காதலனே - மொக்கை - மரண தண்டனை கைதியாவாய் - சலனம்

காதலனே - மொக்கை

காதலனே
மூடிய என்
முகத்தை திறக்க
இவ்வளவு நாளா?
என்ன செய்ய அன்பே
தங்கமணி
இப்பத்தானே ஊருக்கு போனா

மரண தண்டனை கைதியாவாய்

அன்பே உன்னை
காதலித்ததாலே
ஆயுள் கைதியான்
என்னை திருமணம் செய்தால்
நீ
மரண தண்டனை கைதியாவாய்

சலனம்

மலர் விழுந்தால் நீரில் சலனம் வரலாம்..
மலரை நினைத்தாலே..சலனம் வருமோ..
உன்னை நினைக்கும் என் மனது.


நள்ளிரவு குளத்து நீரில் சலனம்
அட விழுந்தது நிலவின் பிம்பம்.


என்னை பார்க்கும் போதெல்லாம் சலனப்படும் உன் கண்கள்.
என்னை உறங்கவிடாமல் சஞ்சலப்படுத்துவதை
நீ அறிவாயா?...

இழந்துகொண்டிருக்கும் கனவுகள்

குறைந்துபோன ஸ்பரிசங்களின் அன்பு
நலிந்துபோன விளையாட்டுகளின் குறும்பு
இவையிறுதியில் இருட்டிக் கொண்டிருக்கும்
வீட்டில் வெளிச்சமின்றிக் காத்திருக்கும்

கருவறைச் சுகம்

அன்னையே!
உன் கருவறைக்குள்
மீண்டும் என்னை
மீட்டெடுப்பாயா?
இந்த உலகம்
என்னை பயமுறுத்துகிறது

உன் உதிரத்தில் நானிருந்தேன்
உணர்ந்தது பூ வாசம் - இன்று
உலகத்தில் நானிருக்க

கண்ணீர் உற்பத்தி

என் காவலனுக்கு
கண்ணீர் தாகமென்று
நடக்கிறது
என் கண்களுக்குள்
கண்ணீர் உற்பத்தி

பூவென்று புகழ்ந்தான்.
காம்பாக காப்பான் என்று
தெம்பாக வந்துவிட்டேன்
பெற்றவரின் கண்ணில்

ஆன்மிகம்

பட்டினத்துப் பிள்ளையார் (பட்டினத்தார்) அருளியது

பிறந்தன இறக்கும், இறந்தன பிறக்கும்;
தோன்றின மறையும், மறைந்தன தோன்றும்;
பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும்;

நம் தமிழ் நாடு

அரசின் இலச்சினை கோயில் கோபுரம்;
ஆட்சியர் மட்டும் நாத்திகர் கூட்டம்!
வந்தவர்க்கு எல்லாம் வாழ்வு நிச்சயம்;
சென்றவர் மாத்திரம் பிச்சைப் பாத்திரம்!

பொருட் சுவை

உன்னவை என்னவை இல்லை என்றேன்
நிம்மதி வந்தது

என்னவை உன்னவை இல்லை என்றேன்
பகை வந்தது

என்னவை என்னதே என்றேன்
தனிமை வந்தது

என்னவை உன்னவை என்றேன்
பாசம் வந்தது

எல்லாம் உம்மவை என்றேன்

kavithai

புகைப்படத்துடன் வந்து
பிடித்திருக்கா என்றாள் என் அம்மா!

அசைக்காத தலையை
சம்மதம் என்றே பிடிங்கி சென்றாள் புகைப்படத்தை!!

நீயும் வந்தாய் அவசர விடுப்பில்;
கண் இமைக்கும் நேரத்தில்

மனம்தான் இல்லை!

அஷ்டமியா? – ஆகாது
தேய்பிறையா? – கூடாது
இராப்பொழுதா? – வேண்டாமே

எத்தனையோக் காரணங்கள்
தேடித்தேடி எடுத்துவந்தேன்

ஏதோ சரியில்லையென
நித்தம் பயணம் ஒத்திவைத்தேன்

உண்மையிங்கு அதுவல்ல

இப்பொழுது எங்கு இருக்கிறாய்?

