியாய்
இருக்கிறது
வீதி.!
என் காதலின் பாதிப்பை
கவிதைக்குத் தெரியும் என்
காதலின் பாசத்தை
மலருக்கு தெரியும் என்
காதலின் வாசத்தை
இசைக்கு தெரியும் என்
காதலின் ராகத்தை
காற்றுக்கு தெரியும் என்
காதலின் சுவாசத்தை
கடலுக்கு தெரியும் என்
காதலின் ஆழத்தை
உன் மனதுக்கு தெரியும் என்
காதலின் பாதிப்பை ........!
தண்டிக்கப் போகிறாயா? ஆசீர்வதிக்கப் போகிறாயா?
எந்த ஊரில்
இருந்தாலென்ன...
என் கவிதையை நீ
தொட்டவுடன்
சிலிர்க்கும் எனக்கு!
எழுத்துக்களைப்
பார்க்கிறாய் நீ.
இந்த
எழுத்துக்களின் வழியே
உன்னை
எட்டிப் பார்க்கிறேன் நான்!
காற்று உன் வீட்டுக்
கதவுகளை
அசைக்கும்போதெல்லாம்
நினைவுபடுத்திக் கொள்...
உன் இதயத்தை
அசைக்க நான்
எடுத்த முயற்சிகளை!
ஒவ்வொரு தடவையும்
நீ பார்த்த
பார்வைகளைத்
தொகுத்து வைத்திருக்கிறேன்
ஆல்பமாக.
அர்த்தம் சொல்லத்தான்
அகராதி கிடைக்கவில்லை...
காதலியே நீ புரிந்திடு.. காதல் என்ற போர்வையில்
பெண்கள் பின் அலைவது தான்
எனது பொழுது போக்கல்ல
பார்த்த விநாடியில் பத்திக் கொள்ள
என் காதல் பெற்றோல் காதல் அல்ல
வந்ததும் தெரியாமல்
போனதும் புரியாமல் விட
இது மின்னல் காதலுமல்ல
பலநாட் பழகி ஒருவரையொருவர்
புரிந்து கொண்ட நம்காதல்
புனிதமான உண்மைக்காதல்…
கண்ணே மணியே முத்தே என்ற
வார்த்தைகளில்தான் காதல் இருக்கிறதா?
தங்கம் வைரம் வைடூரியம் என்ற
பணம்கொடுத்து வாங்கும் பொருளில்தான்
காதல் இருக்கின்றதா?
ஆம் எனில் அன்புக்காதலியே
என் காதலுக்கு இது தெரியாது
என்காதல் அழகான அன்புக்காதல்
நித்தமும் உன்
நினைவுகளால் உண்டாகும்
சொல்ல தெரியாத என்
சோகங்கள் எல்லாம்
உரு மாறுகின்றன
கண்ணீராய் பாதியும்
கவிதையாய் மீதியும் ...!
என் கண்ணீருக்குத்தான்
எத்தனை வெட்கம் பாரேன்...
நீ விலகிச் சென்ற பிறகுதான்
அது
வெளியே எட்டிப் பார்க்கிறது!
வானத்தை நேசித்தேன்
தொட முடியவில்லை!
கடலை நேசித்தேன்
தாண்ட முடியவில்லை!
காற்றை நேசித்தேன்
பிடிக்க முடியவில்லை!
அன்பே
உன்னை நேசித்தேன்
மறக்க முடியவில்லை...!
வானிலிருந்து தான்
தேவதைகள் வருகிறார்கள் என
நம்பி கொண்டிருந்த மக்களுக்கு
நீதான் நிரூபித்து கொண்டிருக்கிறாய்
பூமியிலும் தேவதைகள் வாழ்வதை...!
நீயள்ளி முத்தமிட்ட குட்டிமழைதான்.
கடல் சேர்ந்த பின்னும்
அலையென வந்து
உன் கால் நனைத்து கொஞ்சுகிறது!
கடவுளுக்கு படைக்க வைத்திருந்ததை
பசி தாளாமல் அள்ளித் தின்ற
பச்சை குழந்தையாய் –
உன்னிடம்
என் காதலை சொல்லிவிட்டு நிற்கிறேன்!
நீ என்னை தண்டிக்கப் போகிறாயா?
