கண்ணீரின் கதகதப்பை...
கதவடைத்துக் காத்துக்...
கொண்டிருக்கும்...
விழிகளிரண்டிற்க்குமான...
கதை..
மரித்துப்போனதாய்...
மறைந்த வடுக்கள்...
நிறைந்த காயங்களை...
ரசித்துக் கொண்டிருந்தேன்...
காலங்கள் மாறினாலும்...
மாறிடாத மாயையுடன்...
மறைத்தே வாழ்கிறேன்...
ஏதேச்சையாய் நடந்த...
ஓர் நிகழ்வில்...
வளையல் உடைத்து...
குங்குமம் அழித்து...
தாலி பறித்த...
சங்க இலக்கியத்தின்...
சகாய சமுதாயத்தில்...
சிதைந்துக்கொண்டிருக்கும்...
கபடமில்லாத வயதுகளின்...
வக்கிரங்களை...
எண்ணியபடியே...
தீட்டப்படாத ஓவியமாய்...
உயிர் துறந்து...
மெய்யோடு வாழ்கிறேன்...