மரணங்களும் மறையவில்லை
ரணங்களும் குறையவில்லை

வலிகளும் மறக்கவில்லை
வரைமுறைகளும் தெரியவில்லை

உணர்ச்சிகள் ஆறவில்லை
உண்மைகள் தூங்கவில்லை

போகிறபாதை புரியவில்லை
போனபாதை விளங்கவில்லை

எதற்காக வந்தோம்?
எங்கே போகிறோம் ?

எல்லாம்
யோசித்துகொண்டிருக்கிறேன்

எல்லாம்
மறந்துபோகும்
நீ
அருகிலிருந்தால்!!!

என் நண்பனே
இப்பொழுது
நீ
எங்கு இருக்கிறாய்?

காகிதத்தில் செய்த ஆயுதம்

காகிதத்தில் செய்த ஆயுதத்தால் என்னை கொல்ல பார்க்கிறான் என் காதலன் கையில் அவனின் கல்யாண பத்திரிக்கை.

"NO DREAM ONLY ACTION"

ஆசைகளை குவித்தேன்
ஆசைகள் அடங்கிப்போனது

கனுவுகளில் குதித்தேன்
கனவுகள் கரைந்துபோனது

கனவு காண்
- அப்துல் கலாம்

களம் காண்
- பிரகாஷ்

"NO DREAM ONLY ACTION"

மாத்தி யோசி

உன்னை பார்த்தேன் கவிதை வந்தது.
நன் என்னை பார்த்தான் நீயே வந்தாய்.

உணக்காக கடிதம் எழுதுவதை விட்டுவிட்டு எனக்காக.தேர்வு எழுதினேன்.

என்று எனக்காக நீ கவிதை எழுதிக்கொண்டிருக்கிராய் .

உன்னை எப்படி எனக்கானவள் அக்க முயற்சி செய்வதை விட்டுவிட்டு.

நன் எனக்கான வாழ்கையை தேர்வு செய்தேன்

என்று நீ நமக்கான வாழ்கையை தேர்வு செய்கிறாய்!!!






வின்மின்களை

வின்மின்களை
போல்..!
என் கண்கள்
உறங்கவே
இல்லை....!
உன்னைக்கண்டு...!

நீ...!

நீ...!
நடந்த...!
பாதச்சுவடை
தேடுகிறேன்
முத்தமிட...!

அறிந்து கொள் பெண்ணே...!

புல்லின் ஓசை
புயல்
அறிந்ததில்லை
அறிந்து கொள்
பெண்ணே...!

உன் கண்கள் கலங்க கூடாது

என் இறப்பை கூட
உனக்கு தெரியாமல்
பார்த்துக் கொள்வேன்....!
உன் கண்கள்
கலங்க கூடாது
என்பதற்காக...!

என் தூக்கத்தை தொலைத்துவிட்டன

என் இதயத்தின் பக்கங்கள் அனைத்தும்
உன் பெயர் உள்ள வரிகளால் நிரம்பி கிடக்கிறது...
அச்சடிக்கப்பட்ட எழுத்துகளாய் என்னுள்
எப்படி பதிந்து போனாய்?

இரவில் உறங்கும் போதும் நிலவாய் உன் முகம்
காலை விழிக்கும் போதும் உதயமாய் உன் முகம்
பொழுதே தெரியாமல் சென்ற என் வாழ்வில்
எப்படி இரவுபகலாய் வந்தாய்?

என் இதய துடிப்பை எண்ணிவிடும் என்னால்
இதயத்தோடு துடிக்கும் உன் நினைவுகளை
இன்றும்கூட எண்ணி முடிக்க இயலவில்லை
எப்படி மிஞ்சினாய் என் இதயத்தை?

விடை தெரியா கேள்விகள் மனதில் பல இருக்க
உன்னை பற்றிய கேள்விகளும் அடுக்கடுக்காய்
தோன்றி என் தூக்கத்தை தொலைத்துவிட்டன
எப்படி அறிவேன் இதற்கு விடைகளை?

Post a Comment (0)
Previous Post Next Post