இதயம் - கண்மணியே - இனியேனும்

இதயம்

அவளை மட்டுமே நினைத்து துடித்துக்கொண்டிருக்கும்

என் இதயத்திற்கு புரியவில்லை

அவளுக்கு இதயமே இல்லை என்று

கண்மணியே

கண்மணியே !
ஒவ்வொரு இரவும் உன் நினைவுகளோடு
உறங்கி
இனிய கனவுகளோடு விழிக்கிறேன்
அல்லும் பகலும் ஏன் என் இதயத்தில் நீ
காதல் ??
எல்லோரும் அப்படித்தான் சொல்கிறார்கள்
ஏன் நீ மட்டும் புரியாமல்
என் இதயத்தைக் கிழிக்கிறாய்
ஓ ! என் இதயத்துள் உன்னைத் தேடுகிறாயா?
சரியென்று புன்னகையோடு தலையசைத்துவிடு
சிரித்துக்கொண்டே செத்துப்போய்விடுகிறேன்
ஏனெனில் காதல் என்றோ ஒரு நாள்
என்னையும் கொல்லுமென்று காதல்
வரலாறு சொல்லித்தந்ததால்

இனியேனும்

இலை உதிர்ந்து சருகாக
இளவேனில் போய் பனி வந்தது
இருள் அகன்று ஒளி வர
இளஞ் சூரியன் எழுந்துவந்தான்
இரை தேடும் பசிப்புலியும்
இச்சை உடன் காத்திருந்தது
இதயமில்லா கயவர் ஒழிக்கப்பல
இரக்கமுள்ள பெண்டிரும் எழுந்தனர்
இனவெறி கொண்ட கொடியவர் ஒழிக
இன்னும் எத்தனை உயிர்களோ!
இலுப்பம்பூச் சக்கரையாப் பல
இள உடல்கள் சிதைந்து போயின
இசை பாடும் மூங்கிலும்
இப்போராட்டத்தில் உதவியது ஆனால்
இக்கரையில் உள்ள பலர்
இனயேனும் சிந்திப்பாரா!

மின்னல்

உன்
பார்வையை
மின்னல் என்றேனே
ஒப்புகொண்டாயா
இப்போது பார்
வெட்டி விட்டது
என்
இதயத்தை ……!

வாழ்க்கை தத்துவம்

விடியும் வரை தெரிவதில்லை கண்டது கனவு என்று....
வாழ்க்கையும் அப்படி தான்....
முடியும் வரை தெரிவதில்லை....
வாழ்வது எப்படி என்று....

காலம்

இன்று வந்தது
நாளையும் வரும்

ஆனால் நேற்று வராது
மூடிக்கொண்ட கதவு அது

திறந்து பார்க்க சாவியும்
இல்லை

சேர்த்து வைக்க வழியும்
இல்லை

துரத்திப் பிடிக்க ஒடுவோம்
எங்கே தான் போய் விடும்

நாம் இவ்வுலகை விட்டுப் போகும் முன்னர்
இந்த நேரத்தைத் துரத்திப் பிடிக்கலாம்

நேரத்தின் பின்னால்
ஓடிப்போவோம் வாருங்கள்

வேகமாய் ஓடுவோம், விரைவாய் ஓடுவோம்
நேரம் போகிறது, ஓடுவோம் வாருங்கள்

பனித்துளி

உன்
பாதம் படுவதற்காகவே
படிந்திருக்கிறது
உன்
வீட்டு படியில் பனித்துளி ……,
கொஞ்சம் பார்த்துசெல்
பாத சூட்டில் கரைந்து விட போகிறது
உனக்காக காத்திருக்கும் ஒன்றை
சிதைத்து விடாதே …..!!
என்னை சிதைத்து போல் ….!!!

