புத்தகம் - என் காதல் - பிரியா வரம்

புத்தகம்

இன்று உலகமே என்னை உற்று நோக்குகிறது

நன் அன்று உன்னை படித்ததால!..

அன்று நன் உன்னை படித்தேன்,

இன்று உலகம் என்னை உன்னில் படித்து கொண்டிருகிறது!

நன் உன்னை படித்து விட்டு முற்று புள்ளி
வைக்கவில்லை , கேள்விக்குறியை
தன வைத்தான்.

இன்று உலகம் என் பெயருக்கு பக்கத்தில் ஆச்சர்ய குறி வைத்துள்ளது!!!

உன் கடைசி பக்கத்தை மட்டும் நன் விருமபவில்லை.

புத்தகம் நீ என்றும் பாலைவனத்து தாகம்!

பருகிநாலும் பசி திறவில்லை ஏன்?




என் காதல்

என் காதல்
கண்ணீராக ...

சில கண்ணீர்
கவிதையாக ...

சில கவிதைகள்
மலர்களாக ...

அனைத்து மலர்களும்
என் கல்லறைக்காக ......

பிரியா வரம்

நீ என்னை விட்டு பிரிந்து சென்ற
போது எனக்கு கோபம் வந்தது
என்னை விடவும் உன் வேலை தான்
உனக்கு பெரியதோ என்று தோன்றியது

எனக்காகத் தான் அந்த வேலைக்குச்
செல்கின்றாய் என்பது கூட புரியாதவளாய்
பிறகு தனிமையில் நான் உன் நினைவில்
அழுதபோது எனக்கும் புரிந்தது

என்னை போல் நீயும் நான் வேதனைபட கூடாது
என்பதற்காக மனதினுள் என்னை நினைத்து
அழுது இருப்பாயோ?

நான் உன்னை நினைத்து ஏங்குவது போல நீயும்
என்னை நினைத்து ஏங்க்கிக்கொண்டு இருப்பயோ?

உன் ஸ்பரிசத்திற்காக நான் ஏங்குவது போல
அங்கு நீயும் ஏங்கிக்கொண்டு இருப்பாயோ?


காலையில் எழுந்தவுடன் உன் முகம்
காணாமல் நான் தவிப்பதை போல்
அங்கு நீயும் என் முகம் காணாமல்
தவித்து கொண்டு இருப்பாயோ?


கடல் கடந்து சென்ற என் அன்பு கணவணே!
இனி என்றும் பிரியா வரத்தை நமக்கு
அருள வேண்டி கடவுளிடம் கோரிக்கை வைப்போம்!

சிரிக்காதீகள்

முதன் முதலாக என் கண்ணில் இருந்து கண்ணீர் வந்தது!!

காதல். கவிதையும் கற்றுத்தரும்!!

கன்னத்தில் கன்னத்தில் தாடியும் வைத்துவிடும்!.

உலகமே என்னை பார்த்து சிரிக்காதீகள்.

நன் என் காதல் தோல்வியை ஒற்று கொள்கிறான்.

ரோஜா செடியில்

ரோஜா செடியில்
முள்ளும் இருக்கும்
ரோஜாவும் இருக்கும்
முள்ளை கண்டு பயந்து விடாதே !
ரோஜாவை கண்டு மயங்கி விடாதே !
பெண்களும் அப்படித்தானே .......?????/

கல்லறை

பூக்கள் எனக்கு பிடித்தது
நீ பூ வைத்த போது !

இயற்க்கை எனக்கு பிடித்தது
நீ இயற்க்கை ரசித்த போது !

மழை எனக்கு பிடித்தது-அதில்
நீ விளையாடிய போது!

கல்லறை எனக்கு பிடித்தது -உன்
மன ஓலையை அனுப்பிய போது .....


உன்னை விரும்புகிறேன்..!!

உன்னை விரும்புகிறேன்
நீண்ட தயக்கத்திருக்கு
பிறகு
உன்னை விரும்புகிறேன்
என்றேன்
மெலிதாய் புன்னகை செய்தாய்
ஏன் என்றேன்
அட போட
நான் பிறந்ததே உன்னை
காதலிப்பதற்கு மட்டும் தான்
என்றாய் !!! ...

