ஏதொவொரு நொடியில்
எங்கிருந்தோ தொடங்கியது!!!
அன்பென்ற அலைகள்
தொடுத்த உறவு!!!
நட்பெனும் பெயர்ச் சொல்லி...
ஆண் பெண் இன வேறுபாடின்றி....
சமுகத்தின் சாளரமாய்....
நட்பெனும் நற்றிணையாய்...
எனை தாழ்த்தாமல்!!
என் தவறுகளை!!!
தனியே திருத்தி!!!
நான் வாழ வழி காட்டி...
எனை காட்டிலும்...
என் எழுத்துகளை ...
அதிகம் ரசித்து...
எனை ஊக்குவித்து ...
என் வாழ்க்கை ...
ஏடுகளின் ஏணியானாய் ...
நீ கிடைத்தது வரம்!!!
நான் இப்போது இருக்கிறேன் தவம்!!!
உள்ளம் நிறைந்த ...
உனது நட்பை ...
என்றென்றும் எதிர்நோக்கி...