காகிதத்தில் கவிதை (வாழ்கை) - காதல் - டாஸ்மாக் கவிதை

காகிதத்தில் கவிதை (வாழ்கை)

வாழ்கை ஒரு காகிதம் போன்றது அதில் கவிதை எழுதவதும் கசக்கி எறிவதும் உன் கையில் உள்ளது .

காதல்

அவள் என்னை பார்த்து முறைத்தாள் , நன் வருதபட்டனேன்,
என்று அவள் எண்ணி பார்த்து சிரித்தல்,இன்று என் வழ்கயை தொளைத்து விட்டேன் !!.

டாஸ்மாக் கவிதை

புத்தகத்தை படித்தல்,அறிவுக்கு கேடு என புத்தகத்தின் முதல் பக்கத்தில் எழுதினால் தான் படிப்பார்கள் "குடி" மக்கள் !!

திருமண வாழ்த்து

வாழ்த்திடுமே.. நீ வாழ்ந்திடவே.!

மேகமென்னும் கூந்தலினை
மின்னல் கீற்றால் தலை சீவி.
பனித்துளிகள் சிந்தும் பூக்களினால்
மிதமாக அலங்கரித்து.
முகமென்னும் பால் நிலவாம்
வானவில்லின் சாயம் பூசி,
வானம் கொண்ட நிறமதிலே..
அழகான சேலை நெய்து..
கட்டிய பெண் வந்தாள்.
கெட்டி மேளம் கொட்டிட தான்.

விண்மீன்கள் புன்னகையால்
புது கவிதைகள் பாடிடுமே.
பூங்காற்றும் தென்றலும் சேர
இசை சாரல் தூவிடுமே.
மஞ்சள் வேர் தனிலே
பொன் தாலியும் ஊஞ்சலாடிடுமே.
குங்குமமும் கன்னங்களில்
அழகாஇ சிவந்திடுமே.
சூரியனும்,சந்திரனும்
தன் ஒளிகளால் வாழ்த்திடுமே.
கெட்டி மெளத்துடன்.. நாதமும்
சேர்ந்து வாழ்த்திடுமே வாழ்த்திடுமே.
நீ வாழ்ந்திட வாழ்ந்திடவே.!

பார்த்து சிரிப்பா மச்சி மச்சி

பார்த்து சிரிப்பா
மச்சி மச்சி நீ பொண்ண நம்பாதே.
கோவப் பழம் போல்
நல்லாத் தான் இருப்பா
பின்னே வெம்பாதே.
பொண்ணு ஒரு கானல் நீரு..
பிரம்மன் செஞ்சு வச்சான் பாரு.
மெய்யா பொய்யானு நீ கிட்ட போய் பாரு.
பார்க்குறப்போ எல்லாமே
ஜோரு தான்; தங்கத் தேரு தான்
இல்லாட்டா பீரு தான்
நம்மூரு பாரு தான்.

போத ஏத்தும் அவ.. ஆ.. ஆ..
போத ஏத்தும் அவ
நடந்து வரும் டாஸ்மாக்கு.
வலியே நீ போய்
மாட்டிக்கிட்டா அது தான் சாக்கு.
கடல போட்டு கிட்டே
காச கரைப்பா பேக்கு.
சில நாள் போன பின்னே
கொடுப்பா அண்ணானு ஷாக்கு.
பார்க்க வச்சு
வழிய வைப்பா மாப்பிள.
அந்த கியாப்புல எஸ் ஆனா
ஆப்புல்லை, அது தான் சேப்புல..

பார்க்க குத்து விளக்கா..
பார்க்க குத்து விளக்கா
நல்லா தானே இருப்பா.
காதல் எண்ணை ஊத்தி
ஏத்தாதப்பா நீ பொறுப்பா.
நீ ஏத்த பார்க்கும் போது
மெல்ல தானே சிரிப்பா.
மவனே நீ கவுந்துப்புட்டா
சங்கு உனக்கு ரெடிப்பா..
பொண்ண பார்த்துபுட்டா
கிரீன் சிக்னல் போடதப்ப.
மச்சி நீ பொண்ண பார்த்து
நட்ப விட்டு ஓடாதப்பா.
அப்பப்பா இது தான் ஆப்பா
அட விடப்பா டெட்பாடி தாம்பா.

