எப்படி பிரிந்தாய்? - எப்படி வாழ்வேன்?? - அழகு

எப்படி பிரிந்தாய்?

பிரிந்தாய்?

நம் பிரிவை உயிர்
மட்டும்தான் பிரிக்கும்
என்றுதானே நானிருந்தேன்.

எப்படி பிரிந்தாய்?

எப்படி வாழ்வேன்??

நீ
இல்லாமல்
வாழத்தெரியாத நான்

நீ
இருந்தும் இல்லாமல்
எப்படி வாழ்வேன்.

அழகு

உன்னுடைய
உதடுகள்
உச்சரிக்கும் வரை
நான்
உணர்ந்ததில்லை ......!!


என்னுடைய பெயர்
இதனை அழகாய்
இருக்கிறதென்று ....!!

எங்கே நீ சொல்??

நீ
இல்லாத உலகத்தில்
நான் பிணமாய் வாழ்வதைவிட

நீ
இருக்கும் உலகில்
நான் கல்லறையாய்
வாழலாம்.

எங்கே நீ சொல்

வாசல்

வீணாக ஏன்
திறந்து வைக்கிறாய் ..??
உன்
விழி வாசலை ...!!

இதய வாசலை
பூட்டு
சாவியை இடுப்பில்
முடிந்து கொண்ட பிறகு ...!!!

அன்பே வா…

உனக்கான என் காதல்
மரத்தில் இருந்து
தினமொரு கவியிலையாய்
விழுந்து கொண்டிருக்கிறது

என் கண்ணீர் எனும்
மழையாலும்

உன் நினைவெனும்
புயலாலும்.

வா அன்பே வா…

காதல்

காதல் கண்களை
மூடுகிறது .......

இதயத்தை
திறக்கிறது ......

போதும்

நீ
என்னை வாழ
வைக்க வேண்டாம்

வாழ விடாமல்
வைத்துவிடு

அது போதும்

உனக்காய் வாழ்ந்து

உனக்காய் வாழ்ந்து
உன்னால் இறந்தேன்

என்பதே என்
வாக்குமுலமாய்
இருகட்டும்.

பார்க்கிறாய் ….!

உன்னை அழகானவள்
என்று
கூறியதற்காக ,
என்னை அழவைத்து
பார்க்கிறாய் ….!

உன் பெயர்

காகிதத்தில்
அழகாய்
ஒரு கவிதை ….!
” உன் பெயர் ”

தோழமைக்கு வலிமையெது?

பாசத்தை முழுவதுமாய் தருவதாகக் கூறி
பாசனத்தை என்னுடலில் ஏற்றியவென் தோழா- விசு
வாசமென்றால் என்னவென்று அறியா நீ, மூடா - என்
வசனத்தால் உன்விழிகள் இரவிலினும் மூடா

ஊனன் கண்ட கனவு மெய்க்க
உடலை வருத்தி உழைத்தோம்
உவகையோடு ஏற்றுக் கொண்டு -எமை
உதறுகையில் திகைத்தோம்

பகைத்துக் கொண்டு வாழ்வதற்கா
வாழ்க்கையென்று நினைத்தோம்
பாசத்தோடு அரவணைத்து - உன்
வேசங்களை மறைத்தோம்

கருத் துரைக்க அழைத்திடுவாய்
மறுத் துரைத்த தில்லை
மறந்து போன நாட்களுண்டு; மனம்
மரத்துப் போன தில்லை

ஆசுகவி உரைத் வர்கள்
கொண்ட தில்லை பட்டம்
ஆறுகவி புனையு முன்னே
உரைக்கிறாய் நீ சட்டம்

தோழமைக்கு நல்ல சான்று
கொடுப்ப தில்லை உயிரை
தோழனுக்கு தோழனாக
வாழ்வதே எம் வலிமை

எப்படி !

உன்
பெற்றோரை பார்க்கின்றேன்
அவர்கள் மனிதர்கள் தானே ….,
நீ மட்டும் எப்படி
தேவதை ஆணை …!!!

மழை

பிரியமில்லா தம்பதியரையும்
குடைக்குள்
பிணைய வைக்கிறது
பிரியமான மழை.

உன்னை தவிர ……

நான்
உன்னிடம் கொண்ட காதல்
உன்னை சுற்றி உள்ளவர்க்கெல்லாம்
தெரிந்து விட்டது
உன்னை தவிர ……

என் கண்களில்

என் கண்களில்
அருவி பாய்ந்தது
நீ உன் காதலை
அவளிடம் தெளித்த போது.

இரவு
பகலை விழுங்கியது
காதலை நிராகரித்த
உன் கடிதம்
என் சந்தோசத்தை
விழுங்கியது போல்.

நெஞ்சில்
சுரீரென்று வலித்தது
உன் காதல் அம்பு
என் நண்பியைத்
துளைத்த போது.

விட்டில் பூச்சிகள்

விடிவதற்குள்

வீழ்ந்து விடுவோம்

என தெரியாமல்...

எரியும் விளக்கோடு

விளையாடும்

ஏகாந்த பிறவிகள் !!

அழுகை

என் உயிர் போனால்

உனக்கு அழுகை வருமோ வராதோ எனக்கு தெரியாது..?

ஆனால் உனக்கு அழுகை வந்தாலே என் உயிர் போய்விடும்!!

அதிசயம் !

இந்த கால அதிசயம் !

இதயங்களை

புதைத்து விட்டு

உயிர் வாழும் மனிதர்கள் !!

ஊஞ்சல்

என் இதயத்தில்
ஊஞ்சல் கட்டி
நிதமும் ஊஞ்சலாடுபவளே…
நிறுத்தி விடாதே
உன் ஆட்டத்தை…
நின்று விடும்
என் ஓட்டம்…!!

Post a Comment (0)
Previous Post Next Post