அறைந்தால்
ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டுவேன்
அறைந்தது
"அவளின் உதடுகளாக"
இருந்தால் மட்டுமே....
காதல்
காதல்
பெண் பார்த்து வந்த பின் ஏங்கும் கிராமத்து காதல்
ஆண் :
பொண்ணு பார்த்து வந்த நாளாய்
போக வில்லை பொழுது
பூங்கொடியே உன்னை நினைத்து
பூரிக்குது மனசு
காணும் இடம் எல்லாம்
கருத்தவளே உன் முகம்
காணத் தவிக்குறேனே
கண் மூடி உன்னை மட்டும்
கடை திறந்து நான் இருக்க
கவனம் இல்ல தொழில் மேல
பெண் :
கருத்த மச்சான் என்னஇது
கண் மூடி என் நினைவா
கடையினிலே நீ இருந்தா
காசு பணம் சேர்ந்திடுமா
கணக்காக வாழ
கடை கணக்கில் கவனம் வை
காலையிலும் மாலையிலும்
கவனத்தில் என்னை வை
காகம் வந்து தூக்கி போக
நான் பாட்டி சுட்ட வடையா
கவலை வேணாம் தை மாதம்
நான் வருவேன் துணையா
ஆண் :
கண்ணாட்டி உன் பதிலும்
கணக்காக இருக்குதடி
கருத்தவளே என்னை விட
கடை காசு பெருசாச்சோ
போன வார சந்தையிலே
பொருக்கி எடுத்த சேலை
உன் நினைவா வச்சுருக்கேன்
மச்சு திண்ணை மேல
ராத்திரியில் உன் நினைவா
அதை பொத்திகிட்டு படுப்பேன்
காலையிலே கண் முழிச்சா
அதை நெனச்சி சிரிப்பேன்
பெண் :
அசட்டு மச்சான், ஆசை மச்சான்
அத்தனை ஆசையா எம் மேலே
இப்படிக்கு நீ இருந்தா
ரெண்டு மாத காலத்தில
இளச்சித்தான் போயிடுவ
என்ன இது கலிகாலம்
அப்பச்சி தச்சு வச்ச
சட்டைதான் பத்தாதோ
கைக்கு நான் வாங்கி வச்ச
கடிகாரம் பொருந்தாதோ
என் ராசா, என் சாமி
இப்படிக்கு இருக்காதே
ஊரு கண்ணு எல்லாமே
உன் மேலே படுமே
கவனமா நீ இரு
கல்யாணம் முடியுமட்டும்
அப்புறமா நீ என்னை
உன் கையில் வச்சு தாங்கிகோ
நான் உன்னை என்
நெஞ்சில் வச்சு பார்த்துப்பேன்.
அது தான் சொர்ககம்
காதலியின் இதழை
இதழ் கொண்டு,
உற்று பாருங்கள்....
தெரியும்....
அது தான் சொர்ககம்....!
காதல் பற்றி எழுதிய கவிகள்
காதல் பற்றி
எழுதிய கவிகள்,
எல்லாமே கடலில்
இட்ட கடுகு
போன்றது...!
காதல் ஒண்ணும்,
அடைப்பு குறிக்குள்
அடைக்கும்
வார்த்தைகள்
இல்லை....!
அம்பு குறி இட்ட சிவப்பு
ஈர இதயமும் இல்லை....
அடி கோடு இட்ட
வாக்கியமும் இல்லை....
இத்துணை சொல்லி விட்டு,
நான் எப்படி விளக்குவது... காதலை?,
காதல் கொள்ளுங்கள்........
அதை யாருக்கேனும், விளங்க வைக்க
உங்களுக்கேனும் முடிகிறதா
பார்ப்போம்.....!
என் முடிய போகும் ஒரு ஜென்மம்
சற்றென.... உன்னை பார்த்து விட்டேன்....
அந்த காட்சியை மட்டும் பதித்து இமையைய் மூட மறுக்கும்
எனது கண்களுடன் பேச்சு வார்த்தைநடத்த,
பிரமனிடம் ஏழு ஜென்ம ஆயுள்-ஐ
கேட்டு சென்று இருக்கிறது......
என் முடிய போகும் ஒரு ஜென்மம் .....!
