சுவாசம் - ஜோக்கூ கவிதை - திகட்டாத உப்பு

சுவாசம்

நானும் காற்றைத்தான்
சுவாசித்திருந்தேன்
உனை பார்க்கும் வரை

இப்போது
காதலை சுவாசிக்கிறேன்

நிறுத்திவிடு என்கிறாய்

சுவாசிக்கும் காற்றையா?
நேசிக்கும்
காதலையா?

ஜோக்கூ கவிதை

மின்னலுக்கு கூட
பயந்ததில்லை

உன் வீட்டு
ஜன்னலுக்கு பயந்தேன்

எங்கே உனக்கு பதில்
உங்கப்பா எட்டிப்பார்த்திட போகிறாரோ என்று !

திகட்டாத உப்பு

உண்மை
உழைப்பில் வெளிவரும்
வெண்மை
அதை உண்டு சுவைப்பது
முதலாளிகள்
தன்மை.

காதல்

அழகான பெண்ணை
அன்பாக பார்ப்பது காதல் இல்லை .......
அன்பான பெண்ணை
அழகாக பார்பதுதான் காதல் .....

ஹைக்கூ-கண்ணீர்

கோடையிலும்
மழைத்துளி
ஏழையின் வீட்டில்
"கண்ணீர்"

ஹைக்கூ-கண்ணீர்

கோடையிலும்
மழைத்துளி
ஏழையின் வீட்டில்
"கண்ணீர்"

காதலினறிகுறி

இமைக்காக
கவிதை சொல்ல
விழிகள் துடிக்குது !

கவிக்காக
வரிகள் சொல்ல
இயற்கையை
ரசிக்குது !

துடிக்காத
நெஞ்சம் கூட
உனக்கென தவிக்குது !

அடியே,
பிரிவென்று சொல்லாதே
இதயமும் வலிக்குது !!!

கடவுளின் சந்தை

தள்ளுபடி விலையில்
தனிகிரகம்

கடவுளின் சந்தையில்
புதுப்புரட்சி

மனிதனுக்கு
விற்றுவிட்டான்
அந்த மகுடம் வைத்த
மனிதன்

பாவம் இந்த
பூமி !

கவிதைப் புத்தகம்

என்
இதயம் கூட
இருட்டறைதான்
அவள் விழி
பார்க்கும் வரை !

என்
கனவுகள் கூட
கரும் நிறம் தான்
அவள் முகம்
பார்க்கும் வரை !

என் புத்தகமெல்லாம்
வெற்றுத் தாள்கள்
அவள் புன்னகைக்கும் வரை !
இப்போது கவிதைகளாய்...

மௌனம் பேசும்

மௌனம் ஒருநாள்
பேசுமென்றால்
அது அவளின்
இதயம் என்னிடம்
காதல் சொல்லும் நாள்!

ரசனை

விழியும் விழியும்
மோதி
விடை தெரியா
ஒரு வேதியியல் மாற்றமா !

அது காதல் என்று
சொன்னால்
நம் நிலைதான்
தோற்குமா !

ஆயிரம் பூக்கள்
பட்டென பூக்குமா !

இதழ்களால்
வதம் செய்தால்
உடலெல்லாம் வேர்க்குமா !

மெகாசீரியல்

ஆலகால விஷத்தை
தினமும்
அரைமணி நேரம்
உண்டு பழகும் பெண்கள் கூட்டம்
"மெகாசீரியல்"

ஹைக்கூ வன்முறை

பிறந்தநாள்
விழா
கேக் "வெட்டி"
கொண்டாடப்பட்டது.

ஹைக்கூ செல்போன் டவர்

வியாபார சோழர்கள்
கட்டிவரும்
இரும்பிக் கோபுரங்கள்
"செல்போன் டவர்"

எதிர்கால இயற்கை

மருத்துவமனைகளில்
டெஸ்ட் டியூப்
மரக்கன்றுகள்
"எதிர்கால இயற்கை"

விடுதலை

1947ல்
கொடுக்கப்பட்ட
போலிச் சான்றிதழ்
"விடுதலை"

மாற்றம் வேண்டும்

கைவிரலின் நடனம்
புதுக்கவியாய் மாறியது

மேடை ஒன்று
இல்லாமல்
தமிழ் இங்கே பாடுது

நிலவையும் நீரையும்
மலரையும் மலையையும்
பல கவிஞன்
எழுதிவிட்டான்

மாற்றம் ஒன்று
வேண்டுமென்று
அடைமழையும்
அழுகிறது !

அவளை போல்

ஏ புல்லாங்குழலே
ஏன் தனியே
இசைக்க மறுக்கிறாய்
என் காதலி போல்
உன் இதழோடு
இதழ் வைத்தால் தான்
இசை வெளிப்படுமோ !

காதலின் பாதிப்பு

ஆகாயம் இன்னும்
பெரிதானது !

வின்மீன் காண்பது
அரிதானது !

மேகங்கள் மோதி
விளையாடுது !

தென்றல் எங்கோ
பயந்தோடுது !

என் உயிரும் உடலை
மறந்தோடுது !

காதல் மனதை களவாடுது !!!

இதழ்கள்

நிழல் உன்னை
சேரும் முன்னே
என் ஞாபகம்
சேருமே !

உன்
கருங்கூந்தல்
காற்றில் ஆடி
கவிதைகள் சொல்லுமே !

உனை கண்ட
பின்புதான்
உலகினை உணர்கிறேன் !

ஒரு பூவில்
எத்தனை இதழ்
என்றுனை ரசிக்கிறேன் !!!

Post a Comment (0)
Previous Post Next Post