என் மனம்

எனது டைரிகளில்

பிரிந்து போன உன் நினைவுகள் !

சிதறிய மன கண்ணாடியில்

தினமும் உன் பிம்பங்கள் !

இப்பொது பிரிந்தாலும்

எப்போதாவது சேர்வோம்! - எத்தனை

ஜென்மகள் ஆனாலும் உன்னை

பிரிய நினைக்காது என் மனம் !

"பிரிவை நேசிக்காத உன் தோழன் "

மழையே

இப்படியே
பெய்துகொண்டே இரு
மழையே ...
உன்னை
பார்க்கும் சாக்கில்
ஜன்னலில் அவள் ........


விட்டில் பூசிகள் .

விடிவதற்குள்
வீழ்ந்து விடுவோம்
என தெரிந்தும் ..
எரியும் விளக்கோடு
விளையாடும்
ஏகாந்த பிறவிகள் ..

விட்டில் பூசிகள் .

என்ன குளிர் அன்பே..!

அன்பே...!
கொடைக்கானல் நீ
கொடையாக கொடுத்த மலையோ..!

ஊட்டி உனக்கு
ஒட்டிய உறவான மலையோ...!

சிம்லா நீ
சிறிது விளையாடுகிற மலையோ..!

சிரபுஞ்சி மழைத்தூரல் நீ
கையில் உதறும் நீரோ..!

என்ன குளிர் உன் தேகத்தில்
அன்பே..!

நான்


நான் நேசிக்கும் பலர் என்னை

நேசிக்க மறக்க நினைத்தாலும் ,

என்னை நேசிக்கும் சிலரை

நான் நினைக்க மறப்பதில்லை .

காணத்துடிக்கிறது...!

உன் மேல் தன் ஒளி பட்டு நீ தங்க
சிலையாக மாறுவதை சூரியன்
காணத்துடிக்கிறது...!

தன் முகத்தை நதிநீரில் தவிர உன்
முகத்தில் தெரிவதை சந்திரன்
காணத்துடிக்கிறது...!

உன் அழகிய பாதத்தை
கரையிலே பதித்தால்
அலை வந்து அழிப்பதை விட்டு விட்டு
அந்த பாதத்தின் உருவத்தை
கடலும்
காணத்துடிக்கிறது...!

உன் அழகைக் கண்டு...!

சூரியன் உன்னைக் கண்டு மறைகிறான்
உன் வெளிச்சமே உலகுக்கு போதுமென்று...!

சந்திரனும் உன்னைக் கண்டு மறைகிறான்
உன்னிடத்து இருந்து வரும் குளிரையே
மக்கள் தாங்க மாட்டார்கள் என்று...!

உன் வளையல்களிலிருந்து வரும் நூறு
வண்ணங்களைக் கண்டு
ஏழு வண்ணம் கொண்ட வானவில்லும்
மறைகிறது...!
உன் அழகில் துவண்டு...!

என்னவள்

நினைவாற்றலை வளர்க்க விரும்பினேன்

என் நினைவுகள் உன்னை சுற்றுவதால் !

ஆகாயத்தின் மேல் உன்னை வர்ணிக்க

விரும்பினேன் !

காகிதத்தின் நீளம் , அகலம் பத்தாததால் !

தேன் சுவையானது தான் :

இல்லை என்று யார் சொன்னது ?

உன் எச்சில் சுவைக்காத வரை !

பூக்களில் வரும் வாசனை அற்புதமாக

தோன்றவில்லை ;;;

உன் வாசம் கண்டதால் !

உன் சிரிப்பு உண்மையிலேயே அழகுதான்

இல்லை என்றல் அதை பார்க்க

இவ்வளவு ஆர்வம் வருவது ஏன் ?

ஆட்டம்...!

கண்களை ஏனோ நீரோட்டம்...

அது பெருகுகிறது ஆறாட்டம்...

என் மனதில் உன் பவனி தேரோட்டம்...

உடம்பினில் முடியாத ஆறோட்டம்...