என் மனம் படாது பாடு படப்போகிறது

உன் மனதில் பட்டதை
சொல்லிவிட்டாய்
இது தெரிந்தால்

என்
மனம்தான் படாது பாடு
படப்போகிறது

அதற்கு
உன்னை காதலிக்க
மட்டும்தானே
தெரியும்

நீ கைவிட்டது
தெரியாதுதானே…

மின்னலாய் ஒரு

அவள் விழிகளோடு என் விழிகள் கலந்து
வார்த்தைகளோடு வார்த்தைகள் கலந்து
இன்னும் இன்னும் நெருங்கி
எனக்குள் அவளையும்
அவளுக்குள் என்னையும்
தேட முற்பட்டு
இருவருமே தோல்வியைத் தழுவி
விவாகரத்துக்காய் காத்திருக்கிறோம்
இடையில்
ஏதோ மின்னலாய் ஒரு வாழ்க்கை
ஊரறிய மேள தாளம்
வீடு வீடாய் போசனம்
புதுத்தம்பதியை அயல் பார்த்து
மெலிதான புன்னகை சிந்தி
சுமைகளே இல்லாமல் வாழ்க்கையை
வாழ்ந்து பார்த்தோம்
எல்லாம் மறந்து போகட்டும்
மீண்டும் அவளைக் காதலிக்கவேண்டும்
“கல்யாணம்“ என்ற வார்த்தையையும்
சடங்கையும் மறந்துகொண்டு

உறவு ஒன்று புதிதாய் உருவாகும்

உறவு ஒன்று புதிதாய் உருவாகும்
உருவங்கள் உணராமலும் கருத்தா¤க்கும்
வேறெவரும் உ£¤மைபெற உள்ளம் மறுக்கும்
எமக்கு மட்டும் சொந்தமானது
என்றெண்ணி மனம் பெருமிதம் கொள்ளும்
எமைவிட்டு பிரிந்து செல்லும் நிலைவா¤ன்
ஏன் ? என்று பலவகை வினாக்கள் எழும்
விடைகளை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கும்
விதி என்று வெளி வார்தை பேசும்
கோபம் வராமல் பொய்யாய்
கோப வார்த்தை பரிமாறும்
உள்ளம் அழும்
மீண்டும் விதி என்று வெளிவார்த்தை பேசி
தனக்குத்தானே மனம் ஆறுதல் சொல்லும்
முதற் காதலின் வெறுமை இதயத்தின்
ஓரத்தில் தேங்கிக்கிடக்க உலக
மேடையில் வாழ்க்கைத் தொடா¤ன்
அடுத்த காட்சி அரங்கேறும்

கனவா கண்ணீரா

அவள் என் கண்களுக்குள் வந்து கொண்டுதான் இருக்கிறாள்…
கனவுகளாக அல்ல.! கண்ணீராக..!

ஏமாற்றியவரே ஏமந்து போவது

என்
மனசாவது நீ
காதலிப்பதாய்
நினைக்கட்டுமே

அதாவது
அழாமல் வாழட்டும்…

இந்தக்
காதலில் மட்டும்தான்

ஏமாற்றியவரே
ஏமந்து போவது

காதல் பூ கவிதை

காகிதமும் பூக்களாகும்
நீ கைஎழுதிட்டல்
காகித பூக்களும்
வாசம் தரும்
நீ சூடிகொண்டால்

காதலே உன்னை என்ன செய்ய

பகலா இரவா புரியாத காலநிலை
எப்போதுமின்றி
என்வீட்டு மரங்கள் வெறுப்பை தருகிறது
இதயம் விட்டு விட்டு அடிக்கிறது
என்னை அந்தரத்தில்
தவிக்க வைத்து தாலாட்டு கேட்கிறது

சில மணித்தியால சலனங்கள்
தொ¤ந்தும் ஏன் இப்படி தவிக்கிறது மனம்

ஆசையாய் உன்னை முத்தமிட முடியாது
அன்பாய் உன்னை வருட முடியாது
காதலாய் உன்னை அணைக்கவும் முடியாது
ஆயிரம் தடைகள் சம்பிரதாயங்கள்

அவனுக்கும் இப்படித்தான் இருக்குமா
இருக்க வேண்டுமென்கிறது மனம் ஆசையாக

என் உணர்வுகளே உங்களுக்கு !
மதிக்கத்தான் நினைக்கிறேன் முடிவதில்லை
எப்போதும்
அறிவாக நினைத்தால் சி£¤ப்புத்தான் வருகிறது
அறிவாக நினைக்க மனம் அனுமதிக்கப்
போவதுமில்லை இப்போ.
காதலே ! திரும்பத்திரும்ப உனது அடிமையாக
இன்னும் எத்தனை காலம்தான் நான்..

