கைபேசி கேட்குதடி.... - paannaa - யாரடி நீ மோகினி...!

கைபேசி கேட்குதடி....

உன் முத்தம்
பெற்றெ
விலைமதிப்பற்றுப்போன-என்
கைபேசி கேட்குதடி....
உன் தேன்
முத்தங்களையும்
உன் குயில்
குரலையும்
எப்படியடி சொல்வேன்-என்
காதல் மரித்ததையும்....!!-நீ
காதல் மறந்ததையும்....!!

paannaa

காட்டுத்தீ
என்பது
கண்கலள்
காண முடியாது
காண்கிறேன்
உன்கண்களில்










யாரடி நீ மோகினி...!

என் மனம் என்னும் மலையை உன்
சிரிப்பினால் சிதற செய்தாய்...!
என் குணம் என்னும் கோபத்தை உன்
பார்வையில் படிய வைத்தாய்...!
என் நெஞ்சம் என்னும் நெருப்பினில் நீ
பஞ்சு மூட்டி குளிர் காய்ந்தாய்...!
என் கண்கள் எனும் காவலை மீறி
உன் காதல் அ(ம்)ன்பை வீசினாய்...
யாரடி நீ மோகினி...!

இருட்டுவது...!

வானத்தின் வண்ணம்
ஓன்று தான்
அது இருட்டுவது...!
மழைக்காகத்தான்...

நெஞ்சத்தின் எண்ணம்
ஓன்று தான்
அது இருட்டுவது...!
மகிழ்ச்சிக்காகத்தான்....!

நேற்று அடித்தது வலிக்கிறதா...!

வானம் தன் அழகை
காட்டிக் கொண்டிருக்கிறது...
பூமி தன் அழகை
காட்டிக் கொண்டிருக்கிறது...
மரமே நீ மட்டும்
ஏன் அசையாமல் நிற்கிறாய்....
காற்று அடிக்கவில்லையா...இல்லை
நான்
நேற்று அடித்தது வலிக்கிறதா...!

காதல்

காதல்
என்பது
உனக்கும்
எனக்கும்
சொந்தமான
சொற்கம்














கடவுள்

காதல்
நமக்கு
கடவுள்தத்த
பரிசு


கவிதை புயல் சுபாஷ்

இருக்கு என்றல்ல இல்லையென்றவாது..!

பிறப்பது ஒரு முறை தான்
ஆனால் உன் பார்வையில் நான்
தினமும் பிறக்கிறேன்...!

இறப்பது ஒரு முறை தான்
ஆனால் உன் மௌனத்தால் நான்
தினமும் இறக்கிறேன்...!
கூறி விடு காதல் இருக்கு என்றல்ல இல்லையென்றவாது..! ஒரு முறை...!

உன் நகலை...!

தென்றல் என்னை வருடியது
கண்டேன் அதில்
உன் நகலை...!

அந்தி வானம் என்னை மயக்கியது
கண்டேன் அதில்
உன் நகலை...!

வானவில்லின் வண்ணத்திலும்
கண்டேன்
உன் நகலை...!

மழை தூறும் சாரலிலும்
கண்டேன்
உன் நகலை...!

கரு மேகத்தில் வரும் மின்னலிலும்
கண்டேன்
உன் நகலை...!

என்ன கலை....
உன் நகலில் கூட கண்டுகொண்டேன்
பல கலை...!

யுகம்

உன்னோடு
வாழ
ஒரு யுகம்
போதாது....!
பல யுகம்
கொடுத்தாலும்
தீறாது.....!



இந்த காதல் வெற்றியா தோல்வியா ?

இந்த காதல் வெற்றியா தோல்வியா ?
=====================================

என் காதலை
உன்னிடம் சொன்னவுடன்

நீ
"சரி" என்று சொல்லிருந்தால்
உனக்காக கட்டிருப்பேன் ஒரு
தாஜ்மஹாலை

நீ
"இல்லை" என்று சொல்லிருந்தால்
உனக்காக வளர்திருபேன் ஒரு
முழம் தாடியாவது

ஆனால்
நீ
"பிடிக்கவில்லை" என்று சொல்லிவிட்டாய்
இப்போது பிடிக்கவில்லை என்பது
நாளையே பிடித்தும் போகலாம்
இப்போது பிடிப்பது என்பது
நாளையே பிடிக்காமலும் போகலாம்

நீயே சொல்லு
இப்பொது
நான்
தாஜ்மஹாலை கட்டுவதா?
தாடியை வளர்ப்பதா?

