மகன் - கண்டு கொண்டேன் - குழந்தை(பருவம்)

மகன்




புதிய வீடு
கட்டினான்..!
திண்னையை பெரிதாக
வைத்தான்
பெற்றோருக்கு..!

கண்டு கொண்டேன்





கடவுளைத் தேடித் தேடி
தேய்ந்து போனது
கால்கள்!

காண முடியாமல்
காய்ந்து போயின
கண்கள்!

இறுதியில்
இமைகளை
மூடிக் கொண்டு
தேடினேன்!

ஞானம் பிறந்தது...
பத்து மாதங்களாய்
கருவறையில் காத்து
பெற்று வளர்த்த
தாயே கடவுள்..!

குழந்தை(பருவம்)





உன் பூனையும் என் புறாவும்
சண்டை போட்டதன் பின் திட்டியதற்கா?
கேரம் போர்டில் தோற்றுப்போனதற்காய்
கலைத்துவிட்டு மொண்டியடித்து ஓடிவிட்டதற்கா?
மாமா கொடுத்த பம்பர கயிறை
நான் மறைவாய் ஒளித்து வைத்ததற்கா?
எதற்கு உம்மென இருக்கிறாய்
சாரி அக்கா
ஓரமாகவே உட்கார்ந்து என்ன தான் செய்கிறாய்?
நான் உன்னிடம் ஏன் வரக்கூடாது?
அக்கா என்னுடன் விளையாட வருவியா?

விடியல் உன் கையில்



இரவின் மடியில் சாய்ந்து கொண்டு
விடியலுக்காக காத்திருப்பதை விட
இரவின் கைபிடித்து நடைபயணம்
- செய்துபார்
விடியல் உனக்காக வரவேற்புகம்பளம்
விரித்து காத்திருக்கும்

உழைப்பென்னும் உளி கொண்டு
செதுக்கிபார் - உன் மனதை
உயிருள்ள சிற்பமாய் காட்சியளிப்பாள்
உன் வெற்றி தேவதை

வாய்ப்புகள் வாயிற்கதவை தட்டும் என
காலச்சக்கரத்தை வேடிக்கை பார்ப்பதை விட
காலச்சக்கரத்துடன் நீயும் சுழன்று பார்
வாய்ப்புகள் உன் வாசலில் வரிசையில்
நிற்க வாய்ப்பு கேட்கும்

கற்கள் கால்களை பதம்பார்த்தாலும்
நதிகள் தன் ஓட்டத்தை நிறுத்துவதில்லை
கடலில் கலக்கும் வரை

மனிதா
நீயும் கடிவாளம் கட்டிய குதிரையாய் - ஓடிப்பார்
உன் இலட்சிய பாதையில்
உன் இலக்கு உன் கையில் ஜொலிக்கும்
நிலக்கரி பிரித்த வைரமாய்.

இறுதி ஆசை...





அவள் சூடி வீசியெறிந்த
வாடிய பூக்களை
சேகரித்து வைத்திருக்கிறேன்,
என் இறுதி ஊர்வலத்தில்
அதை மட்டும்
என் மீது வீசுங்கள்...

அவள் காலடிச் சுவடுபட்ட
மண்ணை சேகரித்து
வைத்திருக்கிறேன்,
அதனால் மட்டுமே
என் கல்லறைச்
சுவரை எழுப்புங்கள்...

அவள் விழிகளில்
தொடங்கிய என் காதல்,
அவள் பாதங்களிலேயே
முடியட்டும்.

ஜெயிக்காது



முயலும் ஜெயிக்கும்
ஆமையும் ஜெயிக்கும்
முயலாமை ஜெயிக்காது!

விளையாட்டு!




நிலவைக்
கலைத்து விளையாடுகிறது
தேங்கிய நீரில் மழைத்துளி

திருட்டு



திருடு போனது...
வீட்டைக் காக்க வாங்கி வந்த
விலை உயர்ந்த நாய்!

ஒரு உயிர்

உரிமை
சொல்ல
உறவுகள்
இருந்தாலும்
உள்ளதை
புரிந்து
கொள்ள
ஒரு
உயிர்
நீ போதும்

“அம்மா ”

அவளை பார்க்கும்போது

சொல்ல நினைக்கிறேன் …

அவள் சிரிக்கும்போது

சொல்ல நினைக்கிறேன் …

அவள் என்னை முத்தம் இடும்போது

சொல்ல நினைக்கிறேன் …

அனால் சொல்ல

முடியவில்லை !!!

