எதையோ தேடி எதையோ பெற்று
எதையோ தேடி எதையோ பெற்று
இதைத்தான் தேடினேன் என்று
பொய் சொல்லி
அவர்களின் பொறாமையை
கொஞ்சம் ரசித்து
என் தோல்வியின் சோகத்திலிருந்து
விடுபட முயற்சி செய்வேன்
என்னையும் ஏமாற்றி
அவர்களையும் ஏமாற்றி
வாழும் வாழ்க்கை தேவையா எனக்கு ?
ரகசியமாய் ...
யாருக்கும் தெரியாமல் உன்னை நேசிக்கிறேன் ,
உனக்கே தெரியாமல் ஒரு நாள் என்னை நேசிப்பாய் என்ற நம்பிக்கையில் .
நிலவும் பெண்ணும் !
அம்மாவாசை அன்று வெளியே வராதே,
உன்னை நிலா என்று நினைத்து விடுவார்கள் .
காதல்
உலகில் உள்ள அனைத்து கவிதையும் படித்த ஞாபகம்,
உன் பெயரை வாசித்த போது...!!
இன்னும் எத்தனைகாலம்
தண்ணீரும உறைகின்ற இந்தக்குளிரில்
என் மனமும் உறைந்ததுவோ
அத்துளுக்குளத்தில் மீன் பார்த்த
சிறுவனுக்குள் பூத்திருந்த வண்ணமலர்கள்
இந்திய நாட்டின் கோரவெயிலில்
கருகியதோ
மாறுகின்ற சூழலில்
மாறுபட்ட மனிதனாய்
இன்னும் எத்தனைகாலம்
எனக்குள் நானாக நான்
உனக்காக இருக்கவா..?
உனக்காக இருக்கவா..?
உன்னோடு இருக்கவா..?
என்றால்
உனக்கா எழுதிக் கொண்டு
உன்னோடு இருக்கவே
விரும்புகிறது மனசு
கனவு
உனது கனவு என்னவென்று
எனக்கு தெரியும் .
ஆனால் எனது கனவு
என்னவென்று உனக்கு தெரியுமா ?
அது நீதான் .
சுவர்
விதவை சுவர்கள்
சுமங்கலியாகும்
தேர்தல் வருவதால்
ஜனனத்தில் தோன்றி மரணத்தில்
ஜனனத்தில் தோன்றி மரணத்தில்
முடிவதுதான் வாழ்க்கை
அதிலே காதல் ஒரு வானவில்
எங்கோ ? எப்படியோ ?
வெயிலும் மழையும் சந்திக்கும்போது
தோன்றுகின்றது
எனக்கு மட்டும் ஒரு நப்பாசை- ஆம்
நம் காதல் மட்டும் வானவில்லாக
இருக்கக்கூடாதென்று
ஏனெனில் நானும் நீயும்
வெயிலும் மழையும் போல
வேறு வேறல்ல.
கற்றுக்கொடுக்கும்… காதல்
கற்றுக்கொடுக்கும்…
விட்டு கொடுப்பது எப்படி
விட்டுக்கொடுப்பதுதான்
காதல் என்று....
ஆனாலும் என் மனம் உன்னை விட்டு கொடுக்க மறுக்கிறது...
காதல் உதிக்க ஆரம்பிக்கிறது
நீ பிரிந்து
தூர மறையும் போதுதான்
காதல் எனக்குள்
உதிக்க ஆரம்பிக்கிறது
கொக்கு
ஒற்றைக்கால் தவம்புரியும்
முனிவன்
கொக்கு
கொக்கு
ஒற்றைக்கால் தவம்புரியும்
முனிவன்
கொக்கு
எண்ணித் துணிக
சிந்திக்க மறந்த காரணத்தால்,
சிந்திக்காது விட்டு,
நொந்து நு£லாகி
வெந்து வேலாகி
கந்தலாகி
கடமை மறந்து,
உம் வாழ்வை
துன்பத்திடம் கடன் தந்து
துயரத்தில் மூழ்கிய
சகோதரனே! சகோதரியே!
எண்ணிப் பாருங்கள்
வள்ளுவன் சொல்லை
எண்ணித் துணிக கருமம்...
என்னும் எழுச்சி மிகு
கருத்தை மனதிற்கொண்டு
எண்ணித் துணிந்திடுவீர்
இனியேனும்
சிந்தித்து நடந்திடுவீர்
புதுக்கவிதை
வெற்றிகள் உனக்கு
சிற்பங்கள் பரிசளிக்கலாம்
ஆனால்
தோல்விகள் மட்டுமே உனக்கு
உளிகள் வழங்கும்
என்பதை உணர்ந்து கொள்.
கண்ணே நானும் நீயும்
கண்ணே நானும் நீயும்
கவிதை பாட நேரமில்லை
எங்கோ தொலைந்துவிட்ட
என்னை தேடிக்கொண்டிருக்கிறேன்
நான் என்னை சந்தித்தால்
உன்னைத் தேடும் நான்
அவள் தான் அம்மா
ஒரு மலரை பறித்தேன்
அது என்னை பார்த்து சிரித்தது
பிறகு சொன்னது
“நீ என்னை பறிக்கும் முன்பே
நான் உன் மனதை பறித்து விட்டேன் ” என்று…
காதலர்களுக்கு குழந்தைத்தனமே அழகு
குழந்தைகளுக்கு
புன்னகை
அழகென்றால்
காதலர்களுக்கு
குழந்தைத்தனமே
அழகு
காதல் செய்
எதுவெல்லாம் உன்
உரிமைகள் என்பதை
தெரிந்து
கொள்வதற்காகவாவது
காதல் செய்.
எது கவிதை?
கவிதை !
எது கவிதை ?
நீயும் நானும் பேசிக்கொள்வது ?
பேசிக் கொண்டதை நீயும் நானும்
புரிந்துகொள்வது ?
எது கவிதை ?
நீயும் நானும் பேசிக்கொள்வது ?
பேசிக் கொண்டது உனக்கு மட்டுமே
புரிந்தது ?
எது கவிதை ?
நீ எழுதும் ஒவ்வொரு வார்த்தையும்
என்னை உறுத்திக் கொண்டால்
அது கவிதை ?
எது கவிதை ?
சொல்லத் தெரியவில்லை
சொல்ல அனுபவமில்லை
இதுதான் கவிதையென்று தெரியும் நேரம்
நீயும் நானும் இன்றைய இன்பமான
பொழுதுகளை இரைமீட்போம்