தமிழ்மறவன் வாழ்க..!

கட்டி அணைத்தான்
கட்டிப் புரண்டான்!
ஆண்மை துளிர்க்க
விழிகள் சிவந்தான்!
விட்டுப் பிரிந்தான்
பாய்ந்து பிடித்தான்!
பல் பதிந்தும் நகங்கள் பதிந்தும்
இரத்தம் சொறிந்தான்!
பதுங்கி பாய்ந்த சிறுத்தையதை
பட்டாக்கத்திக்குப் பலியாக்கினான்!
வாழ்க! வீரத்தமிழ் மறவன்!

எப்போது கேட்பாய் ?

உன்னிடம் சொல்வதற்கென்றே
யோசித்து வைத்துள்ளேன்
நிறைய பதில்களை.
நீ
எப்போது வந்து கேட்கபோகிறாய்
கேள்விகளை ?

புது மொழி

அன்பிற்கு உண்டா அடைக்கும் தாழ்
என்பது சொல்வழக்கு...

என்னை பொறுத்தவரையில்
அன்பிற்கு உண்டு அடைக்கும் தாழ்...

பெற்றோகளின் அன்பு
பிள்ளைகள் தவறான வழிகளில் செல்லாவண்ணம்
அடைக்கும் தாழ்...

மனைவின் அன்பு
கணவன் தவறான வழிகளில் செல்லாவண்ணம்
அடைக்கும் தாழ்...

நண்பர்களின் அன்பு
நம்மை தவறான வழிகளில் செல்லாவண்ணம்
அடைக்கும் தாழ்...

என்ன
நான் சொல்லுவது சரிதானே.

வேலையே!

வேலைவாய்ப்பு அலுவலகத்தில்
பதிவு செய்யும் ஒவ்வொரு முறையும்
இனி இங்கு வரவே கூடாது
என்பதற்காகவே எனக்கு
வேலை கிடைக்க வெண்டுமென வேண்டுவேன்
எல்லோரும் வெண்டுபவனிடம்
வேலை கிடைத்தும் வந்துகொண்டுதான்
இருகிறேன்,
வேலையே!
வேலை வாய்ப்பு அலுவலகத்தில்......

நினைக்க மறந்த கவிதை

வார்த்தைகளே இல்லாத
உணர்வுகளை தட்டி எழுப்பும்
சிறந்த கவிதை...

இந்த அவசர யுகத்தில்
நாம்
நினைக்க மறந்த மாபெரும் கவிதை
"பெற்றோர்"

என் காதலிக்காக ஒரு கவிதை

என் காதலிக்காக ஒரு கவிதை
எழுத நினைத்தேன்...

என் கற்பனை குதிரையை
ஓட விட்டு...
பல நூறு காகிதங்களை
சுக்கல் சுக்கலாக்கி...

முடிவில் எழுதி முடித்தேன்
"அவளின் பெயரையே"
ஒரு சிறந்த கவிதையாக...

ஆதங்கம்

அவள் வந்துவிட்டாள் என்று - எண்ணினேன்

பிறகுதான் தெரிந்தது -அது

இடி , மின்னல் என்று .!

வழி

மருத்துவர் கூறினார் என் இதயத்தில்

துவாரம் என்று !

அவருக்கு எப்படி தெரியும் ?

என்னவள் புகுந்த வழி அது என்று !!

நினைவுகள்

மனதுக்கு பிடித்தவர்களை பார்க்காமல் -கூட

இருந்து விடலாம் .......! - அனால்

நினைக்காமல் ஒரு போதும்

இருக்க முடியாது ......!

என்றும் உன் நினைவில் நான்.


Post a Comment (0)
Previous Post Next Post