பாசம்

விடியும் வரை தெரியாது
கண்டது கனவு என்று !

பிரியும் வரை தெரியாது
பாசம் எவ்வளவு ஆழம் என்று !

brahamanin pattam

pennai padaika arambitha poluthu
sirpam kathukolla armbitha kadavul
unnai vaditha udan than
pattam petrirupan...

enaval

un kannil thaduki vitu, un muchi kattril thadumari, kadaisiyil vilunthen un siripil

பொய்

காதலுக்கு கண் இல்லை
என்பது பொய் !
உனது கண்களைப் பார்த்த
பிறகுதான்
உன்னை காதலிக்கவே
தொடங்கினேன் .........

நானும் காதலிக்கிறேன்

காதல் வந்தால் தான்
கவிதை வருமாம் !
ஆம் ...
நானும் காதலிக்கிறேன் !
உன்மேல் வைத்திருக்கும்
நட்பை ஆழமாய்
காதலிக்கிறேன் !!!!

என் உலகம்

கண்ணுக்கு உலகம்
காண்பவை அனைத்தும் !

ஏழைக்கு உலகம்
இரண்டு வேலை சாப்பாடு !

எனக்கு உலகம்
என்னவளை தொட்ட
தென்றல் மட்டும் ..!...........

ரசிப்பேன்

உண்மையோ பொய்யோ
தெரியாது !
நீ என்ன
பேசினாலும் ரசிப்பேன் !!

வரம்

காதல் இனிக்கும் கரும்பா ? எரிக்கும் நெருப்பா?
தெரியவில்லை ...
காதல் பாற்கடல் அமிர்தமா?
பாம்பின் நஞ்சா?
ருசித்ததில்லை ...
காதல் பூங்காவின் தென்றலா?
பாலைவன புயலா?
புரியாத புதிர் ...
இதையெல்லாம் அனுபவிக்க ,
எனக்கு உன் காதல்
வரம் தருவாயா ?

என் உயிர் உள்ள வரை

அன்பே...!
நீ என்னை விட்டு
சென்றாலும்...!
உன் நிழல் போன்று
பின்தொடருவேன்...!
என் நம்பிக்கை உள்ள வரை.
என் உயிர் உள்ள வரை.
அடித்து கூறும்..
அடிபட்டதை கூராது...

அளவுக்கு அதிகமாக் மகிழ்ச்சி

நான் சோகமாக
இருக்கும் போது
உன்(னை) (சிரிப்பை) பார்க்கும்
போது என்னவோ
தெரியவில்லை
என்னுள் அளவுக்கு அதிகமாக்
மகிழ்ச்சி அடைகிறேன்
அதனால்தான்
என்னவோ
தெரியவில்லை
என்னை விட்டு விலகி
சென்றுவிட்டாய் என்று...!

ஒரு நொடி

சோகம் மட்டுமே வாழ்க்கை கிடையாது !

சுகமாகவே நாளும் வாழ்ந்து விட வும் முடியாது !

சிமிட்டும் நம் இமைகள்
ஒரு நொடி இருண்டால் தான்

நம் -மால் பல நொடிகள் வெளிச்சத்தில் வாழ முடியும் என்பதை மறவாதீர்!!!!!!

முத்தம்

அன்று என் தாய் கொடுத்த முத்தத்திற்கும் இன்று நீ கொடுத்த முத்தத்திற்கும் சிறு வித்யாசம் அது பாசம் . இது வெறும் வேஷம்!!!!

அன்பே என் இதயம் - மொக்கை

அன்பே என் இதயம்
சுருங்கி விரிவது
நான் உன்னை சுமந்து
செல்வதால்
அவள் என்னிடம்
இதயம் நின்று விட்டால்
உன்னை
நான்கு பேர்
சுமந்து செல்வார்கள்.

Post a Comment (0)
Previous Post Next Post