சொந்தம் - காதல் கவிதை - பயப்படாதே

சொந்தம்

வாழ நினைக்கும் பெண்ணுக்கு ,
வசந்தம் மட்டும் சொந்தம் .
தாகம் கொண்ட பெண்ணுக்கு
தண்ணீர் மட்டும் சொந்தம் .
மோகம் கொண்ட பெண்ணுக்கு ,
காமம் மட்டும் சொந்தம் .
காதல் கொண்ட பெண்ணுக்கு ,
நான் மட்டுமே சொந்தம் .

காதல் கவிதை

அன்று அவள் கைபிடிக்க என்னை விட்டாயே,
இன்று அவள் கைவிட்ட பிறகு-உன்,
கையை தாங்கி பிடித்தது நானேதான்.

இப்படிக்கு,
சிகரெட்

பயப்படாதே

உன் சுவடுகள்
சிறை பிடிக்கப்படலாம்
உன் பாதைகள்
திருடப்படலாம்
பயப்படாதே
பாதங்களைப் பாதுகாத்துக் கொள்.

வெற்றி தோல்வி

வெற்றிகள் உனக்கு
சிற்பங்கள் பரிசளிக்கலாம்
ஆனால்
தோல்விகள் மட்டுமே உனக்கு
உளிகள் வழங்கும்
என்பதை உணர்ந்து கொள்.

காதல்

உயிரை விட சொன்னால்
விட்டு விடுவேன்
நீ காதலை அல்லவே
விட சொல்கிறாய்
ஆதரிக்கு பதிலாக
உயிரை விட்டு
விடுகிறேன் இப்பொழுதே
உன் நினைவுடன் உன் முன்னால்

நான் பொய்

நீ கவிதை என்றால்
நான் அதில் பொய்
நீ அழகாக தெரிவதற்காய்
உண்மைகளை சாகடிப்பேன்

தர்க்கம் செய்யாதே

உன் வழிகளெங்கும்
தூண்டில்கள் விழித்திருக்கலாம்
நீந்த முடியாதபடி
வலைகள் விரித்திருக்கலாம்
தண்ணீராய் மாறி தப்பித்துக் கொள்
தங்கமீனாய்
தான் இருப்பேனென
தர்க்கம் செய்யாதே!

என் கண்கள்

என் கண்களே
எனக்குப் பிடித்த
ஒளிப்பதிவுக் கருவி

காரணம்
அதற்கு உன்னை
மட்டுமே
பிடிக்கத் தெரியும்

மனித நேயம்

காட்டாறு கரை புரண்டு வருகிறதா
நாணலாய் மாறு
புயல்க்காற்று புறப்படுகிறதா
புல்லாய் மாறு
தொட்டாச் சிணுங்கியாய் இருப்பதும்
பச்சோந்தியாய் மாறுவதும்
தப்பில்லை
மனித நேயத்தை
நீ
மறுதலிக்காத வரை!

காதல் நினைவு

நெஞ்சில் சோகங்கள் இருந்தாலும்
கண்ணில் கனவுகள் இருந்தாலும்
வாழ்வில் வருத்தங்கள் இருந்தாலும்
என்றும் என் நினைவில் நீ

கண்ணீரில்!!!

நான் தண்ணீரில் நடக்கும்
போது
உடன் இருந்தவள் ...

இன்று

கண்ணீரில் நடக்கும்
போது
உடன் இல்லை ...!

உன் பார்வை

உன் பார்வை அம்புகள்
பாய்ந்தது ...


குத்தி , குத்தி
சல்லடை ஆனது

என் இதயம்

கூடா நட்பு

உன்
ஊசிக்குத்தல்கள்
இணைக்க
என்றே நினைத்திருந்தேன்
நீ
நூல் கோர்க்காமல்
குத்திக் கொண்டிருந்த
சேதி தெரியாமல்.

நீயோ
இன்னும்
குத்திய இடத்திலேயே
குத்திக் கொண்டிருக்கிறாய்
என் கிழிசல்
ஒட்டுப் போடப்படவில்லை.

காயங்களின்
காலங்கள் நீண்டபோது
என்
உறக்கம் கலைத்து
எட்டிப் பார்த்தேன்,
நூல் இல்லா
நிலையும் அறிந்தேன்.

காரணமற்ற காரணங்களுக்காய்
என்
முதுகைக் காட்டிக் கொண்டிருந்த
அறியாமையால்
இன்னும் கொஞ்சம்
கூடிப் போனது
வலி.

நூல் கோர்த்துக் கொள்
இல்லையேல்
கிழிசலோடு எனை
வாழவிடு என்று
அப்போது தான்
முதன் முதலாய் சொன்னேன்.

ஊசிக்குக் காதில்லை
என்கிறாய்
சிரித்துக் கொண்டே.

அப்போதே
என்னை
ஆடை மாற்றவேனும்
அனுமதித்திருக்கலாம்
நீ

பாவி மனசு

உள்ளது எல்லாம் தொலைத்தாலும்,
திரும்ப அடைந்து விடலாம் என்றிருந்தேன்,
இப்போது
உள்ளத்தை அல்லவா தொலைத்து விட்டேன்?
அவனுள் கலந்து,
என் எண்ணங்கள் எல்லாம்
அவனாய் நிரப்பிவிட்டு,
திரும்ப வரமாட்டேன் என்று
அழிச்சாட்டியம் பண்ணுகிறது
பாவி மனசு!

மௌனம் - நேசிபவர்களுக்கு மட்டும்

பேசும் வார்த்தை விட பேசாத மௌனத்திற்கு அதிகம் அர்த்தம் உண்டு!
பேசும் வார்த்தை எல்லோருக்கும் புரியும்
அனால்,
மௌனம் உன்னை நேசிபவர்களுக்கு மட்டும் தான் புரியும் .!

கண்ணீர் துளிகள்

உண்மையான அன்புக்கு மட்டுமே
உன் கண்ணீர் துள்ளிகள் தெரியும்....

நீ மழையில் நனைந்து கொண்டே அழுதாலும் கூட.....

நீ என் இதயம் இல்லை

உன்னை நான் இதயம்
என்று சொல்ல மாட்டேன் ..

ஏன் தெரியமா?

உன்னை துடிக்க விட்டு
உயிர் வாழ எனக்கு
விருப்பம் இல்லை...

பறவைகள் எங்கே

பட்டங்கள்., பலூன்கள்
வானில்,
பறவைகளையே காணோம்! பழனி பாரதி

உயிர்

உயிருடன் ஒப்பிட முடியவில்லை உன்னை
ஏன், என்றல்
உயிரும் ஒரு நாள் பிரிந்துவிடும் என்பதால்...!!

வேடிக்கையான கவிதை

உன் பெயரை கேட்ட பிறகுதான் தெரிந்து கொண்டேன்,
உன் பெற்றோர்க்கும் கவிதை எழுத தெரியும் என்று…!

இப்படிக்கு,
மனசாட்சியே இல்லாமல் பொய் சொல்வோர் சங்கம்.

Post a Comment (0)
Previous Post Next Post