மூக்கின் சுவாசம் - கண்களை மூடும் - அறியா பொழுது

மூக்கின் சுவாசம்

அனைவரும் கூறுகின்றனர்
அவரவர் மூக்கின் துவாரத்தில் சுவசிக்கிறார்கலாம்!
அது எப்படி என் சுவாசம் மட்டும் உன் மூக்கில் இருந்து வருகிறது!

கண்களை மூடும்

அவள்
தினம் நான் கண்களை
மூடும்
பொழுதுதான் வருகிறாள்......

அன்று
என் கனவில் !
இன்று
என் கல்லறைக்கு !

அறியா பொழுது

கட்டியணைத்தேன்!
முத்தம் கொடுத்தேன்!
இட பக்கம் வல பக்கம்
நெஞ்சினில் வைத்தேன்!

என்னவள் கொண்டிருந்த
கரடி பொம்மையை -

அவள் அறியா பொழுது!

[திருட்டு தனமாக ]

மறந்து விடு

அவள் என்னை
மறந்து விடு என்றாள்....
அவள் என்னை மறக்காமல்
மறந்து விட்டதாக கூறி.....
நான்
அவளை மறக்க நினைக்கும்
போதெல்லாம் .....
அவள் நினைவுகள்
தினம் என்னை கொள்கிறது.....
இந்த வேதனைக்கு
நான் இறந்து விடுவேன்........
அவளுக்காக......

உன்னை மறக்கும் என்னம்

உன்னை மறக்கும் என்னம்
என் இதயத்தில் இல்லை.......
அப்படி மறந்தால் அது
என் இதயம் இல்லை .......


__ கார்த்திக்.பெ

பிம்பம்

கண்ணாடி மட்டுமா
பிம்பம் காட்டும்!
என் கருவிழியும்
காட்டுமடி
உன் பிம்பம்!

தேவதை

பெண்ணே !!!

உன் பெற்றோர்கள் மானிடர்கள் -தான்

அதை நான் மறுக்கவில்லை ..

அவர்களுக்கு பிறந்த நீ மட்டும் - எப்படி

தேவதை ஆனாய் ?

வந்துவிடு

ஒக்சிஜன் இல்லாமலும் சுவாசித்துக்கொள்ளும் - என் சுவாசப்பை
நீ இல்லாமல் சுவாசிக்க மறுக்குதடி
வந்துவிடு வாழ்வு தர அல்ல
வாழ்த்துச் சொல்ல......

பிடிக்கும்

கனவுகளினால் காவுகொள்ளப்படும்
இரவுகளுக்கு மட்டுமல்ல..
உன்னால் காவுகொள்ளப்பட்ட
எனக்கும் தான்..
இந்த மெளனங்களைப் பிடிக்கும்
உன்னைப் பிரிந்ததிலிருந்து.....

சொல்

இது சமாந்தரம் அல்ல
இணைகரம் என்று சொல்..
இது மௌனம் அல்ல
மொழிதல் என்று சொல்..
இது முரண்பாடு அல்ல
சமன்பாடு என்று சொல்..
இது பிரிவல்ல
உறவென்று சொல்.

வீணடி

பாதிப் பருவம் வீணடி
உன்னைப் பார்க்காமல் போனது..
மீதிப் பருவமும் வீணடி
உன்னைப் பார்த்த போது......

போதை

மாது கையில் மதுவைத்தந்தாள்...
இருந்தும்
போதை அதிகமில்லை...
அவள் பார்வையை விடவும்.

உனதுருவம்

நிஜமாகவே சொல்லடி உனது பார்வையின் அர்த்தம்தான் என்ன?
தெரியாமலே தேடிக்கொண்டிருக்கிறேன் எனதிரவுகளை...
ஆனாலும்,
அங்கே கிடைப்பதெல்லாம் உனதுருவம் மட்டும் தான்..

படகாக

கதை பேசிக்கொண்டே வா
காற்றோடு போவோம்
உரையாடல் தீர்ந்தாலும் உன்
மௌனங்கள் போதும்
நீ
போட்ட கடிதத்தின் வரிகள்
கடலாக அதில் மிதந்தேனே பெண்ணே
நானும் படகாக....!

முதல் முத்தம்

முதல் முத்தம்
நினைவு கூறும் போதெல்லாம்
கைகளால் முகத்தை மூடுகிறாய்
விரல் இடுக்கில்
வழிகிறது நாணம்...!

தாலாட்டும் காதல்

கண்ணுறங்கும் போது
தாலாட்டும் காதல்...!

குழந்தையின் சிரிப்பு

இறைவன் படைத்து
இயல்பு கெடாமல்
தொடரும் பட்டியலில்
இன்றும் இருக்கிறது
குழந்தையின் சிரிப்பு....!

மின்னலைப் பார்த்தல்

மின்னலைப் பார்த்தல்
கண்ணை பறிக்கும்
என்பார்கள்
நான் பார்த்த மின்னலோ
என் கண்ணை
மட்டுமல்ல
என் இதயத்தையும்
பறித்து கொண்டது
என் இதயத்தை
பிரித்த மின்னலே
என் உயிரையும்
பறித்து விடு.......!

ஞாபகபடுத்துகிறதே

தினமும் நான் சாப்பிடும்
சாப்பாடு கூட
உன்னை எனக்கு
ஞாபகபடுத்துகிறதே....!
எப்படிதான் நினைத்தாய் ?
என்னால் உன்னை
மறந்து விட்டு நிம்மதியாக
வாழ (சாப்பிட) முடியும் என்று !

ஒரே ஒரு எழுத்தில் கவிதை

ஒரே ஒரு எழுத்தில்
கவிதை ஓவியம் சிற்பம் பற்றி
கவிதை எழுதச் சொன்னாய்....!
நீ முடிக்கும் முன்பே
நான் எழுதி முடித்தேன்....!

" நீ "

Post a Comment (0)
Previous Post Next Post