ஆடு - காக்கை - கண்ணாடி

ஆடு

ஆடுக்கு இறைஇட்டான்
பாசத்தால் அல்ல கறிக்காக

காக்கை

மயானக் கூரையின் மீது காக்கையின் சத்தம் யார் வரப் போகிறார்கள்

கண்ணாடி

மனதையும் காட்டுமெனில் யாரும் பார்க்கமாட்டார்கள் கண்ணாடியை..!

இயற்கை

காலை வேலைக்கு போகவேண்டும்
என்ன செய்ய
மழைக்கால இரவு


மழை ஓய்ந்த நேரம்
மரத்தடியில்
மீண்டும் மழை!


சமாதிக்கு மட்டுமல்ல
மலர்வளையம்
பூக்களுக்கும்.


யாருமற்ற பாலைவனம்
தன்னந்தனியாக
ஒற்றைமரம்!


மிகச்சிறந்த ஓவியத்தை
மிஞ்சிய அழகு
குழந்தையின் கிறுக்கல்.

பெயர்

எத்தனையோ முறை தவற விட்ட புன்னகையை..

இன்று மொத்தமாய் உதிர்க்கிறேன்

அவள் பெயரை காணும் வழியெங்கும்..!!

கண்ணே

கண்ணே போதும் நிறுத்திவிடு
இல்லையேல்
காதலெனும் வெள்ளத்தில் நீச்சல் அடித்துக்கொண்டிருக்கும் நான்
மூழ்கிவிடுவேன்..!!

வானவில்

ஒரு வெள்ளைக்காகிதத்தையும்

அத்தனை அழகாக்கிக்கொண்டிருந்தது அவள் பெயர்..

வானவில்லும் ஒளிந்திருக்குமோ

அவள் பெயரில்..!!

குளிர்

குளிர்........!
அது என்ன செய்து விடப் போகிறது..?
சுடுவதாக ஒரு போதும்
அது பொய் பேசியதில்லையே!
கதகதப்பாய்
தழுவுவதாகச் சொல்லி
யாரையும் ஏமாற்றியதுமில்லையே!

குளிர்......!
அது என்ன செய்து விடப் போகிறது..?

மௌனம்

சில சப்தங்கள்
மௌனம்

ஆம்...
சில சப்தங்கள்
மௌனம் !

கண்களின் மொழி
மௌனம் !

காதல்
மௌனம் !

கனவுகள்
மௌனம்

உறவுகள்
மௌனம்

உயிர் மௌனம் !

நெஞ்சிற்குள்
அலை மோதும்
நினைவுகள்
மௌனம் !

உணர்வுகளில் கேட்கும்
சப்தம்
ஒரு
மெனப் பரிமாற்றம்

மௌனம்
செய்யும்
சப்தம்

மனித நடையை
வாழக்கை விடையை
எப்போதும்

நாம் செய்யும்
ஒரு
பயணத்தின் முகவரிகளே
நம்மை அழைத்து
செல்லும்

கேட்கும் செவிகளுக்கு
மௌனம் பேசும்
மொழியின் சப்தம்
எப்போதும் இனிக்கும்

ஆம்
மௌனம் ஆச்சரியம்
தரும் ஒரு
விந்தை மொழி...

நீ காதுகளை
தீட்டு..

மௌனத்தை கேள்...

ஆம்
சில சப்தங்கள்
மௌனம்...

காதலும் கடவுளும்

அர்த்தம் இல்லாமலே அத்தனை மனங்களையும்
அலைமோதவைப்பது காதல்..

ஆதாரம் இல்லாமலே அத்தனை மனங்களையும்
ஆட்சி செய்வது கடவுள்..

இரண்டுமே அர்த்தமில்லாதது..!!

கடல்

மீனவர்களின்
அட்சயப்பாத்திரம்
கடல்

என் இதய சுவர்கள்

என் இதய சுவர்களில்

இன்றும் முட்டி மோதிக்கொண்டிருக்கிறது

பிரியும் முன் நீ பேசிச் சென்ற வார்த்தைகள்..!!

முன்பெல்லாம் கொஞ்சலும் கெஞ்சலும்

முன்பெல்லாம் கொஞ்சலும் கெஞ்சலும்
எனக்குப் பிடித்ததில்லை
வெட்டொன்று துண்டிரண்டு
பேச்சிலும் செயலிலும் இருந்தது
இன்று கெஞ்சலும் அவ்வப்போது கொஞ்சலும்
என் வாழ்க்கை ஆகிவிட்டது
அவளின் வருகைக்காக ஏங்கும் கணங்கள் எத்தனை?
குரலுக்காக ஏங்கி ஓடும் தொலைபேசி
அழைப்புக்கள் எத்தனை?
காதலின் பிரசவத்தில் விஷமும் அமிர்தம்
அவளின் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு
வார்த்தையும் என் நினைவுகளோடு சங்கமம்
சின்னச்சின்ன சண்டைகள்
துளித்துளியாய் கண்ணீர்
மனம் இழகி
கட்டியணைத்து நெற்றியில் முத்தம் பதித்து
காதல் மந்திரம் சொல்வேன்
எல்லாம் மறந்து எங்களையும் மறந்து
புதிய காதலர்களாய்
புதிய பயணத்தில் நானும் என் உயிரும்.

தேனீ

உனக்காகவே பிறந்தேன்..

உனக்காகவே வளர்ந்தேன்..

உனக்காகவே சாகிறேன்..

- தேனிடம் வண்டு

கண்ணதாசன்

உனக்கு வாழ்வதற்கு தைரியம் இல்லையா..
தற்கொலை செய்துகொள்..
தற்கொலை செய்து கொள்ளுமளவிற்கு தைரியம் வந்துவிட்டதா
வாழ்க்கையை வாழ்ந்து பார்

கோடையும் நானும்

கொன்கிறீட் புதை குழியும் நானுமாய்
எட்டியுதைத்தேன் அதன் அடைப்புக்களை
வெளித் தெரிந்தது வானம்
என் சுமை தூக்கியாய் மேலே
நேரே இன்னும் நிரைகளாய் புதைகுழிகள்
உயிர் உள்ளவற்றுக்காய்
கீழே நெடுஞ்சாலை ரயர்களை சபித்த
வண்ணம் நீள் கொள்ளும்
என்னைப்போல் மரங்களும்
நீண்ட இறப்பின் பின் சிறிது உயிர்ப்புற
துளிர்கொள்ளும் நம்பிக்கைள்
கோடைத் துலம்பலில்

இதய கடிகாரம்

நீயென்ன
என் இதய கடிகாரத்தின் முட்களா
நீ இன்றி இயங்க மறுக்கிறது என் இதயம்..!!

காதலே !

காதலே !
என்றும் உனை நான் மறவேன்
முதல் நாளில் நீ சிந்திய புன்னகை
இரண்டாம் நாளில் நீ பேசிய
முதல் வார்த்தை
மூன்றாம் நாளில் .....
எதையும் மறவேன் அன்பே
மறக்கவும் முடியாது
இன்னொரு காதலி கிடைக்கும்வரை

நிலா

அன்று அமாவாசை

இருந்தும் நிலவைப் பார்த்தேன்

என் பேருந்தின் ஜன்னலோரமாய்..!

தாடி

சோகத்தின்
முன்னுரை
தாடி

Post a Comment (0)
Previous Post Next Post