ஆசீர்வதிக்கப் போகிறாயா?
எப்படி மறப்பேன்..!!
நீயும் நிலவும் ஒன்று!
நிலவில் நீர் இல்லை:
உன்னுள் ஈரம் இல்லை…
உண்மை இல்லை…!
தாலாட்டும் கனவுகளை
தந்துவிட்ட காதலியே...!
பிரிவுத் துயரம் நீக்க..
வழியொன்று நான் கேட்டால்
விழிகலங்கி நின்றபடி
‘விடைகொடு’ என்கிறாயே....
இறந்துபோகும் வேளையிலும்
மறந்துபோகாக் காதலியே...!
“மறந்துவிடு’ என்று
நீயா....சொல்கிறாய்...?
ஓர்நாள் உனைப் பார்க்காவிடில்
ஓலமிடும் என் நெஞ்சில்
உதிப்பதெல்லாம்
உன் நினைவுகள்தானடி....
உனக்காக
எல்லாவற்றையும் இழந்தேன்...
நீ என்னையும் இழப்பாய்
என்பது தெரியாமல்!
உறவுகளின் பிடியில் நின்று
விலகிக் கொள்ளக் கேட்கிறாயே...!
தனிமையின் அவஸ்தைகளை
தணிப்பதே உன் நினைவுகள் தானடி...
நான் உயிரோடு இருப்பது
எல்லோருக்கும் தெரியும்!.
ஆனால்…
என் உயிர் உன்னோடு இருப்பது
யாருக்குத் தெரியும்?!
உன் விழிகள் பார்த்தால்
மொழிகள் தடுமாறும்
என்னையா........?
வெறுத்துப் பேசச் சொல்கிறாய்..!
மழை போல நீ...
எப்போதேனும்தான் வருகிறாய்!
நிலம் போல் நான்...
எப்போதும் காத்திருக்கிறேன்!
மறுத்துப் பேசவே ..
மனங் கேட்கவில்லையடி..
மயிலே…!நானெப்படி
உனைமறப்பேன்...?
சொன்னால்
புரியவில்லை
அனுபவித்தால்தான்
தெரிகிறது
காதல் தோல்வியின் வலி!
மலையின் எல்லை அடிவாரத்தில்...
கடலின் எல்லை கடற்கரையில்...
காதலின் எல்லை கல்லறையில்...!
துயிலும் பொழுதும்
தூக்கத்தில் அணைக்கும்
உன் காதல் நினைவுகளையா...?
தூக்கி எறியச் சொன்னாய்..!
உன் காலடிச் சுவடுபட்ட
மண்ணை சேகரித்து
வைத்திருக்கிறேன்,
அதனால் மட்டுமே
என் கல்லறைச்
சுவரை எழுப்புங்கள்…
உன் விழிகளில்
தொடங்கிய என் காதல்
உன் பாதங்களிலேயே
முடியட்டும்.
வழியும் உன் விழிநீர்
பார்த்த பின்னே.....
விழியே நானுன்னை
எப்படி மறப்பேனடி
எப்படி மறப்பேன்..!!
என்னாச்சு உனக்கு
கண்மனி
என்னாச்சு உனக்கு-ஏன்
இந்த மெளனம்...........!!
காலையில் -நான்
துயில் கலைவது-உன்
தொலைபேசி அழைப்பில் ...
கண்மனி என்னாச்சு-உன்
தொலைபேசிக்கு -இல்லை
உனக்கு என்னாச்சு.............
உன் காலைவணக்கம் அல்லவா
எனக்கு இதயத்தின் -முதல்
துடிப்பு............
நோய்யுற்றவனுக்கு -மூன்றுவேளை
மருந்து சாப்பாட்டிற்க்கு முன் -எனக்கு
உன் ஞாபகப்படுத்தல் அல்லவா
சாப்பட்டிற்க்கு முன்.............!!
கண்மனி என்னாச்சு -உனக்கு
ஏதாச்சு புரியாமல் -நான்
தவிப்போடு பாலைவணத்தில்......
கண்மனி எனக்கும் உனக்கும்
உறவு காதல் இல்லை -ஆனால்
காதலைவிட இறுக்கமான ஒரு
உறவு.............!!!