என் காதலால் உனக்கு காதலை புரியவைப்பேன்...!
வார்த்தையின் வலியகரங்கள்
கொண்டு அடித்து விட்டாய்..
என் மனதில்..
ரணமாகி குருதியில்
நனைகிறது என் இருதயம்...
இன்பம் பெற்றாயோ
என்னை வருத்திவிட்டு..
நீ இன்பமாய் இருப்பாய் என்றால்
வருத்திக் கொண்டே இரு.
கலங்கமாட்டேன்..
என் காதலால் உனக்கு
காதலை புரியவைப்பேன்...
என் உயிரே
மயக்கத்திலாழ்ந்து....
மதி இழந்து
வாழ்வை இழந்து
இழந்து போன
வாழ்வை எண்ணி வருந்தி
நிம்மதி இன்றி
நித்தமும் மறக்க முடியாமல்
நினைக்க வைக்கும் நினைவே
உனக்கு பெயர் தான்
காதலோ??
ஏதுமில்லை
என்னிடம் உனக்காக தர
அன்பை தவிர ஒன்றும் இல்லை
என் அன்பையும்
என் காதலையும்
உன் இதயத்தோடு
பத்திரமாய் வைத்துகொள்
என் உயிரே..
என் ஆசையை சொல்ல என் காதலி எங்கே இருக்கிறாள்?
வான் மேகம் பொய்த்தாலும்
உன் கார்மேக கூந்தலின்
சாரலில் நனைய ஆசை...
இருளில் உறங்கினாலும்
உன் இமைக்குள் இருக்கும்
விழியில் உறங்க ஆசை...
தூரத்தில் இருந்தாலும்
உன் சுவாசத்தோடு
உயிர் கலந்திட ஆசை...
உளியின் ஓசைபோல
உன் உதட்டின் வழியே
வார்த்தைகளாகிட ஆசை...
இதயத்துடிப்பின் இடைவெளியை
உன் இதயதுடிப்பால்
நிரப்பிவிட ஆசை...
விண்ணுக்கு ஒரு நிலவுபோல
எனக்குள் ஒரு நிலவாய்
உன்னை வரைய ஆசை....
நித்தம் ஒரு கவிதை
உனக்காகவே எழுத
முத்தம்போன்ற ஆசை....
கவிதையை சொல்ல தமிழ் காதலி இங்கே இருக்கிறாள்...
என் ஆசையை சொல்ல என் காதலி எங்கே இருக்கிறாள்?
உனக்கு என்மேல் காதலா
கவிஞருக்கு கவிதை மீது காதல்
கடலுக்கு அலைகள் மீது காதல்
சிற்பிக்கு சிலை மீது காதல்
மீனுக்கு தண்ணீர் மீது காதல்
பனித்துளிக்கு மலர் மீது காதல்
ஓவியர்க்கு ஒவியம் மீது காதல்
மழைக்கு பூமி மீது காதல்
கடிகாரத்துக்கு காலம் மீது காதல்
எனக்கு உன் மீது
என்றென்றும் காதல்
உனக்கு என்மேல் காதலா??:
சொல் அன்பே.....!!!
காதல் இல்லாமல் காற்று கூட அசைவதில்லை
தொட்டிலில் ஆடும் வயதில்
தாய்பால் மீது காதல்...
எட்டிப்பிடிக்க இயலாத வயதில்
தட்டான் மீது காதல்...
பள்ளிக்கு போகும் வயதில்
விடுமுறை மீது காதல்....
பதினெட்டு தொடங்கும் வயதில்
பருவத்தின் மீது காதல்....
பக்குவம் வரும் வயதில்
பதி மீது காதல்...
கம்பீர நடை போடும் வயதில்
சேய் மீது காதல்...
முடி நரை போடும் வயதில்
முதிர்ச்சி மீது காதல்...
ஆதி முதல் அந்தம் வரை
எத்தனை காதல் வாழ்வில்...
காதல் இல்லாமல் காற்று கூட
அசைவதில்லை
குடும்ப கட்டுப்பாடு
கட்டில் சிரித்தது
தொட்டில் வந்தது
தொட்டில் அழுதது-துணைத்
தொட்டில் வந்தது
தம்பதியரே இனி
கட்டிலை அழவிட்டு
தொட்டிலை சிரிக்க வையுங்கள்!