கடவுளே …

எனக்கு சீக்கிரம்

பேசும் சக்தியை கொடு …

அவளை “அம்மா ”

என்றழைக்க …

நான் வேண்டும் வரங்கள்

நான் வேண்டும் வரங்கள்:-
*தினம் தினம் பௌர்ணமி....
*நினைத்த உடன் மழை.......
*சாலையோர பூக்கள்......
*அதிகாலை பனித்துளி.......
*இரவு நேர மெல்லிசை.......
*கள்ளமில்லா சிரிப்பு........
*பொய்யில்லா நட்பு......
*தினம் நூறு கவிதைகள்.......
*கவலையற்ற கல்லூரி நாட்கள்.......
*தோள் சாய உண்மையான தோழன்.....
*பாசம் உள்ள சகோதரன்.......
*தாய் மடி தூக்கம்......
*தூக்கத்தில் மரணம்.........

காரணம்

காணும் இடமெங்கும் நீ இல்லை!
பேசும் வார்த்தைகளில் உன் பெயர் இல்லை!
உலகமே என்னை பார்ப்பது போன்று உணரவில்லை!
ஏன் என்னையே எனக்கு தெரியவில்லை!

காரணம் -

எனக்கு பைத்தியம்!
[அவள் மீது வைத்த அன்பினால்]


அம்மாவிற்கு நான் அடிமை

உறங்கவில்லை இரு விழியும் -
நெடுநேரம் வேலை செய்பவன்
வீடு திரும்பும் வரை

காத்திருப்பவள் என் மனைவி அல்ல

எனக்காக வாழ்ந்து எனக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கும் என் அம்மா!

அம்மாவிற்கு நான் அடிமை!

சந்தோஷ தோல்வி

தேர்வில் அவள் நினைவு
அனைத்து கேள்விகளுக்கும்
பதில் தெரிந்தது -
எழுதினேன்!
தேர்வு முடிவு - தோல்வி.

எனக்கு சந்தோஷம்!

காரணம்-

தேர்வுத்தாளில் என் பெயர் எழுதுவதற்கு
பதிலாக அவள் பெயரை எழுதிவிட்டேன்.

உன்னை போல்

உதடு பிரியா

புன்னகை !

ஆடம்பரமில்லா

வெட்கம் !

எளிமையான அந்த

குறும்பு பார்வை !

உன்னை போல்

உலகில் ஒன்பது

பேரெல்லாம் ....

நிச்சயமாய் ....

இருக்க முடியாது ....

வேண்டாம் பெண்ணே...

நானாக நான் இருக்க
விரும்புகிறேன்!

பருவப்பெண்ணே...!
ஆடைகளை திருத்துவது
போன்று அழைப்பு விடாதே...

காதோரப் பார்வை வீசி என்னை
கவிஞன் ஆக்காதே....

குழந்தைகளை கொஞ்சி
சிலேடை பேசாதே....

வேண்டாம் பெண்ணே
நான் நானாக இருக்க விரும்புகிறேன்....

பிரியமானவன்

உன்னோடு சில நாள்

உன் நினைவோடு

பல நாள்......

என்றும் உன் பிரிவை

நேசிக்காத பிரியமானவன் ......

கடவுள் எங்கே ?

மிக பெரிய பாத்திரம் !!

கைப்பிடி அளவு சோறு வேண்டி

ஏந்துகிறாள் கிழவி

கடவுளின் சந்நிதியில் !!

மாறும் காலம்

உன் அன்புக்கு ஏங்கினேன்

அரவணைத்தாய் !

உன் பாசத்துக்கு ஏங்கினேன்

பரிவு காட்டினாய் !

உன்மடி சாய ஏங்கினேன்

என்னை தாலாட்டினாய் !

இப்போது

மணவறையில் நீ

மரண படுக்கையில் நான் ........







அடுக்குமாடி குடியிருப்பு.

புதியதாக அடுக்குமாடி குடிருப்பில் வசித்து வரும் நன் , மனித முகங்களை கண்டதை விட அவர்களின் காலனிகளை கண்டிருக்கிறான்.

Post a Comment (0)
Previous Post Next Post