தேர்தல் - உன் நினைவு - மௌன விரதம்

தேர்தல்

விரலில் கருமை
வாழ்வில் வறுமை
தேர்தல் மை

உன் நினைவு

யாரவது எனக்கு எழுந்து நின்று

இடம் தர மாட்டார்களா என

உதைக்கிறது உன் நினைவு

மௌன விரதம்

பெண்ணே நீ மௌன விரதம் இருந்தால், முதலில்
உன் கண்களை மூடிக்கொள்.
உன் உதடுகளை விட,
உன் கண்கள் தான் அதிகம் பேசுகின்றன...!!

எதிர்பார்க்கிறோம்?

நாமே நாம் எதிர்பார்ப்பது போல் வாழாத போது, மற்றவரிடம் எந்த "உரிமையில்" எதிர்பார்க்கிறோம்?..

காதல் அலை

உன் நேசம் எனும்
ஆழ் கடலிளுருந்து
ஒதுக்கப்பட்ட அலை நான் !..
கரையிலேயே துடிதிருபதால்தான்
என் காதலுக்கு ஆழமில்லை .

நினைவுகள்

விட்டு விட்டு துடிக்கும் என் இதயத்தில் ,
விடாமல் துடிக்கும் உன் நினைவுகள் .

நான் பயணிக்கும் பாதையெங்கும்

நான் பயணிக்கும் பாதையெங்கும்

என் கவிதைகளை விதைத்துக்கொண்டே

போகிறேன் ஏதெனும் ஒன்றிலாவது

நீ இழப்பாறுவாய் என்ற நம்பிக்கையில்

இது உண்மை

நான் அவர்களோடு இருக்கும்போது
எதை எதையோவெல்லாம்
பேசிச் சிரித்தார்கள்


நான் இல்லாதபோது
எனக்குள் எதையோ தேடுகிறார்கள்


ஈழத்தில் என் குடும்பத்து வாழ்க்கை
எனக்கு முத்திரையிட்ட சாதி உட்பட


இவர்களுக்கு ஏன் இன்னமும்
சாதி அவசியமாகிறது ?


தாயகத்திலிருந்து தொலைந்து போனாலும்
தொப்பிள்க்கொடியோடு வந்த சாதி
அவனவன் இறக்கும்வரை அவசியமாகிறது


என்னையும் அவனையும் ஒரு
ஓட்டத்தில் பிரித்துப்பார்க்கும் சாதி
உடல் எரிக்கப்படுகின்றவரையில்
எரிந்துகொண்டுதானிருக்கும் போல்

நான் எழுதிய கவிதை இல்லை

நான் எழுதிய கவிதை இல்லை

ஆனாலும் சட்டப்படி சொந்தமாக்கிக் கொண்டேன்

உன் பெயரை

காதலில் தோல்வி

வாழ் நாள் முழுவதும் உன்
கையால் சாப்பிட வேண்டும் என்று நினைத்திருந்தேன்,
ஆனால் இன்று வாய்க்கருசி கிடைக்குமோ கிடைக்காதோ
என்று ஏங்கிகொண்டிருகிறேன் ....

மலரே !

மலரே !
செடியாக உன்னை தாங்கி கொண்டிருகிறேன் ! உதிர்ந்துவிடுவாய் என்றுதெரிஞ்சும் கூட !

காதலின் வலி

சொன்னால் புரியாது
அனுபவித்தால்தான் புரியும்
காதலின் வலி

சோகம்

வந்தேன் உன்னை பார்க்க ஆவலுடன்,
கண்டேன் உன்னை இன்னொருவனுடன் ,
வடிந்தது என் கண்களில் இருந்து ,
கண்ணீர் இல்லை, ரத்தம்....!!

என் கைபேசி

இரவிலும் தூங்க விடாததுக்கும்

சேர்த்து பகலிலும் தூங்குகிறது

என் கைபேசி நீ என்னை

தொலைத்ததால்

காதல் வேண்டுதல்

உனக்கு காதலி கிடைக்கவில்லை என்று கவலை படாதே ,
அது உனது வருங்கால மனைவியின் வேண்டுதலாக கூட இருக்கலாம்.

நான் எழுதிய கவிதை இல்லை

நான் எழுதிய கவிதை இல்லை

ஆனாலும் சட்டப்படி சொந்தமாக்கிக் கொண்டேன்

உன் பெயரை

Sorry, Thank you - தேவையில்லை

Sorry என்ற வார்த்தை தேவை இல்லை,
பார்வை ஒன்றே போதுமே.
Thank you என்ற வார்த்தை தேவை இல்லை,
புன்னகை ஒன்றே போதுமே.

என் நெஞ்சோ

என் நெஞ்சோ
தினம் தத்தளிக்கும்
பஞ்சு மெத்தையை
வெறுத்து நான்
படிக்கற்களையே வெறித்து
பார்க்கின்றேன் தூரத்திலாவது
நீ வருகின்றாயா என
அறிய!- ஆனால்
உன் தூது கூட
என்னை நெருங்க
மறுக்கின்றது!

யாரோ வீட்டு
படலையை விரட்டும்
மணிசத்தம் என்
நினைவறையையும் அடிக்கடி
ஞாபகப்படுத்துகிறது
உன் தூது வருமென்று!
விரைந்து நான்
வெளியே வந்தால்
என் நெஞ்சை
மீண்டும் விரக்தியே
தழுவுகின்றது!

வாழ நினைக்கினே
என் அன்பே வாவா!
சாவை வெறுக்கிறேன்
என் அன்பே தாதா
உன் நெஞ்சை!
சம்மதம் தா
அன்பே!
என் சஞ்சலம்
தீர்த்து
சபலங்களையும் சலனங்களையும்
தீர்க்க விரைந்துவ

என் கைபேசி நீ

இரவிலும் தூங்க விடாததுக்கும்

சேர்த்து பகலிலும் தூங்குகிறது

என் கைபேசி நீ என்னை

தொலைத்ததால்

கல்வி

களவு போகமுடியாது
அளித்தாலும் குறையாது
கல்வி

1 Comments

Post a Comment
Previous Post Next Post