மவுனம்
அன்பே !...
நீ சொல்வாய் என நானும் .....
நான் சொல்வேன் என நீயும் ....
மவுனமாய் இருந்தே நம் காதல்
மடிந்து போனது .....!!!!!!!!!
சந்தோசம்
ஜோசியத்தில்
நம்பிக்கை
இல்லை …
ஆனாலும்
பார்த்தேன் ,
அந்த
கிளியின்
5 நிமிட
விடுதலைக்காக .
என் இதயம்
என் இதயம் எதை
மறக்க சொன்னாலும் -மறந்துவிடும்!
ஆனால்
உன்னை மறக்க சொன்னால் -அது
துடிப்பதை நிறுத்திவிடும் !!!!
என் அன்பே
யார் உன் மீது வைத்திருக்கும் - அன்பை
தவறாகவோ அல்லது வேறு விதமாகவோ
நினைத்து விடாதே! - அப்போது
உன்னை விட மிருகம் வேறு யாரும் இல்லை !!!!
எங்கும் தமிழ்
அயல் நாட்டு நவநாகரிகத்தில் சிக்கி
தமிழ் மறந்த நச்சரவங்களே!
தாய்ப்பலில்லை என்பதால்
தாயை கொல்வதா?
சொத்தில்லை என்பதால்
தந்தையை தள்ளுவதா?
தமிழால் பயனில்லை என்று
தரையில் போட்டு மிதிப்பதா?
நிலையா பொருள் தேடி
நிலையான தமிழ் மறந்தீர்
தொலையும் பொருள் தேடி
தொலையா தொல்தமிழ் தொலைத்தீர்!
வறுமையுற்ற போதும் -நான்
வருந்தவில்லை -தமிழ்
சிறுமையடையும் போது துடிக்கிறேன்
பெருமைக்கு சொல்லவில்லை -மக்கள்
ஒருமைபாட்டிற்கு சொல்கிறேன்!
கான்வென்ட் கல்வி கற்க
கற்பக விருட்சத்தை சாய்ப்பதா?
ஆங்கிலம் பயில் வேண்டி
ஆலமரத்தை அறுப்பதா!
அன்புத் தமிழை இகழ்ந்து அயல்மொழிக்கு
அச்சாரம் கொடுப்பதா
அற்ப வாழ்வு பெறுவதற்கு
அற்புதத்தை இழப்பதா
வாழவைக்கும் தமிழகத்திற்கு
ஒண்ட வந்த பிடாரியே! ஒதுங்கிப் போ
ஆண்ட வந்த பிடாரியே - நீ
அடங்கிப் போ!
தமிழ் சிங்கங்களே உங்கள்
மனம் என்ன விளையா நிலமா
கலையாத கருமேகமா
கம்பீரமில்லாத பூதமா
கரையாது ஒளிவீசும் கற்பூரத் தமிழை
குறையாக நினைத்தீரோ
மறவனே தொங்கவிட்ட
முகத்தை தூக்கி நிறுத்தி
தொடை தட்டி தமிழ் கொடியேற்றி
நற்றமிழ் புகழ் பரப்ப
நாளிரண்டு திசையும் புறப்படுவீர்!
மரணம்
மூச்சு நின்றால் மட்டும் மரணமில்லை............
உன்னுடைய முயற்சி நின்றாலும் மரணம் தான்........
பூக்களும், நார்களும்!
"பூவோடு சேர்ந்த நாரும்
மணம் பெறும்..."
சிரித்தன பூக்கள்!
"நாங்கள் இல்லையென்றால்
நீங்கள் உதிரிப்பூக்களே..."
நினைத்தன நார்கள்!
வெயில் கொடுமை
விடுமுறை காலத்தில்
கல்லூரி தேவதைகளின்
தரிசனம் கிடைக்காததால்,
உஷ்ணப் பெருமூச்சு விடுகிறானோ...
சூரியன்!
அம்மாவின் விதி!
உலகத்து சொந்தங்களை
உனக்கு அறிமுகப்படுத்திய
உன் முதல் சொந்தம்
இன்று
முதியோர் இல்லத்தில்!