வயது வரம்புகள்
எப்போ எங்கு யாருடன் என்றெல்லாம்
பார்க்காது
வினோதமான உறவுகளை எப்போதும்
விதைத்த படி நீ.
உதறிவிட்டு போனாலும் தொடர்கிறாய்
என்னுடனே
கொன்றுவிட்டு வாழவும் முடிவதில்லை என்னால்

என்ன செய்ய காதலே உன்னை என்ன செய்ய.

தத்துவம்

உன்னை சிரிக்க வைக்கும் இதயத்தை நம்பாதே
உன்னை சிந்திக்க வைக்கும் இதயத்தை நம்பு
உனது வாழ்கை என்றும் ஒளிமயமாய் இருக்கும்...!

நட்பு

உன் நட்பெனும்
சிறையில்ல கூண்டில்
சிறகில்லா பறவை நான் !..
விடுதலையாக விருப்பம் இல்லை ,
இந்த உலகை விட
உன் நட்பு பெரியதானதால்

வண்ணங்களில் இல்லை வாழ்க்கை

சிவப்பு மனிதனுக்கும் நிழல் கருப்புதான்,
கருப்பு மனிதனுக்கு ரத்தம் சிவப்புதான்,
வண்ணங்களில் இல்லை வாழ்க்கை,
மனித எண்ணங்களில் உள்ளது வாழ்க்கை.

அந்த வாழ்க்கை

முளை கட்டிய விதை மண்ணில் விழுந்து
மஞ்சள் முளையாகி, மண்ணை நிறைத்து
பச்சை நிறமெடுத்து பச்சை ஆடை கட்டிட
நிலமகளும், நலமுடனே நிறம் காட்டிட
துள்ளித் திரிந்த அந்த நாட்கள்...

வாயக்கால் தண்ணீரில் காகிதப் படகு விட்டு
காலாலே தண்ணீர் அடித்து விளையாடி,
மாமரத்து அணில் போட்ட, மாங்காய் கடித்து
மாலை வெய்யில் மஞ்சள் நிறம் ரசித்து,
நாளை விடியலுக்கு காத்திருந்த அந்த நாட்கள்...

குளத்து நீரில் ஓடி ஆடி விளையாடிக் குளித்து,
களத்து மேட்டில் ஆட்டம் போட்டு,
நினைத்ததைச் செய்து, நிம்மதி கண்ட
அந்த நாட்கள் என்று வருமோ ?

வண்ணக் கனவுகளில் எண்ணம் மறந்து,
சின்னக் குழந்தைகளாய் ஆடிக் கழித்த
அந்த வாழ்க்கை இனி வருமா?

என் எதிரி

என் எதிரியல்லக் காதல் அனாலும்

சுட்டுக் கொண்டேன் அதன் எதிரியால்

சாகக்கூடாது என்பதால்

மரபுகளை முறித்து

எனக்குத் தெரியும் நீ யாரென்று
ஏனெனில் நீயும் நானும் ஒன்று

உன்னுடைய ஒவ்வொரு அசைவையும்
என்னால் வரையறுக்கமுடியும்
ஏனெனில் உனக்குள் நான்

நீ ஜாதி வெறிபிடித்த அப்பனின் குழந்தை
நான் ஜாதியால் ஒதுக்கப்பட்ட மனிதம்

நீ துள்ளி விளையாடிய சிங்கக்குட்டி
நான் கட்டி வைக்கப்பட்ட கன்றுக்குட்டி
ஆனாலும்

இங்கே நெருப்புக்கும் பஞ்சுக்கும் காதல்
எலிக்கும் பூனைக்கும் உறவு
மரபுகளையும் முறித்துக்கொண்டு...

Post a Comment (0)
Previous Post Next Post