கண்மனி மனதுக்குள் -ஒரு
சுனாமி அடிக்குது-ஆனால்
அது பலருக்கு புரியவில்லை..........
கண்மனி மற்றவர் புரிந்துகொள்ள
இது காதல் இல்லை-ஆனால்
புனிதமான உறவு................
நீ வருவாய் எனக்காய்-மீண்டும்
தொலைபேசியில் -நான்
தொலைந்துபோக முன் -நீ
தேடிவருவாய்........................!!
சுகமான அனுபவங்கள்........!
கண்ணுக்குள் ஒரு
சின்ன மின்னல்......
மனதுக்குள் ஒரு
கவிதை ஊற்று.........
சுவாசத்தில் ஒரு
வாசம்.........
நடையில் ஒரு
துள்ளல்.......
பேச்சில் ஒரு
துடிப்பு.......
சுற்றி உள்ள எல்லாம்
அழகாய் தெரியும்.......
இது எல்லாம் உன்
வரவை என் கனணி -காட்டிய
நிமிடத்தில் .......
நான் பெற்றுக்கொள்ளும் -சுகமான
அனுபவங்கள்......................!
பின்னர்தான் தெரிந்தது
அவள் மனதில் நிலவேன்றார்கள்
நம்பினேன் அது பால் வெள்ளை என்று
பின்னர்தான் தெரிந்தது
அது பல நேரங்களில்
களங்கப்பட்டே இருக்கிறது நிலவை போல
அவள் குணத்தில் பசு என்றார்கள்
நம்பினேன் அது சாது என்று
பின்னர்தான் தெரிந்தது
பசுவுக்கும் கொம்புகள் உண்டு என்று
அவளுக்கு பல வண்ணங்கள் பிடிக்கும் என்றாள்
நம்பினேன் அது அவள் ரசனை என்று
பின்னர்தான் தெரிந்தது அவள் ஒரு பச்சோந்தி என்று
என் இதயத்தில் எப்போதும் நீயே என்றாள்
பின்னர்தான் தெரிந்தது
அவள் சொன்னது ஒரு பொய் என்று
அவளிடம் இல்லாத ஒன்றில்
நான் எவ்வாறு இருக்க முடியும்
பாரடி அங்கே
உனது ஆடையையும்
எனது ஆடையையும்
அருகருகே காயவைத்து
இருக்கிறாயே,
இரண்டும்
காய்வதை விட்டுவிட்டு
விளையாடி கொண்டு இருப்பதை,
பாரடி அங்கே !!!
தீ....!
உன் காதலுக்கு-நான்
தீக்குளிக்க போவதில்லை-ஆனால்
தினம் தினம் -நான்
தீயில் வெந்து போகின்றேன்............>>
நான் வெந்து போகும் தீ-அது
வினோதத்தீ-அது
காதல் யாகத்தீ-அந்த வேள்வியில்
காதல் விறகுகளாய் நான்.........
உருவெடுத்து உக்கிரமாய்-பூதகரமாய்
பூந்தீயாய் -புறப்பட்டு-என்
மனதுக்குள் அணைக்க முடியாத
அனல்காற்றாய் -எரிவது -உன்
காதல் தீ.............
விறகு எரிவதால்-கிடப்பது
வெப்பவும் புடையும்-சாம்பலும்
கரியும்-கரியமிலவாயுவும்.............
உன் காதல் தீயில் -என்
மன விறகுகள் எரிவதால்-கிடப்பது
கண்னீரும் கவலையும்-மன
பாரவும்...................!
மறக்க முடிகிறதா என்று பார்ப்போம்
என்னுடய இதயத்தை தான்
திருடிவிட்டாய் !!!
ஈவு இரக்கம் இல்லா
உன்னுடய இதயத்தையாவது தா !!
அதை கொண்டேனும்
மறக்க முடிகிறதா என்று
பார்ப்போம் உன்னை !!!
உனக்கு தெரியவே கூடாதடி
உன்னுடய பேச்சுகள்
என்னை காயப்படுத்துவது
உனக்கு தெரியவே கூடாதடி......!
அதனால்யேனும்
நீ பேசுவதை நிறுத்தி விட்டால்,
அந்த காயத்தை எப்படி ஆர்த்துவேன் ????
இழக்க வேண்டியிருக்கிறது !
