நீ இல்லாமல் .... - நீ மேல் இமை நான் கீழ் இமை - பிரசவம்

நீ இல்லாமல் ....

அன்று என் கண்ணீர் கூட
சுகமானது தான்
துடைக்க நீ இருந்ததால் ...!
ஆனால்
இன்று என் சிரிப்பு கூட
வேதனையை தருகிறது
சேர்ந்து சிரிக்க
நீ இல்லாமல் ....

நீ மேல் இமை நான் கீழ் இமை

நீ மேல் இமை

நான் கீழ் இமை

வா கனவிலாவாது

ஒன்றாவோம்

பிரசவம்

தலைகோதி
கரம்பற்றி
துணையாக நானிருக்க,
நீ ஈனும் குழந்தையுடன்
மீண்டும் பிறக்கின்றன…
முத்தமிட்டு
தோள் சாய்ந்து
நீ பார்க்க,
நான் கவிதையெழுதிய காதல்கணங்கள்!

குழந்தையாய் நான்

குழந்தையாய் நானிருந்து

பல ஆண்டுகள் கடந்தபோதும்

மறுபடி

குழந்தையாய் உன்னைக்

கேட்டு அடம்பிடிக்கிறேனே நான்

உன் பார்வையில்!

உனக்காய்
எழுதப்பட்ட
கவிதைகள்
ஏராளம்

எனினும்..

என்னை
கவிஞனாக்கிய
உன் கடைசி
கடிதம் மட்டும்

இருண்டுபோன
என் இதயத்துக்குள்
நிலவாக விழித்திருக்குதடி!

உன்னை நினைத்து !

உன்னுடன் பேசும் பொது உலகத்தை மறந்தேன் , பேசிய பின் என்னையே மறந்தேன் ... உன்னை நினைத்து !

உன் நினைவின்றி வாழமுடியுமா..?

மறப்பதா..?
உன்னையா…?
நானா..?
பேசாமல் என்னை நீ
செத்துப்போக சொல்லி
இருக்கலாம்
நீர் இன்றி வாழலாம்
உன் நினைவின்றி
வாழமுடியுமா..?

உன் நினைவுகளில்

உன்
நினைவுகளில்
நீந்துவதற்கும்
மூழ்குவதற்கும்

என்
கண்ணீர்தான்
கற்றுத்தந்தது.

ம்ம்ம்….
எனக்கான உலகமாய் நீயிருந்தாய்
உன்னை சுற்றியே என் நினைப்பிருந்தது
உண்மைதான்

அதுசரி…
உண்மையான காதலால் மட்டும்தானே
நினைப்புகளையும் நினைக்க வைக்கமுடியம்.

புன்னகை

சோகமாய் இருக்கும்போது கூட சிறிது கொண்டே இரு உன் சிரிப்புக்காகவே உன்னை ஒருவர் நேசிக்கக் கூடும் .

பிரிவு

வெயில் காலத்திலும்
மழை வந்தது
உன் பிரிவால்
என் கண்களில் . . .

காதல் வலி

கண்ணீர் விட மறுக்கிறேன்
கண்களில் இருக்கும் நீ
கண்ணீராய் கரைந்து விட கூடாது என்பதற்காக

நீ காட்டிக் கொடுக்கும் வரை

ஒழிந்து திரியும் காதலை தேடித்தான் திரிந்தேன்

யார் யாரோ முகத்தில்_ அது உன் இதயத்தில்

மறைந்திருந்ததை நீ காட்டிக் கொடுக்கும் வரை

உனக்கே உரியவள் நான்.

என்னைக் கைதியாய்ச் சிறைப்பிடிக்க யார் யாரோ
முயற்சித்தார்கள் இறுதியில் நீதான் சிறைப்பிடித்தாய்
கைதியாயல்ல உன் காதலியாய் உன் மனைவியாய்
ஆதலால் உனக்கே உரியவள் நான்.

காதல் உணர்வு

எனக்கு சொந்தம் ஆக வேண்டிய நீ
இன்னொருவனுக்கு சொந்தம் அனால்
நான் இந்த மண்ணுக்கு
சொந்தம் ஆவேன்

கண்ணீர் சிந்தினேன்

என்னை நீ
வாசிக்காமல் போனதில்
கவலைப்பட்டதில்லை நான்

உனக்காகவே
என்னை மொழியாக்கி
எழுதிய கவிதையை நீ
கிழித்தெறிந்ததில்தான்

கண்ணீர் சிந்தினேன்
உன்னால் முதல்தரம்

என் கவிதைகள்

என் கவிதைகள்
அப்படி என்னதான்
பாவம் செய்தது

உன்னால்
பாவமாக்கப்பட்ட
எனக்கு
பிறந்ததை தவிர

என் இதயம் சுமைதாங்கி

உன்னைச் சுமந்தே
சுமைதாங்கியான
என் இதயம்

ஏன்
நீ இறங்கியதும்
இப்படி ஒற்றைக்
காலில் நிற்கிறது

வாழ்க்கை

ஒரு உயிர் துடிக்கும் பொழுது,
யாரும் கவனிக்காமல் இருப்பார்கள்,
ஆனால் நின்ற பின் எல்லோரும் துடிப்பார்கள்.

அதான் வாழ்க்கை..

எப்படி முடிந்தது??

யார் யாரோ என்னை
பறித்த போதெல்லாம்
உன்னோடுதானே
இருந்தேன்

எப்படி முடிந்தது
என்னை வேரோடு
பிடுங்கி
எறிந்துவிட்டு போக

யாருமில்லை என்றாய்!

என்னைப்போல்
உனக்காக
யாருமில்லை என்றாய்

உண்மைதான்
உன்னைப்போல் யாரும்
என்னை பொய்சொல்லி
ஏமாற்றியதில்லை

Post a Comment (0)
Previous Post Next Post