சோற்றுக்காய் - காதல் தோல்வி - என் கண்கள்

சோற்றுக்காய்

புத்தகம் படித்து,
புதுக்கவிதை எழுதி,
இலக்கியம் பேசி,
சோற்றை மறந்தது ஒரு காலம்.
இன்று,
புத்தகமும், புதுக்கவிதையும்,
இலக்கியமும், மறந்து
அலுவலகப்புழுதில்
அமிழ்ந்து கிடக்கிறேன்
எல்லாம் சோற்றுக்காய்..

காதல் தோல்வி

உன்னை நான் என் கண்களில் வைக்கவில்லை,
என் இதயத்தில் வைத்து இருக்கிறேன்...
ஆனால் நீயோ, இதயத்தில் இருந்துகொண்டு
கண்களில் கண்ணீரை வர வைகிறாய் ..! !

என் கண்கள்

என் கண்களே
எனக்குப் பிடித்த
ஒளிப்பதிவுக் கருவி

காரணம்
அதற்கு உன்னை
மட்டுமே
பிடிக்கத் தெரியும்

எழுதுவதையே மறந்துவிட்டேன்

உன்னைப் பற்றி
எழுத
நினைத்தபோதெல்லாம்

எழுதிக்
கொண்டேயிருந்தேன்

உன்னை விட
எழுத நினைத்தேன்

எழுதுவதையே
மறந்துவிட்டேன்

உன் மனம்!

என்னைக் கல்லில்
கட்டி கடலில் யார்
போட்டாலும் கல்லே
எனைக் காப்பாற்றும்

உன் மனக்கல்லை
காதலித்தவனென்ற
உண்மை சொன்னால்

உன் வரவின்றி!

உன்னைக் காண
காத்திருந்து

என்
கைக் கடிகாரத்தை
பார்த்து களைத்துப் போய்

தினமும்
திரும்பிச் செல்கிறேன்
உன் வரவின்றி…

சமாதான ஒப்பந்தம்

நமக்குள் போர் நிறுத்த ஒப்பந்தம்
வேண்டாம் நமக்குள் சமாதான ஒப்பந்தம்
செய்து கொள்வோம் அப்படியென்றாலாவது
சமாதான மீறல் புரிகிறாயா என்று பாப்பம்

நினைப்பாயோ என்னை

கோவம் வரும் போது உன்னை
நினைக்க சொன்னாய் வராத போதும்
உன்னை நினைத்தேன் இப்ப என்னை
நினைப்பாயோ

என் கடிதம்..!

கவிதை எழுத நேரம் ஒதுக்கினேன்
உனக்கு கடிதம் எழுதும் நேரம்
என்பதை மறந்து

தயவு செய்து நான் மறந்ததுக்காக
என் கடிதத்தை மேலோட்டமாக
படித்துவிடாதே எனெனில் உன்னைச்
சேரும் இந்த கடிதம் என் பல கடிதங்களை
தோற்கடித்த பெருமைக்குரியது.

என் கனவே நீதான்..!

கனவு காண யாரும்
உறங்கப் போவதில்லை

நான் மட்டும்தான்
பகல் கனவு கண்டு
கொண்டு இருக்கிறேன்
நான் தூங்குவதாக

நீ
என்னை மட்டுமல்ல
என் உறக்கத்தையும்
சேர்த்துத்தான்
கலைத்துவிட்டாய்

மறுபடி நான்
உன்னை சந்திக்க
நேர்ந்தால்

என் உறக்கத்தையாவது
கெஞ்சிக் கேப்பேன்

மறுபடி நான்
தூங்கிப்போனால்

என் கனவில் உன்னையே
கெஞ்சி கேப்பேன்

கோவத்தில்...

கோவத்தில் நீ
என்னைக் கண்டும்
காணமல் போவாய்

கோவத்தில் கவிதையோ
என்னைக் காணமல்
கண்டு போகும்

என்னை நான் மறக்க

என்னை நான் மறக்க

இருவர் போதும்

ஒன்று – நீ

மற்றொன்று – கவிதை

என் கிறுக்கல்கள்

என் கிறுக்கல்கள்

எல்லாம்

கவிதையானது

உனக்கு பொய்கள்

பிடித்தபோது

உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டுமா?

உண்மையைத் தெரிந்து
கொள்ள வேண்டுமா?

என்னை வாசித்து விடு
உன்னைத் தெரிந்து கொள்வாய்

என்னவனே.. வருவாயா?

என்னவனே..

காலை மாலையாவதும்

மாலை காலையாவதும்

உந்தன் ஆசைக்குள் மறைய

வேண்டும் வருவாயா?

காதலா வருவாயா?

கோடை மழையாய்

நீ வந்தாலும் காதலா

அடை மழையாய் வரவேற்பேன்

அதற்காகவேனும் வருவாயா?

காதலா காத்து கிடக்கிறேன் வருவாயா

வருவாயா காதலா வருவாயா

உன் வரவுக்காய் நான் வழியாகிறேன்

என் வாசல் எங்கும் விழியோடு

காத்து கிடக்கிறேன் வருவாயா

காதலா வருவாயா?

என் கற்பனைகள்

என் கற்பனைகள்தான்

அதிகமாய் வாசகர்களுக்கு

காட்டிக் கொடுக்கிறது

உன்னை நான் கவிதையாய்

காதலிப்பதை

காத்திருக்கிறேன்!!!!

நீ எனை காதலிக்கிறாய்
என்பதை கேக்க
காத்திருக்கவில்லை

நீ என்னை காதலிக்கவில்லை
என்பதையாவது கேக்கத்தான்
காத்திருக்கிறேன்

கடைசி SMS!

உன் ஒவ்வொரு SMS சும்
தான் கடைசி SMS சாய்
இருந்துவிடக்கூடதென்று
வருத்தப்படுகிறது உன்
அடுத்த SMS சை எதிர்பார்த்தபடி.

Post a Comment (0)
Previous Post Next Post