இழப்புகளோடு
சில கண்ணீர்
துளிகளையும்
இழக்க வேண்டியிருக்கிறது!
உயிருடன் ஒப்பிட முடியவில்லை
உயிருடன் ஒப்பிட முடியவில்லை உன்னை!
ஏன் என்றால்?
உயிரும் ஒரு நாள் பிரிந்துவிடும் என்பதால்..!
நான் கடவுளிடம்
ஒரு வரம்
கேட்கப் போகிறேன்!
என்ன தெரியுமா?
நீ என்னை நினைக்கும்
போதெல்லாம்
ஒரு முறை
கண் சிமிட்ட
வேண்டும் என்று…!
கருப்பாகவே விடிகிறது
நீ இல்லாத இரவுகள்........
கனவில் பேசிய வார்த்தைகள் கூட
காலையில் மறந்து போகிறது..
மவுனமாக இருக்கும் நேரங்களில்
எதிரொளித்துக்கொண்டே இருக்கிறது
நீ பேசிய வார்த்தைகள் ....
எத்தனை எத்தனை
உறவுகள் வந்தாலும்
உள்ளம் திறந்து உண்மை வடித்து
உணர்வுகள் கொட்டி தோள் சாய்ந்திட
உன்னையே நாடும் என் மனம்!
உன்னைப்பற்றி எழுதும்போதெல்லாம்
இளமையை கொட்டுகிறது
என் பேனா.......
வீதியில் போகும் பலூன்காரனை
வேடிக்கை பார்க்கும் குழந்தையைப்போல்
வேடிக்கை பார்க்கிறேன்
என்னைக்கடந்து போகும்
காதல் ஜோடிகளை ........
யாரோ உன் பெயர் சொல்லி
அழைக்கையில்
திரும்பிப் பார்க்கிறேன்
நீ அங்கு இல்லையென்று
தெரிந்தும் கூட!
கடை வாசலில் தொங்கும்
உடையை உனக்கு போட்டு
அழகு பார்க்கிறேன்
கற்பனையில்....
வானம் பார்த்து படுத்திருக்கும்
மொட்டைமாடி இரவுகளில்
நிலவு நினைவுபடுத்துகிறது
ஒப்பனையற்ற உன் முகத்தை ....
நெஞ்சில் நன்றி சுரக்க
கண்ணில் நீர் வடிய
கை கூப்புகிறேன் மனதில்...
உன் நட்பும்
உன் நட்பின் பாதிப்பும்
வாழ்நாள் முழுதும்
என்னோடு நடை போடும்!!!
உன்னால் அனுபவிக்கும்
தனிமையின் வலியை
உனக்கும் தர மனமில்லை
அதனால் அனுப்புகிறேன்
உனக்கு துணையாய்
என் கவிதைகளை.........
நேரில் மட்டும்
வெட்கப்படும் தேவதை நீ!
மறைமுகமாய்
இம்சை செய்யும் ராட்ஷசி நீ!
என்னை புலம்ப வைத்தாய் ?
அன்பே உன்னை
நிலையாக உள்ள
வானமாகவே
நான் நினைத்து இருந்தேன்
சில கணங்களுக்கு மாத்திரம்
விழிகளுக்கு இன்பம் அளிக்கும்
வானவில்லாய் அல்ல....
அன்று என் இதய வாயிலை
திறந்து கொண்டு - நீ
வந்த பொழுது அசைக்க
முடியாத இன்பமாக இருந்தது
அதை ஒரே நொடியில் மாற்றி
இன்று எதட்காக பிறந்தாய்?
ஏன் என்னை பிரிந்தாய்?
என்று புலம்ப வைத்து விட்டாய்...
எழுதியது பிழை என்று
பக்கங்களை கிழித்து
எறிந்து விட முடியும்
அதே போல்
உன்னை பிரிந்தேன் என்று
இதயத்தை கழற்றி
எறிந்து விட முடியுமா?
உன்னோடு பேச முடியாத
இந்த நாட்களையே
என்னால் தாங்கிக் கொள்ள
முடியவில்லையே...
நிரந்தரமாக உன்னை மறந்து
பிரிந்து என்னால்
வாழ முடியும் என எப்படி
நீ நினைத்து இப்படி
என்னை புலம்ப வைத்தாய் ?