மனம் வர வில்லை
இரவு முழுவதும் அழுத என் கண்களுக்கு ,
விரல் மட்டு்மே ஆறுதல் சொல்ல வந்தது ,
மனம் வர வில்லை .
இதயங்கள்
கண்கள் சந்திக்கும்
இதயங்கள் இடம்மாறும்
காதலில் மட்டும்
காதல் என்பது
தப்பிக்க வழி இருந்தும் ,
தப்ப முடியாத சிறை சாலை .
மழை
ஒழுகாத கூரையும்
நனையாத படுக்கையும்
பசிக்காத வயிறும்
இருந்தால்
ரசிக்க வைக்கும்
எல்லா மழையும்.
மாவீரர்களே!
மாவீரர்களே !
உங்களின் கல்லறைகளில்
தமிழினம் தலை நிமிர்ந்து நிற்கிறது
வீரம் செறிந்தவன் தமிழன் என்று
உலகம் உணரச் செய்ததால்
உங்களின் கனவு நிச்சயம் நனவாகும்
அதற்கான நாட்களை மட்டும்
நாங்கள் எண்ணிக் கொண்டிருக்கிறோம்
உங்களைப் பெற்ற அன்னையர்
தம் மக்களை சான்றோர் எனக் கேட்ட
ஆர்ப்பா¤ப்பில்
வீரத்திலகங்களே !
நீங்கள் மரணித்தவர்கள் அல்ல
மானமுள்ள ஒவ்வொரு தமிழனுக்குள்ளும்
மரணித்து வாழ்பவர்கள்
நீ என் சுவாசம்
உன்னை நேசித்திருந்தால் மறக்கவோ
மறுக்கவோ செய்திருப்பேன் ஆனால்
நான் உன்னை சுவாசிக்கிறேன் ?
மறந்தாலும் மறுத்தாலும் மரணம் எனக்கே
கவலை
கைநிறைய பணக்கட்டு
மனம் நிறைய கவலை
வங்கி காசாளன் வீட்டில்
பிரிந்து விடுவோம்
நீ
எதை சொன்னாலும் அப்பிடியே
நம்பிவிடும் மூடன் நான்,
என்று தெரிந்துதான் சொன்னாயோ..?
இதயத்தில் திராவகம் வீசிய உணர்வை ஏற்படுத்திய
இரக்கமில்லாத...கொடூரமான...
அந்த
"பிரிந்து விடுவோம்" என்ற வார்த்தையை..??
எப்படி மறப்பேன் என் தாய் நிலத்தை?
எங்களின் தாய்நிலத்தை
அவ்வளவு இலகுவில் மறந்துவிடமுடியாது
காலங்கள் எத்தனை கடந்தாலும்
இந்த உடல்
கோலங்கள் எத்தனை கண்டாலும்
சொந்த மண்ணை மறந்திடமுடியாது
மறந்துவிடச் சொல்கிறாள் என் காதலி
கனடாவில் குடியேறிவிட்டோம்
கனடியனாய் வாழ்ந்திடுவோம்
வா என்கிறாள்
எனதருமைக் காதலியே
எதை மறந்துவிடச் சொல்கிறாய் ?
தை பிறந்தால் பட்டம் விட்ட நாட்களையா ?
அத்துளு வெளியில் பந்தடித்த நாட்களையா ?
கோயில் திருவிழாவில் அழகான
பெண்களைப் பார்த்து ஏங்கி நின்ற
நாட்களையா?
எதை மறந்துவிடச் சொல்கிறாய் ?
சொல்லடி பெண்ணே
எத்தனை காலமடி ?
இன்று நினைத்தாலும்
நெஞ்சம் இனிக்குதடி
எப்படி மறப்பேன்
என் தாய் நிலத்தை ?
அம்மா
என் தாய்க்கு எழுத படிக்க தெரியாதுதான்,
இருந்தாலும் எனக்காக,
ஒரு கவிதை எழுதினாள்
அதுதான் என் பெயர்.
என் கனவுகளில்
நீ
என் கனவுகளில்
தொடர்ந்து
வருவதாக உறுதி கொடுத்தால்....
நான் இனி
உறங்கினால்
கண் விழிக்கவே மாட்டேன்...!
காதலிப்பாயா?
மனம்
என் மனம்
எனக்குச் சொன்னது
உன்னில் உன்னைவிட அவள் அன்பு வைத்திருக்கிறாள் என்று
எண்ணிப் பார்த்தேன், புரியவில்லை
அதுதான் உன்னிடத்திலேயே கேட்டுவிட்டேன் – என்
காதல் கேள்வியை
துவக்கி வைத்தது ஒரு குழந்தை
ஓவியம் வரைய
நீர் வண்ணங்களைக்
கலக்கி வைத்திருந்தேன்.
தரையில் கொட்டி
துவக்கி வைத்தது
ஒரு குழந்தை.
காதல் துப்பாக்கி
உனது வார்த்தை ஒவ்வொன்றும்
என் இதயம் துளைக்கிறதே – ஏன்
நீ காதல் ஆயுதத்தால் சுட்டாயோ?
அழகு
உன் அழகுகளை பற்றி
நீ உன் வீட்டு
உயிரற்ற கண்ணாடியிடம் கேட்ப்பதைவிட...
உணர்ச்சி கவிஞன்...
என்னிடம் கேட்டால் சொல்லுவேன்
அதன் சுகமான இம்சைகளை...
ஏன் பிரிவு
பெண்ணே..
பிரிகிறேன் என்று எண்ணாதே
கனவில் வர
இப்போ உறங்கச் செல்கிறேன்
வழிகாட்டி
கருங்கூந்தல் காட்டுக்குள்
காணாமல் போன எனக்கு
கட்டெறும்புப் பாதை காட்டிய – அந்தக்
கண்களைப் பின் தொடர்ந்தேன்
நெடுந்தூரப் பயணத்தில்
களைத்துப் போன என் ஏக்கத்திற்கு
நீ விட்ட மூச்சுக் காற்று
புத்துணர்ச்சியாய் இருந்தது
அலைமோதிக் கொண்டிருந்த இதயத்திற்கு
என் உயிர்க் கப்பலை கரை சேர்த்தது
நீ சிந்தாமல் சிந்திய
ஒரு சொட்டுப் புன்னகை
தவறிப் போன கால்களுக்கு
வழி காட்டிய வட்ட நிலாவோடு
கிட்டப் பேச ஆசைப்பட்டு
எட்டி நடந்த என் கால்களுக்கு
முற்றுப் புள்ளி வைத்துவிட்டானே – அவளின்
மொட்டை அண்ணன்
பிரிவு
ஆயிரம் அடி தோண்டியும் கிடைக்காத தண்ணீர்,
ஒரு அடி நீ என்னை விட்டு நகர்ந்ததும்
உருவானது என் கண்ணில்...
வெட்கம்
உன்னை வெட்கபடுதுகிறேன் ..!
ஏன் தெரியுமா ..???
அழகுக்கே ,
அழகை கற்றுகொடுக்க ...!
சுவாசம்
காதலோடு
காற்றையும் சுவாசிக்கிறேன் ..!
காரணம்
உன் மூச்சு காற்று அதில்
கலந்து இருப்பதினால் ..!!