உள்ளே ஏனோ போராட்டம்...

அது மீள முடியாத சேராட்டம்...மாட்டிக்கொண்டேன்
நான்...!

நீ என்னருகில்

வாழ்வில்
வெற்றியின் மகிழ்ச்சியில் சிறகடிக்கும் போதும் ....
தோல்வியில் மனமுடையும் போதும் ......

நேசிக்கும் போதும் .....
வெறுக்கும் போதும் ......

எனக்கு துணை இருந்த கவிதை !
எல்லாம் ரசிக்க தெரிந்தும் .........

நீ என்னருகில் இல்லாததால் எழுத முடியவில்லை !

அன்பே நீ என்னருகில் இருந்தால் இலக்கியத்தையும்

இயற்றுவேன் நம்பிகையுடன் !!!!!!



மாற்றி விட்டாய்...!

படுக்கையறையை
பறக்கும் அறையாக
மாற்றி விட்டாய்...!

சாப்பிடும் அறையில்
சாப்பிடகூடாதென
கட்டளை இட்டாய்..!

பூஜை அறையிலே
உனக்கு அர்ச்சனை செய்யும்
பூவாக எனை
மாற்றிவிட்டாய்...!

நாள் தோறும் நான் உனக்கு
பிரச்னை என்று
மறைமுகமாய்
காட்டி விட்டாய்...!

ஓடுவதை ஒரு கணம் நிறுத்துங்கள்!...

சாலையில்
யாராவது அடிபட்டு கிடந்தால்
உச் கொட்டி நகர்கிறோம்...

சாலையில்
கைநீட்டும் பிஞ்சு கைகளுக்குள்
ஒரு ருபாய் திணித்து
மனிதத்தை வாழவைதாத்தை
பெருமிதம் கொள்கிறோம்...

வெள்ளை நிறமே
அழகு என்கிறோம்....
அவர்களை பார்த்தால்
சிநேகித பார்வை கொள்கிறோம்...
ஆனால்
சாலையில்
கருப்பாய் ஒருவன் அருகில் வந்தால்
பயம் கொள்கிறோம்...

பெற்றோரை
காப்பகத்திற்கு விரட்டுகிறோம்...

அடுத்தவர்க்கு
உதவி செய்ய மறுக்கிறோம்...

பிறந்த தேசத்தை
வெளி தேசத்திற்கு சென்று
தூற்றுகிறோம்...

பணத்தை
பெட்டி பெட்டியாய்
சேர்க்க பறக்கிறோம்...

பொறுமை
என்ற வார்த்தையையே
இழந்தோம்...

இதையெல்லாம்விட
முதலுதவி வண்டிற்குகூட
வழிவிட மறுக்கிறோம்...

நாம்
எங்கே செல்கிறோம்...
எதனை நோக்கி ஓடுகிறோம்...
புரியவில்லை...

ஓடுவதை
ஒரு கணம் நிறுத்தி
திரும்பி பாருங்கள்
நீங்கள்
பெற்றது என்ன
இழந்தது என்ன
என்பதை.....

ஒன்றே
ஒன்றுமட்டும்
புரிகிறது
நாம் எல்லோரும்
எழுத்தறிவு பெற்றவர்கள்...
கல்வி கற்றவர்கள் இல்லை...
(we are all literated not educated...)

மரணம்

மரணம்
வாழ்க்கையின் முடிவல்ல....

இன்னொரு
பிறப்பிற்கான
அடையாளம்.........!


காதல்

இரவு இன்னும் விடியவில்லை எனா நினைத்தேன். பின்புதான் தெறிந்தது இரவே இன்னும் வரவில்லை என்று!

காதல் தோல்வி

இந்த இனையதளத்தில் "காதல் தோல்வி" என்ற ஒரு பகுதி உள்ளது.

உலகம் என்று இருண்டது. அது எங்கோ ஒரு இடத்தில் பகாலகதான் இருக்கிறது.

காதல் என்று தோற்றது?. காதலர்கள் தன் தொற்றுக்கொண்டிருக்கிரார்கள்!.

Post a Comment (0)
Previous Post Next Post